அடிச்சு தூக்குது சேல்.. வெறும் ரூ.12,000 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. OIS கேமரா.. 30W சார்ஜிங்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் பிச்சிக்கும்படியான டிஸ்கவுண்ட்டில் 16ஜிபி ரேம், 6000mAh பேட்டரி பேட்டரி, ஃபுஎல்எச்டிபிளஸ் டிஸ்பிளே, டூயல் ரியர் கேமரா போன்ற அம்சங்களுடன் பட்டையை கிளப்பும் டிசைன் கொண்ட மோட்டோ ஜி64 5ஜி (Moto G64 5G) போன் நம்ப முடியாத விலைக்கு கிடைக்கிறது.
இந்த பட்ஜெட்டிலும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ், குவாட் பிக்சல் டெக்னாலஜி, டர்போ சார்ஜிங், கொரில்லா கிளாஸ் புரொடெக்சன் போன்ற மற்ற அம்சங்களிலும் பின்னிப்பெடல் எடுக்கிறது. இந்த மோட்டோ ஜி64 5ஜி போனின் முழு அம்சங்கள், விலை மற்றும் உடனடி டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது பார்க்கலாம்.

மோட்டோ ஜி64 5ஜி அம்சங்கள் (Moto G64 5G Specifications): இந்த மோட்டோவில் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. இந்த கேமராவில் குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology) கொடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி மற்றும் 1080p வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது. நைட் விஷன் (Night Vision), டூயல் கேப்ச்சர் (Dual Capture), போர்ட்ராய்டு (Portrait) பீச்சர்கள் வருகின்றன. இந்த மோட்டோ ஜி64 போனில் 16 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த கேமராவில் அல்ட்ரா பிக்சல் டெக்னாலஜி (Ultra Pixel Technology) வருகிறது.
ஆட்டோ ஸ்மைல் கேப்ச்சர் (Auto Smile Capture) சப்போர்ட் உள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 புரொடெக்சன் (Corning Gorilla Glass 3 Protection) கொண்ட 6.5 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட எல்சிடி (LCD) டிஸ்பிளே மாடலாகும்.

மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 560 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டிருக்கிறது. ஆகவே, பட்ஜெட்டிலும் மிட்-ரேஞ்ச் குவாலிட்டி எதிர்பார்க்கலாம். இந்த மோட்டோவில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7025 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7025 6nm) சிப்செட் வருகிறது.
கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப மிட்-ரேஞ்ச் பர்ஃபாமென்ஸ் கொண்ட ஐஎம்ஜி பிஎக்ஸ்எம் 5 256 ஜிபியு (IMG BXM 8 256 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அப்டேட் கொண்ட ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது. அதேபோல 3 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட் வருகிறது.
மோட்டோவின் மை யுஎக்ஸ் (My UX) சப்போர்ட் வருகிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் ஆர்டருக்கு கிடைக்கிறது. மேலும், 8 ஜிபி ரேம் மாடலில் 8 ஜிபிக்கான டைனாமிக் ரேம் மற்றும் 12 ஜிபி ரேம் மாடலில் 12 ஜிபிக்கான டைனாமிக் ரேம் வருகிறது.
மேலும், 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு பயன்படுத்தலாம். இந்த மோட்டோ ஜி64 5ஜி போனில் 6000mAh பேட்டரி வருகிறது. 30W டர்போசார்ஜிங் கொண்டிருக்கிறது. IP52 ரெசிஸ்டன்ட், டால்பி அட்மோஸ், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வருகின்றன. இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டபோது, இதன் 8ஜிபி + 128ஜிபி மாடலின் விலை ரூ.14,999ஆக இருந்தது.
இப்போது, பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) வெறும் ரூ.13,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. மேலும், ரூ.1,650 மதிப்பில் உடனடி டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. இதை பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தி பெறலாம். ஆகவே, இந்த போனை 12,349 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். 4 கலர்களில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








