Home
Mobile

அதிரி புதிரி ஆர்டர்.. 7000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. 80W சார்ஜிங்.. ஆஃபரில் OPPO 5ஜி போன்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் (flipkart) தளத்தில் ஒப்போ கே13 5ஜி (OPPO K13 5G) ஸ்மார்ட்போன் ஆனது சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 7000எம்ஏஎச் பேட்டரி, 50எம்பி கேமரா, ஸ்னாப்டிராகன் சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த ஒப்போ போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

தற்போது பிளிப்கார்ட் தளத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ கே13 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 21 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.17,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது.

அதிரி புதிரி ஆர்டர்.. ஆஃபரில் OPPO 5ஜி போன்.. எந்த மாடல்?

ஓப்போ கே13 5ஜி அம்சங்கள் (OPPO K13 5G Specifications): 6.67 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் ஓப்போ கே13 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2400 x 1080 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், பி3 கலர் காமட் உள்ளிட் பல அம்சங்கள் உள்ளன.

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 6 Gen 4 4nm) சிப்செட் உடன் ஒப்போ கே13 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு கலர்ஓஎஸ் 15 (ColorOS 15) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு அண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

அட்ரினோ 810 ஜிபியு (Adreno 810 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் உள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த ஒப்போ போனை நம்பி வாங்கலாம். பின்பு அண்டர் டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் (Under-display Fingerprint) சென்சார் வசதியுடன் இந்த ஒப்போ போன் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

IP65 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவுடன் ஓப்போ கே13 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) வசதிகளும் இந்த ஒப்போ போனில் உள்ளன.

50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் ஓப்போ கே13 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்தது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா இதில் உள்ளது. பின்பு 4கே வீடியோ பதிவு மற்றும் பல்வேறு AI அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

7000mAh பேட்டரி உடன் ஓப்போ கே13 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் இந்த போனில் உள்ளது. ப்ரிசம் பிளாக் (Prism Black), ஐசி பர்பிள் (Icy Purple) நிறங்களில் இந்த ஓப்போ கே13 5ஜி ஸ்மார்ட்போன் வாங்க முடியும். அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் பட்ஜெட் விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
21 Percent Discount on OPPO K13 5G in Flipkart sale check specification, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X