பொளக்குது விற்பனை.. ரூ.19000 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 64MP கேமரா.. 4600mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?
அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையில் (Amazon Great Freedom Festival Sale) 3டி கர்வ்ட் டிஸ்பிளே, சாம்சங் சென்சார் கேமரா, 4600mAh பேட்டரி, அமோலெட் பேனல் போன்ற பீச்சர்களை கொண்ட ஐக்யூ இசட்7 ப்ரோ 5ஜி (iQOO Z7 Pro 5G) போனுக்கும், சோனி சென்சார் கேமரா, 120W ஃபாஸ்ட் சார்ஜிங், லெதர் பேக் பேனல் கொண்ட ஐக்யூ நியோ 9ப்ரோ (iQOO Neo 9 Pro) 5ஜி போனுக்கும் நம்ப முடியாத டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.
ஐக்யூ இசட்7 ப்ரோ 5ஜி அம்சங்கள், விலை (iQOO Z7 Pro 5G Specifications Price): இந்த போனில் 6.78 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டி (FHD) ரெசொலூஷன், 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர்10பிளஸ் சப்போர்ட் உள்ளது.

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7200 4nm) சிப்செட், ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) பேஸ்டு ஃபன்டச்ஓஎஸ் 13 (FuntouchOS 13) வருகிறது. சாம்சங் ஜிடபிள்யூ3 (Samsung GW3) சென்சார் கொண்ட 64 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் வருகிறது. 16 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது.
இந்த ஐக்யூ இசட்7 ப்ரோ 5ஜி மாடலில் 4600mAh பேட்டரி மற்றும் 66W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வருகிறது. ப்ளூ லகூன் (Blue Lagoon) மற்றும் கிராஃபைட் மேட் (Graphite Matte) ஆகிய 2 கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.23,999 ஆக இருந்தது.
இப்போது, அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையில் ரூ.20,998 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இதுபோக ரூ.1000 கூப்பன் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.19,850 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போன்ஸ் கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த போனை வெறும் ரூ.19,850 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.
ஐக்யூ நியோ 9ப்ரோ அம்சங்கள், விலை (iQOO Neo 9 Pro Specifications Price): இந்த போனில் 6.78 இன்ச் (2800×1260 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 1.5K ரெசொலூஷன், 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், எச்டிஆர்10பிளஸ் (HDR10+), 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது.

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் ஜென் 2 4என்எம் மொபைல் (Octa Core Snapdragon 8 Gen 2 4nm Mobile) சிப்செட், ஆண்ட்ராய்டு 14 (Android 14) பேஸ்டு ஃபன்டச் ஓஎஸ் 14 (Funtouch OS 14) வருகிறது. சோனி ஐஎம்எக்ஸ்920 (IMX920) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரை வைடு ஆங்கிள் கேமரா வருகிறது.
16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த ஐக்யூ நியோ 9ப்ரோ போனில் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5160mAh பேட்டரி வருகிறது. இந்த மாடலை பீரி ரெட் (Fiery Red) மற்றும் கான்கியூரர் பிளாக் (Conqueror Black) ஆகிய 2 கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். ரெட் மாடலில் வேகன் லெதர் பேனல் வருகிறது.
இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.35,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இப்போது, அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையில் ரூ.33,998 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த விலையில் ரூ.2250 டிஸ்கவுண்ட் எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.31,748 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








