பொளந்து கட்டுது விற்பனை.. வெறும் ரூ.11,499 போதும்.. 50MP கேமரா.. 12GB ரேம்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) 50 எம்பி சாம்சங் சென்சார் கேமரா, 12 ஜிபி ரேம், 2 டிபி மெமரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி, மினி கேப்சூல் டிஸ்பிளே போன்ற பட்ஜெட்ஜெட்டில் கிடைக்காத பீச்சர்கள் மட்டுமல்லாமல், 7.89 மிமீ அல்ட்ரா ஸ்லிம் டிசைனில் பிரீமியம் லுக் கொடுக்கும் ரியல்மி சி65 5ஜி (Realme C65 5G) போனானது, அறக்க பறக்கும் டிஸ்கவுண்ட் உடன் ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த போன் குறித்த விவரங்கள் முழு இதோ.
ரியல்மி சி65 5ஜி அம்சங்கள் (Realme C65 5G Specifications): இந்த ரியல்மியில் மினி கேப்சூல் (Mini Capsule) பீச்சர் கொண்ட 6.67 இன்ச் (1604 x 720 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 625 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. பிளாட் டிஸ்பிளே டிசைனில் மிட்-பிரீமியம் லுக் கொடுக்கிறது.

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு ரியல்மி யுஐ 5.0 (realme UI 5.0) வருகிறது. மாலி ஜி57 கிராபிக்ஸ் சப்போர்ட் உள்ளது. இந்த ரியல்மி சி65 5ஜி போனில் 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் வருகிறது.
4 ஜிபி ரேம் (4 ஜிபி டைனாமிக் ரேம்) + 64 ஜிபி மெமரி, 4 ஜிபி ரேம் (4 ஜிபி டைனாமிக் ரேம்) + 128 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் (6 ஜிபி டைனாமிக் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்ட மூன்று வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. மைக்ரோ எஸ்டி கார்டு சிலாட் மற்றும் டூயல் நானோ சிம் சிலாட் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ரியல்மி சி65 5ஜி போனில் சாம்சங் ஜேஎன்1 (Samsung JN1) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமராவுடன் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. இந்த கேமராவில் ஸ்ட்ரீட் போட்டோகிராபி ஃபில்டர்கள் (Street Photography Filters), டில்ட்-ஷிப்ட் போட்டோகிராபி (Tilt-shift Photography) போன்ற ரியல்மியின் பிரத்யேக பீச்சர்கள் வருகின்றன.
மெயின் கேமரா மட்டுமல்லாமல், செல்பீ ஷூட்டரிலும் மிட்-ரேஞ்ச் சென்சார் வருகிறது. ஆகவே, ஓம்னிவிஷன் ஓவி08டி10 (OmniVision OV08D10) சென்சார் கொண்ட 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த சி65 5ஜி போனில் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. டைனாமிக் பட்டன் வருகிறது.
ஃபாஸ்ட் சைடு ஃபிங்கர்பிரிண்ட் (Fast Side Fingerprint), பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom-ported Speaker), 3.5 மிமீ ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் IP54 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது. அல்ட்ரா ஸ்லிம் லுக்கில் 7.89 எம்எம் தடிமன் மட்டுமே வருகிறது. பேட்டரி உடன் 190 கிராம் எடை கொண்டிருக்கிறது.
பெதர் கிரீன் மற்றும் குளோயிங் பிளாக் கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த ரியல்மி சி65 5ஜி போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலானது, ரூ.12,499 பட்ஜெட்டில் அறிமுகமானது. இப்போது, பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.1000 உடனடி டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.7000 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கொடுக்கபடுகிறது. ஆகவே, ரூ.11,499 பட்ஜெட்டில் இந்த போனை வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








