அமேசான் அதிருது.. வெறும் ரூ.16,999 போதும்.. AI கேமரா.. 1TB மெமரி.. 33W சார்ஜிங்.. எந்த போன்?
அமோலெட் டிஸ்பிளே, 1டிபி மெமரி சப்போர்ட், டிரிபிள் ரியர் கேமரா, 33W சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பக்கா அம்சங்களை கொண்ட ரெட்மி நோட் 12 5ஜி (Redmi Note 12 5G) போன் அமேசான் தளத்தில் அசத்தலான தள்ளுபடியில் கிடைக்கிறது.
ரெட்மி நோட் 12 அம்சங்கள் (Redmi Note 12 Specifications): இந்த ரெட்மி நோட் போனில் 6.67 இன்ச் (1080×2400 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) பாதுகாப்பு கொண்ட அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவாகும்.

இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் (Android 12 OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 6என்எம் மொபைல் (Octa Core Snapdragon 4 Gen 1 6nm Mobile) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது.
அதோடு அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் எம்ஐயுஐ 13 (MIUI 13) சப்போர்ட் வருகிறது. இந்த ரெட்மியில் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 3 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.
அதுமட்டுமல்லாமல், 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) சப்போர்ட் வருகிறது. ஆகவே, ஹைபிரிட் டூயல் சிம் (Hybrid Dual SIM) சிலாட் மற்றும் மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சிலாட் வருகிறது. இந்த ரெட்மி நோட் 12 போனில் ஏஐ (AI) சப்போர்ட் கொண்ட டிரிபிள் ரியஸ் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது.

ஆகவே, 48 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. இந்த கேமராவில் 1080P வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது. அதோடு போர்ட்ராய்டு (Portrait Mode), ப்ரோ மோட் (Pro Mode), நைட் மோட் (Night Mode), எச்டிஆர் (HDR) போன்ற பீச்சர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
13 எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது. இந்த ரெட்மி நோட் 12 போனில் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) மற்றும் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) வருகிறது. அதோடு பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ரெட்மி போனில் IP53 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust/Splash) வருகிறது. 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இதற்கு டைப்-சி சார்ஜிங் சப்போர்ட் வருகிறது. இந்த பேட்டரியோடு 188 கிராம் எடை மற்றும் 7.98 தடிமன் கொண்டிருக்கிறது. ஆகவே, ஸ்லிம் டிசைனை எதிர்பார்க்கலாம்.
அதேபோல ஃப்ரோஷ்டட் க்ரீன் (Frosted Green), மேட் பிளாக் (Matte Black) மற்றும் மிஸ்டிக் ப்ளூ (Mystique Blue) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.18,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில், அமேசான் (Amazon) தளத்தில் தள்ளுபடியோடு விற்பனை செய்யப்படுகிறது.
எஸ்பிஐ பேங்க் கிரெட் கார்டுக்கு ரூ.2,000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதோடு ரூ.18,049 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. ஆகவே, இந்த ரெட்மி நோட் 12 5ஜி போனை வெறும் ரூ.16,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். வரும் ஜனவரி 4ஆம் தேதி ரெட்மி நோட் 13 சீரிஸ் வெளியாவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








