ரூ.5,000ல் புதிய டியூவல் சிம் கார்டு லெமன் மொபைல்போன்

Posted By: Staff

ரூ.5,000ல் புதிய டியூவல் சிம் கார்டு லெமன் மொபைல்போன்
ரூ.5,000 விலையில் இரட்டை சிம் கார்டு பொருத்தும் வசதியுடன் புதிய தொடுதிரை மொபைல்போனை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக லெமன் மொபைல் நிறுவனம் அறிவித்துள்ளது.

மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் புகழ்வாயந்த பாஸ்ட்ராக் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் லெமன் பிராண்டு பெயரில் மொபைல்போன்களை விற்பனை செய்து வருகிறது.

அதிக தரம், கண்ணை கவரும் வடிவமைப்புடன் வரும் லெமன் மொபைல்போன்களுக்கு மார்க்கெட்டில் மவுசு கூடிக்கொண்டே வருகிறது. இந்த நிலையில், புதிய மொபைல்போனை லெமன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

லெமன் ஐடி-828 என்ற குறியீட்டு பெயரில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த மொபைல்போன் டியூவல் சிம் கார்டு பொருத்தும் வசதியுடன் 3.2 இஞ்ச் கொண்ட டச் ஸ்கிரீனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தவிர, 3.2 மெகாபிக்செல் கேமரா பொருத்தப்பட்டுள்ளதால், துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோ ரெக்கார்டிங்கை பெற முடியும். வீடியோ காலிங் வசதிக்காக 0.3 மெகாபிக்செல் விஜிஏ முகப்பு கேமராவும் பொருத்த்ப்பட்டுள்ளது.

மேலும், மல்டி டச் இமேஜஸ் வசதியை கொண்டிருப்பதால், படங்களை வரிசையாக ஸ்க்ரோல் செய்து பார்ப்பதற்கு எளிதாக இருக்கும்.

இயற்கை எழில் கொஞ்சும் பெரிய பரப்பு கொண்ட இடங்களை படமெடுக்கும் வசதிக்காக பனோரமா மோடு மற்றும், போட்டோ எடிட்டர் வசதிகளும் இருக்கின்றன. புளூடூத், மல்டி பார்மெட் ஆடியோ, வீடியோ ப்ளேயர், ப்ளேபேக் மற்றும் ரெக்கார்டிங்குடன் கூடிய எப்எம் ரேடியோ ஆகியவையும் இருக்கிறது.

ஜாவா மற்றும் ஷெல் அப்ளிகேஷன் சாப்ட்வேர் அப்லோடு செய்யப்பட்டுள்ளதால், இயக்குவதற்கு வெகு எளிதாக இருக்கும். ஃபேஸ்புக், ட்விட்டர், நிம்பூஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்குள் செல்வதற்கான பிரத்யேக வசதிகளும் உண்டு.

3.5 மணிநேர டாக்டைம், 250 மணிநேர ஸ்டான்ட்-பை மோடு கொண்ட 1,000எம்ஏஎச் பேட்டரி சிறப்பான ஆற்றலை கொண்டிருக்கும். லெமன் ஐடி-828 ரூ.5,000 விலையில் மார்க்கெட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot