ஐபோன் 4 மற்றும் ஐபோன் 4 எஸ் ஸ்மார்ட்போன்களின் ஒப்பீட்டு பார்வை

By Super
|
ஐபோன் 4 மற்றும் ஐபோன் 4 எஸ் ஸ்மார்ட்போன்களின் ஒப்பீட்டு பார்வை
ஐபோன்-4, ஐபோன்-4எஸ் என்ற இரண்டு மொபைல்களையும் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டு அதில் வெற்றியும் கண்டுள்ளது. அந்த இரண்டு மொபைல்களும் 3.5 இஞ்ச் திரையையும், 960 X 640 திரை துல்லியத்தையும் கொண்டது. இந்த அகன்ற திரையினால் எதையும் தெளிவாகப் பார்க்க முடியும்.

ஐபோன்-4 மொபைலில் லெட் ப்ளாஷ் வசதியுடன் கூடிய 5 மெகா பிக்ஸல் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இது 720பி துல்லியத்தில் வீடியோ ரெக்கார்டிங் செய்ய உதவுகிறது.

வாடிக்கையாளர்களை அலைமோதச்செய்த ஐபோன்-4எஸ் மொபைல் 8 மெகா பிக்ஸல் கேமராவைக் கொண்டது. அதோடு 1080பி எச்டி துல்லியத்தில் வீடியோ ரெக்கார்ட் செய்கிறது. இதில் ஃபேஸ் டிடெக்ஷன், ஆட்டோ ஃபோக்கஸ், விஜிஏ கேமரா போன்ற வசதிகளும் உள்ளது.

ஐபோன்-4 மொபைலில் 1ஜிஎச்இசட் ஏஆர்எம் கார்டெக்ஸ்-ஏ8 பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. ஐபோன்-4எஸ் மொபைலில் டியூவல் கோர் கிராஃபிக்ஸ் தொழில் நுட்பம் கொடுக்கப்பட்டுள்ளது. பூளூடூத் வசதியிலும் ஐபோன்-4எஸ் மொபைல், ஐபோன்-4 மொபைலை மிஞ்சுகிறது.

ஐபோன்-4 எஸ் மொபைல் 4.0 புளூடூத் வசதியினைக் கொண்டுள்ளது. அதே ஐபோன்-4 மொபைல் 2.1 புளூடூத் வசதியினைக் கொண்டது. பூளூடூத் வசதியிலும் ஐபோன்-4எஸ் மொபைல், ஐபோன்-4 மொபைலை மிஞ்சுகிறது. இரண்டு மொபைல்களிலுமே வைபை வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

ஐபோன்-4 மொபைலில் 32 ஜிபி மெமரி கெப்பாசிட்டியும், ஐபோன்-4எஸ் மொபைலில் 64 ஜிபி கெப்பாசிட்டியும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகமான தகவல்களை பதிவு செய்ய முடியும்.

இந்த இரண்டு மொபைல்களிலுமே ஜிபிஎஸ் தொழில் நுட்பம், ஆக்ஸிலரோமீட்டர், பிராக்ஸிமிட்டி சென்ஸார் போன்ற வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஐபோன்-4, ஐபோன்-4எஸ் லித்தியம் ரிமூவபுல் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பேட்டரி வசதியிலும் ஐபோன்-4எஸ் மொபைல் கொஞ்சம் அதிகமான டாக் டைமை கொடுக்கிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X