Home
Mobile

பிளிப்கார்ட் பிச்சுக்கும் பாருங்க.. 30W சார்ஜிங்.. 50MP கேமரா.. 256GB மெமரி.. ஆஃபரில் மோட்டோரோலா 5ஜி போன்..

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோரோலா ஜி84 5ஜி போனுக்கு பிளிப்கார்ட் தளத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளது.குறிப்பாக 50எம்பி டூயல் ரியர் கேமரா, ஸ்னாப்டிராகன் சிப்செட் மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இப்போது மோட்டோரோலா ஜி84 5ஜி போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகளைப் பார்க்கலாம்.

அதாவது பிளிப்கார்ட் (flipkart)தளத்தில் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா ஜி84 5ஜி போனுக்கு 21 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை ரூ.17,999 விலையில் வாங்கலாம். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகை வழங்கப்படும்.

பிளிப்கார்ட் பிச்சுக்கும் பாருங்க.. ஆஃபரில் மோட்டோரோலா 5ஜி போன்..

மோட்டோரோலா ஜி84 5ஜி அம்சங்கள் (Motorola g84 5G specifications): 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் 10-பிட் பிஒல்இடி ( 10-bit pOLED) டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்தது மோட்டோரோலா ஜி84 5ஜி போன். 2400×1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ( 120Hz refresh rate), 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ் ( 1300 nits brightness), 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் (360Hz touch sampling rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

தரமான ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 695 8என்எம் (Octa Core Snapdragon 695 8nm) சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவந்தது இந்த மோட்டோரோலா ஜி84 5ஜி ஸ்மார்ட்போன். இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் மற்றும் வேகம் வழங்கும்.

அதேபோல் அட்ரினோ 691எல் ஜிபியு ஆதரவும் (Adreno 619L GPU)இந்த போனில் உள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதள வசதியுடன் வெளிவந்தது இந்த போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும்.

ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) கொண்ட 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது மோட்டோரோலா ஜி84 5ஜி ஸ்மார்ட்போன் . மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டு வெளிவந்தது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

பிளிப்கார்ட் பிச்சுக்கும் பாருங்க.. ஆஃபரில் மோட்டோரோலா 5ஜி போன்..

30 வாட்ஸ் டர்போ சார்ஜிங் உடன் 5000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஜி84 5ஜி ஸ்மார்ட்போன். 3.5எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் (Dolby Atmos), டூயல் மைக்ரோஃபோன்கள் எனப் பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.

தூசி மற்றும் நீர் எதிர்ப்பு ஐபி54 (IP54) சான்றிதழ் பெற்றுள்ளது இந்த மோட்டோரோலா ஜி84 5ஜி ஸ்மார்ட்போன். 5ஜி (14 5ஜி பேண்ட்ஸ்), டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா போன்.

Best Mobiles in India

English summary
21 percent discount on Motorola g84 5G phone on Flipkart: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X