முழுசா ரூ.3000 கட்.. கொட்டுது ஆர்டர்.. ரூ.13000 பட்ஜெட்ல OIS கேமரா.. 2TB மெமரி.. 6000mAh பேட்டரி.. எந்த போன்?
ஒரே நேரத்தில் விலை குறைப்பு மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் போன்ற சலுகைகளுடன் லோக்கல் பட்ஜெட்டில் மோட்டோ ஜி54 5ஜி (Moto G54 5G) போன் விற்பனைக்கு வந்துள்ளது. ஓஐஎஸ் கேமரா, ஃபுல்எச்டிபிளஸ் டிஸ்பிளே, 6000mAh பேட்டரி போன்ற அம்சங்களில் தட்டித் தூக்குகிறது.
மோட்டோ ஜி54 5ஜி அம்சங்கள் (Moto G54 5G Specifications): இந்த மோட்டோ போனில் 6.5 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு பாண்டா கிளாஸ் புரொடெக்சன் (Panda Glass Protection) கொண்ட எல்சிடி (LCD) டிஸ்பிளே மாடலாகும். 560 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

அதேபோல 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் (Touch Sampling Rate) கொண்டிருக்கிறது. இந்த மோட்டோவில் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு (ultra-wide) கேமரா வருகிறது.
இந்த வைடு கேமராவில் மேக்ரோ சப்போர்ட் வருகிறது. மெயின் கேமராவில் ஓஐஎஸ் (OIS) மற்றும் 1080p வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்டிருக்கிறது. 16 எம்பி செல்பீ ஷூட்டர் 1080p வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட்டுடன் வருகிறது. மை யுஎக்ஸ் (My UX) மற்றும் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) உள்ளது.
ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7020 6nm) சிப்செட் மற்றும் ஐஎம்ஜி பிஎக்ஸ்எம் 8 256 ஜிபியு (IMG BXM 8 256 GPU) கிராபிக்ஸ் சப்போர்ட் கொண்டிருக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது.

அதேபோல 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட்டும் விற்பனைக்கு வருகிறது. 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) வருகிறது. அதோடு டூயல் ஹைபிரிட் சிம் சிலாட் (Dual Hybrid SIM Slot) வருகிறது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) உள்ளது.
சைடு மவுண்டெட ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos), டூயல் மைக்ரோபோன்கள் (Dual Microphones) மற்றும் IP52 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) வருகிறது.
இந்த மோட்டோவில் 30W டர்போசார்ஜிங் (turbocharging) சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரியோடு 8.89 எம்எம் தடிமன் மற்றும் 192 கிராம் எடை கொண்டிருக்கிறது. டைப்-சி சார்ஜிங் கனெக்டிவிட்டி வருகிறது. அதோடு 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) சப்போர்ட் உள்ளது.
வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.3 (Buetooth 5.3), ஜிபிஎஸ் (GPS) வருகிறது. மிட்நைட் பிளாக் (Midnight Blue), மின்ட் கிரீன் (Mint Green) மற்றும் பேர்ல் ப்ளூ (Pearl Blue) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதன் 8ஜிபி + 128ஜிபி மாடலின் விலை ரூ.15,999ஆகவும், 12ஜிபி + 256ஜிபி மாடலின் விலை ரூ.18,999ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.
இப்போது, 8 ஜிபி மாடலுக்கு ரூ.2000 மற்றும் 12 ஜிபி மாடலுக்கு ரூ.3000 விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் 2 மாடலுக்கும் ஆக்சிஸ் பேங்க் கார்டுக்கு ரூ.800 கூடுதலாக டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. ஆகவே, 8 ஜிபி மாடலை வெறும் ரூ.13,299 பட்ஜெட்டில் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








