Home
Mobile

Flipkart சேல் வெளுக்குது.. ரூ.12,999 பட்ஜெட்ல 7000mAh பேட்டரி.. 30W பாஸ்ட் சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் கிரேட் ரிபப்ளிக் டே சேல் 2026 (Flipkart Great Republic Day Sale 2026) என்னும் சிறப்பு விற்பனையில் மேட்டோரோலா நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் நம்ப முடியாத மலிவு விலைக்கு கிடைக்கின்றன. இதில் மோட்டோ ஜி57 பவர் (moto g57 Power) ஸ்மார்ட்போன் 22 சதவீத தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. 7000mAh பேட்டரி, 30W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பீச்சர்கள் வருகின்றன.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 22 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.13,999 விலைக்கு கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.12,999 விலைக்கு இந்த மோட்டோ ஜி57 பவர் ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

Flipkart சேல் வெளுக்குது.. ரூ.12,999 பட்ஜெட்ல 7000mAh பேட்டரி.. மாடல்?

மோட்டோ ஜி57 பவர் அம்சங்கள் (moto g57 Power Specifications): 6.7 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை இந்த மோட்டோ ஜி57 பவர் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மேலும், ஃபுல் எச்டிபிளஸ் (Full HD+) ரெசொலூஷன், 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1050 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைத்துள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) பாதுகாப்பு உள்ளது.

120 Hz டச் சாம்பிளிங் ரேட், 392 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கொண்டுள்ளது. வாட்டர் டச் (Water Touch) மற்றும் டிஸ்பிளே கலர் பூஸ்ட் (Display Color Boost) கொடுத்துள்ளது. IP64 ரேட்டிங் கொண்ட வாட்டர் ரெசிஸ்டன்ட் (Water Resistant) மற்றும் எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) சர்டிபிகேஷன் கொண்ட மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டியை இந்த மோட்டோ ஜி57 பவர் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது.

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 6s Gen 4 4nm) சிப்செட் கொண்டுள்ளது. மேலும், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ் அப்டேட் மற்றும் 3 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்களை இந்த மோட்டோ ஜி57 பவர் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கொடுக்கப்பட்டு உள்ளது.

Flipkart சேல் வெளுக்குது.. ரூ.12,999 பட்ஜெட்ல 7000mAh பேட்டரி.. மாடல்?

50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைத்துள்ளது. மெயின் கேமராவுக்கு சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சார் கிடைக்கிறது. மேலும், ஆம்பியன்ட் லைட் சென்சார் (Ambient Light Sensor) மற்றும் பிளிக்கர் டிடெக்சர் (Flicker Detector) கிடைத்துள்ளது. செல்பீகள் மற்றும் வீடியோ கால்களுக்கு 1080p வீடியோ ரெக்கார்டிங் கொடுக்கப்பட்டு உள்ளது.

மேலும், 6X ஹை-ரெஸ் டிஜிட்டல் ஜூம், எலக்ட்ரானிக் வீடியோ ஸ்டெபிலைசேஷன், ஆடியோ ஜூம் போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. மேலும், நைட் விஷன் மோட், ஆட்டோ நைட் விஷன், லைவ் பில்டர்கள், ஆட்டோ ஸ்மைல் கேப்ச்சர் உள்ளிட்ட பீச்சர்களும் கிடைக்கின்றன. இந்த கேமராவில் 2K ரெசொலூஷனில் வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம்.

30W டர்போ ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7000mAh பேட்டரி கிடைக்கிறது. 8.60 எம்எம் தடிமன் மற்றும் 210 கிராம் எடை கொடுத்துள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கிடைத்துள்ளது. பான்டோன் ரெகாட்டா, பான்டோன் கோர்சேயர் மற்றும் பான்டோன் ப்ளூயிடிட்டி கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
22 Percent Discount on moto g57 Power With 50MP Camera in Flipkart Republic Day Sale 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X