அடிச்சு புடிச்சு ஆர்டர்.. ரூ.13,499 பட்ஜெட்ல 108MP கேமரா.. BYBASS சார்ஜிங்.. 2TB மெமரி.. எந்த மாடல்?
108 எம்பி கேமரா, பைபாஸ் சார்ஜிங், 120Hz டிஸ்பிளே, 16 ஜிபி ரேம், டைமன்சிட்டி சிப்செட் மட்டுமல்லாமல், பிரீமியம் லெதர் பேக் பேனல் கொண்ட இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி (Infinix Note 30 5G) போனானது, கிடைக்காத தள்ளுபடியில் விற்பனையாகிறது.
இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி அம்சங்கள் (Infinix Note 30 5G Specifications): இந்த போனில் ஆல்-ரவுண்ட் ஃபாஸ்ட்சார்ஜிங் (All-Round FastCharge) சிஸ்டம் வருகிறது. 44W சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. வெறும் 5 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், 4.8 மணி நேரத்துக்கு காலிங் பேக்கப் கொடுக்கும்.

ரிவர்ஸ் சார்ஜிங் (Reverse Charging) சப்போர்ட் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், பைபாஸ் சார்ஜிங் (BYBASS Charging) டெக்னாலஜி வருகிறது. இந்த டெக்னாலஜி மூலம் கேமிங் விளையாடும்போது, சார்ஜ் செய்தாலும் பேட்டரி மட்டுமல்லாமல் நேரடியாக மதர் போர்டுக்கும் பவர் கொண்டு செல்லப்படுகிறது.
ஆகவே, பேட்டரி ஹீட் கன்ட்ரோல் மற்றும் டியூரபிலிட்டி மேம்படுத்தப்படுகிறது. பிரீமியம் பிளாட் டிஸ்பிளே டிசைன் கொண்டிருக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.78 இன்ச் (2460 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு எல்சிடி (LCD) பேனல் மாடலாகும்.
இந்த டிஸ்பிளேவில் 240Hz டச் சாம்பிளிங் ரேட், 580 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் ஐ-கேர் மோட் (Eye-care Mode) சப்போர்ட் வருகிறது. என்ஈஜி கிளாஸ் (NEG Glass) புரொடெக்சன் கொண்டிருக்கிறது. அல்ட்ரா கிளியர் இமேஜிங் சிஸ்டம் (Ultra-clear Imaging System) கொண்ட கேமரா வருகிறது.

108 எம்பி பிரைமரி கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் + ஏஐ லென்ஸ் (AI Lens) கொண்டிருக்கிறது. பிரைமரி கேமராவில் சாம்சங் எச்எம்6 (Samsung HM6) சென்சார் வருகிறது. சூப்பர் நைட் மோட் (Super Night Mode), ஸ்ட்ரீட் போட்டோகிராபி ஃபில்டர் (Street Photograph Filter), டூயல் வீடியோ (Dual Video) போன்ற பீச்சர்கள் வருகின்றன.
அதுமட்டுமல்லாமல், 2கே வீடியோ ரெக்கார்டிங் (2K Video Recording) சப்போர்ட் கொண்டிருக்கிறது. ஆகவே, கேமிங் பிரியர்களை கவரும் பேட்டரி சிஸ்டம் மட்டுமல்லாமல், இந்த பக்காவான டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) கேமரா பிரியர்களையும் கவருகிறது.
16 எம்பி செல்பீ ஷூட்டரானது, ஸ்கை ரீமேப் (Sky Remap), ஸ்டைல் மேக்கப் (Style Makeup) மற்றும் டூயல் வியூ வீடியோ போன்ற பீச்சர்களுடன் வருகிறது. இந்த சிஸ்டங்களுக்கு ஏற்ப மிரட்டலான பர்ஃபாமென்ஸ் கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6080 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6080 6nm) சிப்செட் வருகிறது.
ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் மீடியம் கேமிங் பர்ஃபாமென்ஸ் கொண்ட மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் வருகிறது. இந்த போனில் 8 ஜிபி ரேம் (8 ஜிபி ரேம் விர்ச்சுவல் ரேம்) + 256 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) பயன்படுத்தி கொள்ளலாம்.
ஜேபிஎல் (JBL) சப்போர்ட் கொண்ட டூயல் ஸ்பீக்கர்கள் (Dual Speakers) வருகிறது. மேஜிக் பிளாக் (Magic Black), இன்டர்ஸ்டெல்லர் ப்ளூ (Interstellar Blue) மற்றும் லெதர் பேனல் கொண்ட சன்செட் கோல்டு (Sunset Gold) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. IP53 ரெசிஸ்டன்ட் வருகிறது.
இந்த இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி போனின் விலை ரூ.14,999ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ரூ.1000 உடனடி டிஸ்கவுண்ட் உடன் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த டிஸ்கவுண்ட் ஐசிஐசிஐ, எஸ்பிஐ பேங்க் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.13,499 பட்ஜெட்டில் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








