Home
Mobile

மளமளவென குறைந்த Motorola 5ஜி போன் விலை.. சோனி கேமரா.. 68W சார்ஜிங்.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் தற்போது மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் 5ஜி (Motorola Edge 50 Fusion 5G) ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சோனி கேமரா, 68W சார்ஜிங், ஸ்னாப்டிராகன் சிப்செட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

அதன்படி அமேசான் தளத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் மாடலுக்கு 21 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.20,519 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே ரூ.19,519 விலையில் இந்த போனை வாங்கிவிட முடியும்.

மளமளவென குறைந்த Motorola 5ஜி போன் விலை.. சோனி கேமரா.. எந்த மாடல்?

மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் 5ஜி அம்சங்கள் (Motorola Edge 50 Fusion 5G Specifications): 6.7 இன்ச் 3டி கர்வ்ட் பிஓஎல்இடி (3D Curved pOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் போன். மேலும் இந்த டிஸ்பிளேவில் 2400×1080 பிக்சல்கள், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) புரொடெக்சன்,1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 360Hz டச் சாம்பிளிங் ரேட், எச்டிஆர்10பிளஸ் (HDR10+) உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

தரமான ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 2 4nm) சிப்செட் உடன் மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இந்த போனில் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதி உள்ளது. குறிப்பாக இந்த போன் சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்கும்.

அதேபோல் சோனி எல்ஒய்டி 700சி (Sony LYT 700C) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் மாடல். இந்த போனின் கேமராவுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

மேலும் இதன் வைடு கேமராவில் மேக்ரோ ஆப்ஷன் வருகிறது. பின்பு இந்த போனின் ரியர் கேமராக்களில் ஆல்-பிக்சல் போகஸ் (All-Pixel Focus), அல்ட்ரா எச்டி (Ultra HD) வீடியோ ரெக்கார்டிங், அல்ட்ரா பிக்சல் டெக்னாலஜி (Ultra Pixel Technology), ஆடியோ ஜூம் (Audio Zoom), டூயல் கேப்ச்சர் (Dual Capture) உள்ளிட்ட அம்சங்களும் உள்ளன.

நைட் விஷன் (night vision), டில்ட் ஷிப்ட் (Tilt-Shift) பீச்சர்கள் இதன் ரியர் கேமராக்களில் உள்ளன. இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் போனில் 32 எம்பி செல்பி கேமரா வருகிறது. குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology), ஆட்டோ ஸ்மைல் கேப்ச்சர் (Auto Smile Capture) மற்றும் பேஸ் ரீடச் (Face Retouch) போன்ற பீச்சர்கள் இந்த செல்பி கேமராவில் உள்ளன.

மோட்டோரோலா எட்ஜ் 50 ப்யூஷன் ஆனது 5000mAh பேட்டரி மற்றும் 68W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது. பின்பு இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), IP68 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் வசதியும் இந்த போனில் உள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் பட்ஜெட் விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
21 Percent Discount on Motorola Edge 50 Fusion 5G with 8GB Ram in Amazon Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X