Home
Mobile

பொளக்குது விற்பனை.. ரூ.36,651 விலை குறைப்பு.. மட்ட ரேட்ல iPhone.. OIS கேமரா.. XDR டிஸ்பிளே.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தீபாவளி விற்பனையில் (Flipkart Diwali Sale) சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்பிளே, 2ஆவது ஜெனிரேஷன் சென்சார்-ஷிப்ட் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கேமரா, 15X டிஜிட்டல் ஜூமிங், ஆட்டோபோகஸ் செல்பீ ஷூட்டர், 15W மேக்சேப் வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களை கொண்ட ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro) போனுக்கு இதுவரையில் கிடைக்காத டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இப்போது, ரூ.36,651 விலை குறைப்பில் கிடைப்பதால், விற்பனை பொளந்து கட்டுகிறது. இந்த டிஸ்கவுண்ட் விவரங்கள் இதோ.

தீபாவளி விற்பனையில் ஐபோன் வாங்க வேண்டுமானால், அதிகப்படியான டிஸ்கவுண்ட் கிடைக்கும் இந்த ஐபோன் 15 ப்ரோ மாடலை ஆப்ஷனில் எடுக்கலாம். ஏனென்றால், ரூ. 1,34,900 பட்ஜெட்டில் வெளியான இந்த போனின் 128 ஜிபி வேரியண்ட் இப்போது வெறும் ரூ.98,249 பட்ஜெட்டில் கிடைக்கிறது. ஆகவே, ரூ.36,651 விலை குறைப்பில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

பொளக்குது விற்பனை.. ரூ.36,651 விலை குறைப்பு.. மட்ட ரேட்ல iPhone மாடல்!

ஐபோன் 15 ப்ரோ அம்சங்கள் (iPhone 15 Pro Specifications): இந்த ஐபோனின் கேமரா பீச்சர்கள் மூக்கில் விரல் வைக்கும்படி இருக்கிறது. போட்டோனிக் என்ஜின் (Photonic Engine), டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் சினிமாடிக் மோட் (Cinematic Mode) கொண்ட 48 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வருகிறது. இந்த கேமராவில் வீடியோவுக்காக ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் வருகிறது.

இதுபோக 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 12 எம்பி டெலிபோட்டோ கேமரா வருகிறது. 4K வீடியோ ரெக்கார்டிங், ட்ரூடோன் பிளாஷ், 6X ஆப்டிகல் ஜூமிங் மற்றும் 15X டிஜிட்டல் ஜூமிங் சப்போர்ட் உள்ளது. ரெடினா ஃபிளாஷ் கொண்ட 12 எம்பி ட்ரூடெப்த் செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த ஷூட்டரில் ஆட்டோபோகஸ், பிக்சல் போகஸ் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது.

டிஸ்பிளேவை பார்க்கையில், 120Hz ரெஃப்ரெட் ரேட் கொண்ட 6.1 இன்ச் (2556 × 1179 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே வருகிறது. இந்த சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் (Super Retina XDR) மாடலில் 1600 பீக் பிரைட்னஸ், எச்டிஆர் (HDR), ட்ரூ டோன் (True Tone), டைனாமிக் ஐலேண்ட் (Dynamic Island) பீச்சர் மற்றும் 460 பிபிஐ பிக்சல் டென்சிட்டி உள்ளது. டிஸ்பிளே புரொடெக்சன் இருக்கிறது.

பிரீமியம் டிஸ்பிளேவுக்கு கிடைக்கும் செராமிக் ஷீல்டு (Ceramic Shield) புரொடெக்சன் வருகிறது. இந்த ஐபோன் 15 ப்ரோ போனில் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி மெமரி கொண்ட 3 வேரியண்ட்கள் கிடைக்கின்றன. ஐஓஎஸ் 17 (iOS 17) கொண்ட சிக்ஸ்-கோர் ஏ17 ப்ரோ 3என்எம் (Six-Core A17 Pro 3nm) சிப்செட் மற்றும் 6 கோர் ஜிபியு (GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

இந்த ஐபோன் 15 ப்ரோவில் ஆக்சன் பட்டன் (Action Button) உள்ளது. சைலெண்ட் மோட் (Silent Mode), போகஸ் (Focus), கேமரா (Camera), டிரான்ஸ்லேட்11 (Translate11) உள்ளிட்ட கன்ட்ரோல்களை செய்து கொள்ளலாம். 15W மேக்சேப் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் யுஎஸ்பி சி ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட லித்தியம் ஐயான் பேட்டரி (Lithium-ion Battery) பேக் செய்யப்பட்டுள்ளது.

128 ஜிபி மெமி மாடலின் பட்ஜெட் ரூ. 1,34,900ஆக இருந்தது. பிளிப்கார்ட் தீபாவளி விற்பனையில் ரூ.1,03,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் ரூ.5,750 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு இந்த உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கும். ஆகவே, ரூ.98,249 பட்ஜெட்டில் இந்த ஐபோன் 15 ப்ரோ போனை வாங்கி கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
22 Percent Discount on iPhone 15 Pro With 48MP Camera in Flipkart Diwali Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X