Home
Mobile

மிரட்டி விட்டாப்ல பிளிப்கார்ட்.. மட்ட ரேட்ல Samsung 5G போன்.. 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் ஃப்ரீடம் சேல் 2026 (Flipkart Freedom Sale 2026) தொடங்கிவிட்டது. இந்த சேலில் சாம்சங் ஸ்மார்ட்போன்கள் அடிமட்ட விலைக்கு கிடைக்கின்றன. இதில் 6000mAh பேட்டரி, 50 எம்பி கேமரா மட்டுமல்லாமல், வீகன் லெதர் பேனல் கொண்ட மாடலாக வெளியாகிய சாம்சங் கேலக்ஸி எப்70இ 5ஜி (Samsung Galaxy F70e 5G) மாடலும் தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது.

இப்போது, பிளிப்கார்ட் விற்பனையில் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை 21 சதவீத தள்ளுபடி போக ரூ.14,999ஆக இருக்கிறது. மேலும், தேர்வு செய்யப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,225 தள்ளுபடி கிடைக்கிறது. இதையும் பெற்றால், ரூ.13,774 விலைக்கு வாங்கி கொள்ளலாம். லைம்லைட் கிரீன் மற்றும் ஸ்பாட் லைட் ப்ளூ கலர்களில் கிடைக்கிறது.

மிரட்டி விட்டாப்ல பிளிப்கார்ட்.. மட்ட ரேட்ல Samsung 5G போன்.. மாடல்?

இந்த கலர்களுடன் வீகன் லெதர் பேனல் கொடுத்துள்ளது. ஆகவே, பட்ஜெட் விலையில் சாம்சங் போன்ற பிராண்ட் நிறுவனத்தில் வீகன் லெதர் பேனல் வேண்டுமானால், இந்த சாம்சங் கேலக்ஸி எப்70இ 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். கேமரா, பேட்டரி, சிப்செட் மற்றும் டிஸ்பிளே போன்ற மற்ற பீச்சர்களும் பட்டையை கிளப்பும்படி இருக்கின்றன.

சாம்சங் கேலக்ஸி எப்70இ 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F70e 5G Specifications): பட்ஜெட்டில் பக்கா பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் கொண்ட மாடலாக இருக்கிறது. மேலும், ஒன் யுஐ 8.0 (One UI 8.0) பேஸ்டு ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட்டு உள்ளது.

ரூ.15,000 பட்ஜெட்டுக்குள் கிடைத்தும், 6 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்களை கொடுத்து இருக்கிறது. அதேபோல 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களையும் பெற்று கொள்ளலாம். இந்த பட்ஜெட்டுக்கு கிடைக்கும் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு பேக் செய்யப்பட்டு இருக்கிறது. ஆகவே, அதற்கு ஏற்ப அவுட்புட் இருக்கும்.

இந்த சாம்சங் கேலக்ஸி எப்70இ 5ஜி ஸ்மார்ட்போனில் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, பேட்டரி பேக்கபில் எந்த குறையும் இருக்காது. வீதன் லெதர் பேனல் மற்றும் பெரிய பேட்டரி இருப்பதால், ஸ்லிம் மாடலாக இருக்கவில்லை. 8.2 எம்எம் தடிமன் கொடுத்துள்ளது. 199 கிராம் எடையில் கிடைக்கிறது.

சாம்சங் ஸ்மார்ட்போன்களில் வழக்கமாக கிடைக்கும் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவுடன் 2 எம்பி டெப்த் கேமரா கொடுக்கப்பட்டு இருக்கிறது. மெயின் கேமராவுக்கு ஆட்டோ போகஸ் (Auto Focus) சப்போர்ட் மட்டுமல்லாமல், ஃபுல்எச்டி (FHD) வீடியோ ரெக்கார்டிங் மற்றும் 10x ஜூமிங் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 8 எம்பி செல்பீ கேமரா உள்ளது.

இந்த விலைக்கு ஏற்ப IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கிடைக்கிறது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) மற்றும் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom Ported Speaker) உள்ளது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் டைப்-சி போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது.

Best Mobiles in India

English summary
21 Percent Discount on Samsung Galaxy F70e 5G in Flipkart Freedom Sale 2026 Check Offer Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X