Home
Mobile

ஐபோன்-5 மற்றும் மோட்டோ டிராய்டு பயோனிக்- ஒப்பீட்டு அலசல்

By Super
ஐபோன்-5 மற்றும் மோட்டோ டிராய்டு பயோனிக்- ஒப்பீட்டு அலசல்
நவீன வசதிகள் கொண்ட புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடனஅ ஐபோன்-5 மாடலை விரைவில் மார்கெட்டில் அறிமுகம் செய்ய உள்ளது ஆப்பிள் நிறுவனம். மார்க்கெட்டில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டு வாடிக்கையாளர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள மோட்டோரோலா டிராய்டு பையோனிக் ஸ்மார்ட்போனுக்கு ஐபோன்-5 கடும் போட்டியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு போன்களிலும் நவீன தொழில்நுட்ப வசதிகளை பெற்றிருந்தாலும், அதைப்பற்றிய முக்கிய அம்சங்களை இங்கு காணலாம்.

மோட்டோரோலா டிராய்டு பயோனிக் ஆன்ட்ராய்டு 2.3.4 ஜின்ஜர்பிரீட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை கொண்டுள்ளது. அதேவேளை, ஐபோன்-5 ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ்-5 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வரும் என்று தெரிகிறது.

மோட்டோ டிராய்டில் எச்டி ஸ்கிரீன் மற்றும் கொரில்லா கண்ணாடி திரையுடன் வந்துள்ளது. இதனால் எந்த விதமான கீறல்களும் விழாமல் மொபைலை பாதுகாத்துக் கொள்ள முடியும். இதே தொழில்நுட்பத்துடன் கூடிய திரையை ஐபோன்-5ம் கொண்டிருக்கும் என்பதை உறுதியாக கூறமுடியும்.

மோட்டோ டிராய்டில் 8 மெகாபிக்ஸல் கேமராவும், வீடியோ காலிங் வசதிக்காக முகப்பு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. ஐபோன்-5வை பொறுத்தவரை முந்தைய ஐபோன் மாடல்களில் உள்ளதுபோன்றே 8 மெகா பிக்ஸல் கேமராவுடன் வரும் என்று தெரிகிறது.

மோட்டோ டிராய்டு போனில் பிரீலோடட் ஆடோப் ப்ளாஷ் ப்ளேயர் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. தவிர, இதில் 32 ஜிபி சேமிப்பு திறன் கொண்டதாக இருப்பது குறிப்பிடப்பட வேண்டும். இதனால், அதிக தகவல்களை சேமிப்பு செய்து கொள்ள முடியும்.

ஐ போன் மொபைலில் 1080பி வீடியோ ரிக்கார்டிங் மற்றும் டியூவல் லெட் ப்ளாஷ் வசதி வழங்கப்பட்டுள்ளது.இந்த மாடல் இலகுவான எடை கொண்டுள்ளதால், கையாள்வது மிகவும் சுலபம். ஐபோன் மொபைலில் 4 ஜி காம்பாட்டிபிலிட்டியும் உள்ளது. இந்த 4 ஜி வசதி ஏடி மற்றும் டி நெட்வொர்க்கின் மூலமாகக் கிடைக்கிறது. மோட்டோ மொபைலில் 4 ஜி வசதி எல்டிஇ நெட்வொர்க்கை சப்போர்ட் செய்கிறது.

அனைத்து வசதிகளையும் ஒப்பிட்டு பார்க்கும்போது ஐபோன்-5, மோட்டோரோலா டிராய்டு பயோனிக் இரண்டுமே ஒரே மாதிரியான வசதிகளைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இருந்தாலும், எது மிகவும் சிறந்தது என்பதை அறிந்துகொள்ள ஐபோன்-5 மாடலின் விலை அறிவிக்கும் வரை நாம் காத்திருக்க வேண்டும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X