Home
Mobile

புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை களமிறக்க எல்ஜி ஆயத்தம்

By Super
புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை களமிறக்க எல்ஜி ஆயத்தம்
எல்ஜி ஆப்டிமஸ் எல்டிஇ என்ற பெயரில் புதிய ஆன்ட்ராய்டு போனை எல்ஜி நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. இதில் அதிவேகத்தில் இயங்கும் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் டியூவல் கோர் கியூவல்காம் எம்எஸ்எம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.

எல்ஜி ஆப்டிமஸ் எல்இடி மொபைல் 4.5 இஞ்ச் பெரிய திரை வசதி கொண்டுள்ளது. இதில் எல்சிடி ஐபிஎஸ் டிஸ்ப்ளே வுடன் வந்துள்ள இந்த போன் 1280 X 720 பிக்ஸல் ரிசல்யூஷன் கொடுக்கும். இது டிஎல்என்ஏ வசதி கொண்ட எல்இடி மொபைல். இதில் வைபை, எம்எச்எல் மற்றும் 3ஜி காம்பாட்டிபிலிட்டி கொண்டது.

எல்ஜி ஆப்டிமஸ் எல்டிஇ மொபைலில் கூகுள் ஆன்ட்ராய்டு வி2.3.5 ஜின்ஜர்பிரீட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதில் இன்டர்நெட் டிவி வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதன் 1 ஜிபி வசதி இந்த எல்டிஇ மாடலை இன்னும் வேகமாக செயல்பட உதவுகிறது.

இதில் 8 மெகா பிக்ஸல் பிரைமரி கேமராவும், வீடியோ காலிங் வசதிக்காக 1.3 செகன்டரி மெகா பிக்ஸல் செகண்டரி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. இதன் 8 மெகாபிக்ஸல் கேமரா எச்டி 1080பி துல்லியத்தில் வீடியோ ரிக்கார்டிங் செய்யும்.

அடுத்த மாதம் இந்த மொபைலை மார்க்கெட்டிற்கு வரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்த மொபைலை முதலில் அமெரிக்கா மற்றும் கொரியாவில் வெளியிட எல்ஜி முடிவு செய்துள்ளது. இதன் விலை விபரம் இதுவரை தெரியவில்லை. இருப்பினும் எல்ஜி எல்டிஇ ஆப்டிமஸ் மொபைல் ரூ.18,000 விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X