Home
Mobile

நாய்ஸ் ரிடக்ஷன் தொழில்நுட்பம் கொண்ட போன்கள்: மேக்ஸ் அறிமுகம்

By Super
நாய்ஸ் ரிடக்ஷன் தொழில்நுட்பம் கொண்ட போன்கள்: மேக்ஸ் அறிமுகம்
டெல்லி: மொபைல்போனில் பேசிக்கொண்டிருக்கும்போது அருகிலிருந்து வரும் சப்தங்கள் மற்றும் கிராஸ்டாக் என்ற கூறும் குரல் குறுக்கீடுகளால் பல தொல்லைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்த தொல்லையிலிருந்து விடுபடும் வகையில் நாய்ஸ் ரிடக்ஷன் தொழில்நுட்பம் கொண்ட இரண்டு போன்களை மேக்ஸ் மொபைல்ஸ் அறிமுகம் செய்துள்ளது.

போன் பேசிக்கொண்டிருக்கும்போது அருகிலிருந்து வரும் சப்தங்கள் மற்றும் குரல் குறுக்கீடுகளை இந்த போனில் பொருத்தப்பட்டுள்ள ஸ்மால் அர்ரே மைக்ரோபோன்கள் பில்டர் செய்துவிடும். இதனால், எதிர்முனையில் இருப்பவர் குரலை மட்டும் தெளிவாக கேட்க முடியும்.

ஆர் யூ தேர்? பிரச்னைக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

காமோஷி என்ற வரிசையில் எம்எக்ஸ்-401 மற்றும் எம்க்யூ-601 என்ற குறியீ்ட்டு பெயர்களில் இந்த போன்கள் மாக்கெட்டில் அடியெடுத்து வைத்துள்ளன.

இதில், எம்எக்ஸ்-401 மாடல் டியூவல் சிம் கார்டு பொருத்தும் வசதியை கொண்டுள்ளது. ஆடியோ, வீடியோ பிளேபேக் மற்றும் அனைத்து ஆடியோ பார்மெட்டுகளிலும் இசையை கேட்கும் வசதியையும கொண்டிருக்கிறது.

2 மெகாபிக்செல் கேமரா, எப்எம் ரேடியோ மற்றும் யுனிவர்சல் ஜாக், கூடுதல் மெமரி கார்டு பொருத்தும் வசதிகள் இருக்கின்றன.

மேக்ஸ் எம்எக்ஸ்-401 சிறப்பம்சங்கள்:

டியூவல் சிம்

2.0 மெகாபிக்செல் கேமரா

2.4இஞ்ச் திரை

1500 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி

8ஜிபி வரை கூடுதல் சேமிப்பு திறன்

எப்எம் ரேடியோ

அடுத்து எம்க்யூ-601 போன் டியூவல் சிம் கார்டு மற்றும் கிவெர்ட்டி கீபேடுடன் வந்துள்ளது. அதிக பேட்டரி பேக்கப், மல்டிமீடியோ அம்சங்கள் என அனைத்து அம்சங்களிலும் இந்த போன் நிறைவாகவே இருக்கிறது. இதில், ஜாவா அப்லோடு செய்யப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகுதி.

மேக்ஸ் எம்க்யூ-601 சிறப்பம்சங்கள்:

வீடியோ ரெக்கார்டிங் கொண்ட 2.0மெகாபிக்செல் கேமரா

4.5மணிநேரம் டாக்டைம் கொண்ட 1000எம்ஏஎச் பேட்டரி

8ஜிபி வரை சேமிப்பு திறனை கூட்டலாம்

வயர்லெஸ் எப்எம் ரேடியோ

புளூடூத்

ஜாவா

காமோஷ் சீரிஸ் போன்கள் சவாலான விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. மேக்ஸ் எம்எக்ஸ்-401 போன் ரூ.2,833 விலையிலும், எம்க்யூ-601 போன் ரூ.2,970 விலையிலும் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X