முரட்டு ஆஃபர்.. ரூ.5,001 குறைப்பு.. OLED டிஸ்பிளே.. 12GB ரேம்.. 120W சார்ஜிங்.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
டால்பி விஷன் கொண்ட ஓஎல்இடி டிஸ்பிளே, சோனி சென்சார் கொண்ட 50 எம்பி கேமரா, 120W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5800mAh பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் கொண்ட ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் போன்ற அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களுடன் வெளியான ரியல்மி ஜிடி 7 ப்ரோ (Realme GT 7 Pro) போனுக்கு நம்ப முடியாத விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்திய மார்கெட்டில் ரியல்மி ஜிடி 7 ப்ரோ போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.59,999ஆகவும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.65,999ஆகவும் இருக்கிறது. ஆனால், அமேசான் விற்பனையில் (Amazon Sale) இப்போது விலை குறைப்பு மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட்டில் ஆர்டருக்கு கிடைக்கிறது.

ஆகவே, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.54,998-க்கு கிடைக்கிறது. இந்த விலையில் ரூ.1650 கேஷ்பேக் பெற்று கொள்ளலாம். ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டுக்கு இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, பேங்க் டிஸ்கவுண்ட் இல்லாமலேயே ரூ.5,001 விலை குறைப்பில் வாங்கலாம். 16 ஜிபி வேரியண்ட் இப்போது ரூ.59,998 விலைக்கு கிடைக்கிறது.
ஆகவே, ரூ.6,001 விலை குறைப்பில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த ஹை-எண்ட் மாடலுக்கு ரூ.1,800 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இதற்கும் ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டுக்கு பயன்படுத்தி ஆர்டர் செய்ய வேண்டும். இந்த ரியல்மி ஜிடி 7 ப்ரோ போனின் பீச்சர்கள் அல்ட்ரா பிரீமியமாக இருக்கின்றன. அவற்றை இப்போது பார்ப்போம்.
ரியல்மி ஜிடி 7 ப்ரோ அம்சங்கள் (Realme GT 7 Pro Specifications): இந்த ரியல்மி போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு ரியல்மி யுஐ 6.0 (Ralme UI 6.0) கிடைக்கிறது. அல்ட்ரா பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி 3என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் எஸ்ஓசி (3nm Octa Core Snapdragon 8 Elite SoC) சிப்செட் பேக் செய்யபப்ட்டுள்ளது.
இந்த சிப்செட் பஃபாமென்ஸ் மட்டுமல்லாமல், கேமிங் பிரியர்களுக்கான அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கிராபிக்ஸ் கார்டு சப்போர்ட் கிடைக்கிறது. டிஸ்பிளேவில் சொல்லவே வேண்டியது கிடையாது, 6.78 இன்ச் (2780 × 1264 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) பிளஸ் டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் 6000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது.
மேலும், 2600Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் 2600Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் டிசி டிம்மிங் (DC Dimming) இதில் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கொண்ட பிரீமியம் டிரிபிள் ரியர் கேமரா செட்டப் கொடுக்கிறது.
மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்906 சென்சார், பெரிஸ்கோப் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்882 சென்சார் கிடைக்கிறது. இதுபோக 120X ஜூமிங் மற்றும் 16 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. மேலும், 5800mAh பேட்டரி மற்றும் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. IP68 ரெசிஸ்டன்ட் மற்றும் IP69 ரெசிஸ்டன்ட் வருவதால், அண்டர் வாட்டர் அவுட்புட் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








