பிச்சிக்குது ஆர்டர்.. ரேட் கட்ல 3D டிஸ்பிளே.. 5500mAh பேட்டரி.. 80W பாஸ்ட் சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?
அமேசான் விற்பனையில் (Amazon Sale) நேரடி விலை குறைப்பு போக 3டி கர்வ்ட் டிஸ்பிளே, 5500mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50 எம்பி கேமரா கொண்ட ஐக்யூ இசட்9எஸ் ப்ரோ (iQOO Z9s Pro) ஆர்டர் செய்ய கிடைக்கிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் கொண்ட இந்த ஐக்யூ போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் தள்ளுபடி விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இப்போது, அமேசான் தளத்தில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.24,999ஆக இருக்கிறது. இந்த விலையிலும் குறிப்பிட்ட கிரெடிட் கார்டுகளுக்கு பேங்க் தள்ளுபடி கிடைக்கிறது. சொல்லப்போனால், இந்த 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.26,999ஆக இருக்கிறது. இப்போது, ரூ.2,000 விலை குறைப்பு போக வாங்க கிடைக்கிறது.

இந்த ஐக்யூ இசட்9எஸ் ப்ரோ போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்களும் கிடைக்கின்றன. ஆனால், இப்போது 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டுக்கு மட்டுமே விலை குறைப்பு கிடைக்கிறது. அதேபோல லக்ஸ் மார்பிள் (Luxe Marble) கலருக்கு இந்த விலை குறைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது.
3டி கர்வ்ட் டிஸ்பிளே டிசைன் (3D Curved Display Design) மட்டுமல்லாமல், மார்பிள் லைக் பேக் பேனல் டிசைன் மற்றும் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) கொடுக்கிறது. அதேபோல ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் வருகிறது. இப்போது, சிப்செட், பேட்டரி போன்ற பீச்சர்களை பார்க்கலாம்.

ஐக்யூ இசட்9எஸ் ப்ரோ அம்சங்கள் (iQOO Z9s Pro Specifications): இந்த ஐக்யூவில் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் கிடைக்கிறது. 16 எம்பி செல்பீ கேமராவை கொடுக்கிறது. சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882), ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கொடுக்கிறது. 6.77 (2392 x 1080 பிக்சல்கள்) டிஸ்பிளே உள்ளது.
இந்த அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவில் ஃபுல்எச்டி (FHD) ரெசொலூஷன், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 300Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. மேலும், எச்டிஆர்10பிளஸ் (HDR10+) சப்போர்ட் கொடுக்கிறது. அட்ரினோ 720 ஜிபியு (Adreno 720 GPU) மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 4என்எம் (Qualcomm Snapdragon 7 Gen 3 4nm) வருகிறது.
இதில் ஓஎஸ் மட்டும் ஒரு வருட பழையதாக இருக்கிறது. ஆகவே, ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மட்டுமே பெற்று கொள்ள முடியும். அதேபோல ஃபன்டச் ஓஎஸ் 14 (FuntouchOS 14) பேக் வருகிறது. 5500mAh பேட்டரி & 80W பாஸ்ட் சார்ஜிங் உள்ளது. 185 கிராம் எடை மற்றும் 7.99 எம்எம் தடிமன் உள்ளது. 5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோஎல்டிஇ உள்ளது.


Click it and Unblock the Notifications








