Home
Mobile

அடிச்சு தூக்குது ஆர்டர்.. வெறும் ரூ.7,299 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 2TB மெமரி.. எந்த மாடல்?

இந்திய பட்ஜெட் ஸ்மார்ட்போன் பிரியர்களை தட்டித் தூக்கும்படியான விலையில், 50 எம்பி மெயின் கேமரா, 8 ஜிபி ரேம், 2 டிபி மெமரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங், 6000mAh பேட்டரி மற்றும் எச்டி பிளஸ் டிஸ்பிளே மட்டுமல்லாமல், குவாட் எல்இடி ரிங் டிசைனில் பிரீமியம் லுக் கொடுக்கும் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 பிளஸ் (Infinix Smart 8 Plus) போனானது, உடனடி டிஸ்கவுண்ட் உடன் கிடைக்கிறது. இந்த இன்பினிக்ஸ் போனின் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்கள் இதோ.

மேஜிக் ரிங் (Magic Ring) பீச்சர் கொண்ட ஃப்ளூயிட் பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே (Fluid Punch-Hole Display) டிசைன், ஆக்டா கோர் சிப்செட் மற்றும் விர்ச்சுவல் ரேம் போன்ற மற்ற பீச்சர்களிலும் இந்த போன் பட்ஜெட் பிரியர்களை மூக்கில் விரல் வைக்க செய்திருக்கிறது. ஆகவே, பட்ஜெட்டில் பக்கா பேக்கப் கொண்ட போனை தேடுவோருக்கு இது நல்ல ஆப்ஷனாகும்.

அடிச்சு தூக்குது ஆர்டர்.. ரூ.7299 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி மாடல்!

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 பிளஸ் அம்சங்கள் (Infinix Smart 8 Plus Specifications): இந்த இன்பினிக்ஸ் போனில் 6.6 இன்ச் (1612 x 720 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த பட்ஜெட் டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

மேலும், 180Hz டச் சாம்பிளிங் ரேட் இந்த டிஸ்பிளேவில் கிடைக்கிறது. இந்த போனில் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி வருகிறது. மேலும், 4 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் (Virtual RAM), 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டு கார்டு சிலாட் (micro SD Card Slot) மற்றும் டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) வருகிறது.

இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 பிளஸ் போனில் எக்ஸ்ஓஎஸ் 13 (XOS 13) மற்றும் ஆண்ட்ராய்டு 13 கோ எடிஷன் ஓஎஸ் (Android 13 Go Edition) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி36 12 என்எம் (Octa Core MediaTek Helio G36 12nm) வருகிறது. மீடியம் கேமிங் பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கலாம்.

இதேபோல ஐஎம்ஜி பவர்விஆர் ஜிஈ8320 ஜிபியு (IMG PowerVR GE8320 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த போனில் குவாட் எல்இடி ரிங் ஃபிளாஷ் (Quad LED Ring Flash) சப்போர்ட் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + ஏஐ லென்ஸ் (AI Lens) உடன் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது.

அடிச்சு தூக்குது ஆர்டர்.. ரூ.7299 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி மாடல்!

8 எம்பி செல்பீ ஷூட்டர் மற்றும் சைடு ஃபிங்கர்பிரிண்ட் (Side Fingerprint) பேஸ் ஃபாஸ்ட் அன்லாக் (Face Fast Unlock) சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் பக்கா பேக்கப் கொடுக்கும் 6000mAh பேட்டரி மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வருகிறது. இதுவொரு 4ஜி மாடலென்பதால் 4ஜி வோஎல்டிஇ சப்போர்ட் வருகிறது.

இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 பிளஸ் போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.7,799ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரூ.500 டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.7000 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது. ஆகவே, ரூ.7,200 பட்ஜெட்டில் வாங்கலாம். கேலக்ஸி ஒயிட், சைனி கோல்டு மற்றும் டிம்பர் பிளாக் ஆகிய கலர்களில் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
22 Percent Discount on Infinix Smart 8 Plus With 50MP Cam, 8GB RAM in Flipkart Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X