Home
Mobile

ஆளுக்கு 2 அள்ளி போடுங்க! வெறும் ரூ.5,899 போதும்.. 6.3-இன்ச் டிஸ்பிளே உடன் நோக்கியா போன்.. எந்த மாடல்?

எச்எம்டி குளோபல் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் அமேசான் தளத்தில் பிரபலமான நோக்கியா ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது தற்போது அமேசான் தளத்தில் நோக்கியா சி12 ஸ்மார்ட்போனுக்கு 21 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் முன்பு ரூ.7,499 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் ரூ.5,899 விலையில் இந்த அசத்தலான நோக்கியா சி12 ஸ்மார்ட்போனை வாங்க முடியும். மேலும் இந்த போனின் சிறப்பு அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

வெறும் ரூ.5,899 போதும்.. 6.3-இன்ச் டிஸ்பிளே உடன் நோக்கியா போன்..

நோக்கியா சி12 அம்சங்கள் (Nokia C12 specifications): நோக்கியா சி12 ஸ்மார்ட்போன் ஆனது 6.3-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 1600 × 720 பிக்சல்ஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக பெரிய டிஸ்பிளேவுடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

நோக்கியா சி12 ஸ்மார்ட்போன் ஆனது யுனிசாக் 9863ஏ1 எஸ்ஒசி (Unisoc 9863A1 SoC) சிப்செட் வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு ஆண்ட்ராய்டு 12 (கோ எடிஷன்) இயங்குதள வசதியைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த போனின் மென்பொருள் மற்றும் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம்.

4ஜிபி ரேம் (2ஜிபி ரேம் + 2ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual Ram)) மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த நோக்கியா சி12 ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இதில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது. அதேபோல் இந்த போனின் வடிவமைப்பு கூட மிகவும் அருமையாக உள்ளது.

8எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பி கேமரா வசதியைக் கொண்டுள்ளது புதிய நோக்கியா சி12 ஸ்மார்ட்போன் மாடல். பின்பு எல்இடி பிளாஷ் வசதியும் இதில் உள்ளது. ஆனால் இந்த போனில் 8எம்பி ரியர் கேமராவுக்கு பதிலாக 13எம்பி கேமரா கொடுத்திருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும். மேலும் இந்த போனில் சில கேமரா அம்சங்கள் உள்ளன.

3000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா சி12 ஸ்மார்ட்போன் மாடல். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 5 வாட்ஸ் சார்ஜிங் வசதியைக் கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது. ஆனால் இந்த போனில் கைரேகை ஸ்கேனர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெறும் ரூ.5,899 போதும்.. 6.3-இன்ச் டிஸ்பிளே உடன் நோக்கியா போன்..

4ஜி வோல்ட்இ,வைஃபை, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ், டூயல் சிம், 3.5எம்எம் ஆடியோ ஜாக், மைக்ரோ யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா சி12 ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் டார்க் சியான், Charcoal மற்றும் லைட் மிண்ட் நிறங்களில் இந்த புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக 4ஜி போன்களை கம்மி விலையில் வாங்க நினைக்கும் பயனர்கள் இந்த நோக்கியா 4ஜி ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். அதேபோல் எச்எம்டி குளோபல் நிறுவனம் இந்த ஆண்டு இறுதியில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
21 percent discount on Nokia C12 smartphone with 6.3-inch display on Amazon: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X