Home
Mobile

15K பட்ஜெட்ல Gunனு மாதிரி ஒரு Phoneனு! பேக் பேனலில் 210 LED லைட்ஸ், 24GB ரேம், 108எம்பி கேம், 6000mAh பேட்டரி!

பேக் பேனலில் 210 எல்இடி லைட்கள் உடனான மினிஎல்இடி லைட்டிங் செட்டப், 24ஜிபி மொத்த ரேம், 108எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 6000எம்ஏஎச் பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களுடன்.. ரூ.15,000 பட்ஜெட்டில் புதிய டெக்னோ 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

என்ன மாடல்? டிரான்ஸ்ஷன்ஹோல்டிங்ஸின் (Transsion Holdings) துணை நிறுவனமான டெக்னோ, அதன் போவா சீரிஸின் கீழ் டெக்னோ போவா 6 ப்ரோ 5ஜி (Tecno Pova 6 Pro 5G) என்கிற புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது. மிட்-ரேன்ஜ் பட்ஜெட் விலையில் வரும் இந்த டெக்னோ மாடலை ஒரு நல்ல கேமிங் ஸ்மார்ட்போன் என்றும் கூறலாம்.

15K பட்ஜெட்ல Gunனு மாதிரி ஒரு Phoneனு! பேக் பேனலில் 210 LED லைட்ஸ்!

ஏனென்றால் இது மீடியாடெக் டைமன்சிட்டி 6080 (MediaTek Dimensity 6080) சிப்செட், 12ஜிபி வழக்கமான ரேம் + 12ஜிபி விர்ச்சுவல் ரேம் என மொத்தம் 24ஜிபி ரேம், 70W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6,000mAh பேட்டரி, டால்பி அட்மாஸ் ஸ்பேஷியல் சவுண்டிற்கான ஆதரவு போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது.

டெக்னோ போவா 6 ப்ரோ 5ஜி-யின் முழு அம்சங்கள்: இந்த ஸ்மார்ட்போன் ஹைஓஎஸ் 14 (HiOS 140 கொண்டு இயங்குகிறது. இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.78-இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளே 2160ஹெர்ட்ஸ் PWM டிம்மிங் மற்றும் லோட் ப்ளூ லைட் உமிழ்வுகளுக்கான TUV ரைன்லேண்ட் சான்றிதழையும் கொண்டுள்ளது.

15K பட்ஜெட்ல Gunனு மாதிரி ஒரு Phoneனு! பேக் பேனலில் 210 LED லைட்ஸ்!

முன்னரே குறிப்பிட்டபடி, இது 6 என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 6080 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 12ஜிபி ரேம் மற்றும் 256ஐபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. பயன்படுத்தப்படாத ஸ்டோரேஜில் இருந்து கூடுதலாக 12ஜிபி விர்ச்சுவல் ரேம்-ஐ கடன் வாங்கி, இந்த ஸ்மார்ட்போனின் மொத்த ரேம்-ஐ 24ஜிபி ஆக விரிவாக்க முடியும்.

வெப்ப மேலாண்மைக்காக இந்த டெக்னோ 5ஜி ஸ்மார்ட்போனில் மொத்தம் 2,7342 மிமீ குளிரூட்டும் பகுதியை கொண்டுள்ளது. இ-ஸ்போர்ட்ஸ் ப்ரோ ஆபரேஷன் இன்ஜின் மற்றும் கேமிங்கிற்கான 4டி வைப்ரேஷன் சென்ஸும் இதில் அடங்கும்.

15K பட்ஜெட்ல Gunனு மாதிரி ஒரு Phoneனு! பேக் பேனலில் 210 LED லைட்ஸ்!

கேமராக்களை பொறுத்தவரை, இதில் 108 மெகாபிக்சல் மெயின் சென்சார் உடனான ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. முன்பக்கத்தில் எல்இடி ஃபிளாஷ் உடனான 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. மேலும், டால்பி அட்மாஸ் ஸ்பேஷியல் சவுண்ட்டிற்கான ஆதரவுடன் வரும் முதல் டெக்னோ ஸ்மார்ட்போனான இதன் பேக் பேனலில் 210 எல்இடிகளுடன் டைனமிக் மினிஎல்இடி லைட்ஸ் செட்டப்பும் உள்ளது.

இதன் மினிஎல்இடி லைட்ஸ் செட்டப்பை, உங்களுக்கு வரும் வாய்ஸ் கால்கள், ஸ்மார்ட்போனின் பவர் ஸ்டேட்டஸ், நீங்கள் விளையாடும் கேம்ஸ் மற்றும் கேட்கும் ம்யூசிக் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு ஏற்றபடி கஸ்டமைஸ் செய்யலாம். பேட்டரியை பொறுத்தவரை இது 70W சார்ஜிங் மற்றும் 10W ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவுடன் 6,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

டெக்னோ நிறுவனத்தின் கூற்றுப்படி , இந்த பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பமானது வெறும் 20 நிமிடங்களில் பூஜ்ஜியத்தில் இருந்து 50 சதவீதத்திற்கும், 50 நிமிடங்களில் 100 சதவிகிதத்திற்கும் பேட்டரியை நிரப்பும். மேலும் இந்த்ஸ் மார்ட்போனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 11 மணி நேரத்திற்கும் மேலான கேமிங், 14 மணிநேர வீடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் 31 மணி நேரத்திற்கும் அதிகமான காலிங் நேரத்தை வழங்கும்.

விலை மற்றும் விற்பனை விவரங்கள்: பார்சிலோனாவில் நடக்கும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2024 (Mobile World Congress 2024) நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள டெக்னோ போவா 6 ப்ரோ 5ஜியின் இந்திய அறிமுகம் (India Launch), இந்த பிப்ரவரி மாதமே நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனின் சரியான விலை நிர்ணயம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் இது ரூ.15,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்சம் ரூ.20,000 க்குள் தான் இருக்கும். ஏனென்றால் கடந்த ஆண்டு வெளியான டெக்னோ போவா 5 ப்ரோ மாடலானது ரூ.14,999 க்கு விற்பனை செய்யப்படுகிது.

Best Mobiles in India

English summary
210 LED Lights 24GB RAM 108MP Camera 6000mAh Battery Tecno Pova 6 Pro 5G Launched Specs Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X