Home
Mobile

அதிர போகுது ஆர்டர்.. ரூ.10,999 பட்ஜெட்ல 50எம்பி கேமரா, LCD டிஸ்பிளே.. ஆஃபரில் Motorola 5ஜி போன்.. எந்த மாடல்?

மோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு போன்களும் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவருகின்றன. எனவே தான் இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு போனுக்கும நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் மோட்டோரோலா ஜி34 5ஜி (Motorola G34 5G) ஸ்மார்ட்போனுக் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது பிளிப்கார்ட் தளத்தில் மோட்டோரோலா ஜி34 5ஜிஸ்மார்ட்போன் மாடலுக்கு 21 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.10,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட் வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை மிகவும் கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

அதிர போகுது ஆர்டர்.. ஆஃபரில் Motorola 5ஜி போன்.. எந்த மாடல்?

மோட்டோரோலா ஜி34 5ஜி அம்சங்கள் (Motorola G34 5G Specifications): 6.5 இன்ச் எச்டிபிளஸ் (HD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே வசதியுடன் இந்த மோட்டோரோலா ஜி34 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் 1600 x 720 பிக்சல்ஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 269 பிபிஐ சப்போர்ட் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இதில் உள்ளன.

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 5ஜி எஸ்ஓசி (Octa-core Snapdragon 695 5G SoC) சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவந்தது மோட்டோரோலா போன். அதேபோல் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த போன். குறிப்பாக இந்த போன் சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்கும்.

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளன. ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தைக் கொண்டு வெளிவந்தது இந்த போன். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் இந்த போனுக்கு கிடைக்கும்.

மோட்டோரோலா ஜி34 5ஜி போன் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ (Macro) கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த ரியர் கேமராவில் குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology) பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் புல்எச்டி (FHD) வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கூட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த போன். மேலும் அல்ட்ரா-ரெஸ் (Ultra-Res), டூயல் கேப்ச்சர் (Dual Capture), நைட் விஷன் (Night Vision), மேக்ரோ விஷன் (Macro Vision), போர்ட்ராய்டு (Portrait), ப்ரோ மோட் (Pro Mode), ஆட்டோ எச்டிஆர் (Auto HDR), ப்ரோ மோட், பேஸ் ரீடச் (Face Retouch), ஆக்டிவ் போட்டோஸ் (Active Photos)
போன்ற அசத்தலான கேமரா அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

அதிர போகுது ஆர்டர்.. ஆஃபரில் Motorola 5ஜி போன்.. எந்த மாடல்?

5000mAh பேட்டரி கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஜி34 5ஜி ஸ்மார்ட்போன் . பின்பு இந்த பேட்டரி சார்ஜ் செய்ய 20W டர்போபவர் (TurboPower) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. டால்பி அட்மாஸ் (Dolby Atmos) மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் கொண்ட ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) இதில் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

IP52 தர வாட்டர் ரெபெல்லெண்ட் சப்போர்ட் , சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Facing Fingerprint Sensor), 5ஜி, டூயல் 4ஜி (Dual 4G), ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1), வை-பை 802 (Wi-Fi 802), ஜிபிஎஸ் (GPS) போன்ற பல வசதிகள் இந்த போனில் உள்ளன. மேலும் மோட்டோரோலா ஜி34 5ஜி ஸ்மார்ட்போன். சார்கோல் பிளாக் (Charcoal Black), ஐஸ் ப்ளூ (Ice Blue), ஓசன் கீரின் (Ocean Green) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
21 Percent Discount on Motorola G34 5G with 4GB Ram in Flipkart Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X