Home
Mobile

வெளுக்குது ஆர்டர்.. ரூ.11,874 க்கு Samsung 5ஜி போன்.. 5000mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி எப்16 5ஜி (Samsung Galaxy F16 5G) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட்டுடன் அறிமுகம் செய்யப்பட்ட இந்த சாம்சங் கேலக்ஸி எப்16 5ஜி ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி, அமோலெட் டிஸ்பிளே, 50 எம்பி கேமரா உள்ளிட்ட பீச்சர்கள் வருகின்றன. முழு பீச்சர்கள் மற்றும் தள்ளுபடி விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இப்போது, பிளிப்கார்ட் விற்பனையில் 21 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி வேரியண்ட் வாங்கி கொள்ள கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.625 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.11,874 பட்ஜெட்டில் இந்த சாம்சங் கேலக்ஸி எப்16 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். ரூ.5,500 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை உள்ளது.

வெளுக்குது ஆர்டர்.. ரூ.11,874 க்கு Samsung 5ஜி போன்.. 5000mAh பேட்டரி!

சாம்சங் கேலக்ஸி எப்16 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F16 5G Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட்டை இந்த சாம்சங் கேலக்ஸி எப்16 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மேலும், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொடுத்து இருக்கிறது. ஒன் யுஐ 6.0 (One UI 6.0) கிடைத்துள்ளது.

இந்த பட்ஜெட்டில் மற்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் எதிர்பார்க்க முடியாதபடி 6 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்களை கொடுத்து இருக்கிறது. மேலும், 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களையும் கொடுத்து இருக்கிறது. 4 ஜிபி ரேம் வேரியண்ட் மட்டுமல்லாமல், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் உள்ளது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் உள்ளது.

இதுபோக 1.5 டிபி மெமரிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (micro SD Card Slot) கொடுக்கப்பட்டு உள்ளது. 6.7 இன்ச் (1080 x 2340 பிக்சல்கள்) இன்பினிட்டி யூ சூப்பர் அமோலெட் (Infinity U Super AMOLED) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் இந்த சூப்பர் அமோலெட் டிஸ்பிளேவுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது.

ஓஎஸ் அப்டேட்டை போலவே கேமரா பீச்சரும் பட்டையை கிளப்புகிறது. ஏனென்றால், 50 எம்பி மெயின் கேமரா + 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) இந்த ஸ்மார்ட்போனுக்கு கிடைத்துள்ளது. ஆட்டோ போகஸ் கொடுத்து இருக்கிறது. வீடியோ கால்கள், செல்பீகளுக்காக 13 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது.

25W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரியை இந்த சாம்சங் கேலக்ஸி எப்16 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. இந்த பேட்டரியுடன் 7.9 எம்எம் தடிமன் கொடுத்து இருக்கிறது. 192 கிராம் எடை கொண்டுள்ளது. ஓரளவுக்கு ஸ்லிம் பாடி மற்றும் லைட் வெயிட் மாடலாகவும் இருக்கிறது. பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom Ported Speakers) கிடைத்து இருக்கின்றன.

சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Dingerprint Sensor) மற்றும் டைப்-சி ஆடியோவை கொடுத்துள்ளது. 5ஜி மற்றும் டூயல் 4ஜி வோஎல்டிஇ கனெக்டிவிட்டி உள்ளது. வை-பை 801.11 ஏசி, ப்ளூடூத் 5.3 சப்போர்ட் உள்ளது. பிளிங் பிளாக் (Bling Black), வைபிங் ப்ளூ (Vibing Blue) மற்றும் கிளம் கிரீன் (Glam Green) ஆகிய கலர்களில் வாங்கி கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
21 Percent Discount on Samsung Galaxy F16 5G With 4GB RAM in Flipkart Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X