நவீன அம்சங்களுடன் எச்சிடி புதிய ஸ்மார்ட்போன் சச்சா

சச்சா என்ற பெயரில் வந்துள்ள இந்த போன் 2.6இஞ்ச் தொடுதிரை மற்றும் கிவெர்ட்டி கீபேடுடன் வந்துள்ளது.
நேரடியாக ஃபேஸ்புக் செல்லும் வகையில் ஏற்கனவே எச்டிசி அறிமுகம் செய்த சல்சா போன் போன்றே சச்சாவும் ஃபேஸ்புக் சமூக தளத்திற்குள் நேரடியாக செல்லும் வகையில் பிரத்யேக பட்டனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சச்சாவில் அனைத்து பார்மெட்டுகள் கொண்ட ஆடியோ, வீடியோ பைல்களை இயக்கலாம். மியூசிக் ப்ளேபேக்,வீடியோ பிளேயர் உள்ளி்ட்ட வசதிகளும் இருக்கிறது.
ஆட்டோ ஃபோகஸ், எல்இடி ப்ளாஷ் கொண்ட 5 மெகாபிக்செல் கேமராவும், வீடியோ காலிங் வசதிக்காக முகப்பு கேமராவும் இதில் உள்ளது.இதில், சேமிப்பு திறனை32ஜிபி வரை கூட்டிக்கொள்ளலாம். புளூடூத்,வைஃபை, எட்ஜ், ஜிபிஆர்எஸ் மற்றும் 3 ஜியில் 10 எம்பிபிஎஸ் வரை அதிவேக தகவல்பரிமாற்ற வசதிகளை பெற முடியும்.
ஆன்ட்ராய்டு 2.3 ஓஎஸ் கொண்ட இந்த போன் 800 மெகாஹெர்ட்ஸ் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இது மல்டி டாஸ்கிங் பல்முனை செயல்பாடுகளில் சிறப்பாகவும், அதிவேகமாகவும் செயல்படுகிறது.
எச்டிசி சச்சாவின் சிறப்பம்சங்கள்
ஃபேஸ்புக் செல்ல பிரத்யேக பட்டன்
ஆன்ட்ராய்டு ஓஎஸ்
3ஜி இணைப்பு
வைஃபை
சேமிப்பு திறனை 32ஜிபி வரை கூட்டிக்கொள்ளும் வசதி
800மெகாஹெர்ட்ஸ் பிராசஸர்
ஜாவா
ஸ்மார்ட்போன்களுக்கான அனைத்து வசதிகளும் நிறைந்த இந்த போன் ரூ.15,500 விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications