2026 காதலர் தின சர்ப்ரைஸ்.. Apple-ன் புதிய என்ட்ரி லெவல் ஐபோன்.. 3 முக்கிய அப்கிரேட்கள் உடன்!
ஆப்பிள் (Apple) நிறுவனம்.. இந்த பிப்ரவரி மாதத்திலேயே.. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இன்னும் சில நாட்களில் தனது அடுத்த என்ட்ரி லெவல் ஐபோன் (Entry Level iPhone) மாடலை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது ஐபோன் 17இ மாடல் ஆகும்.
நினைவூட்டும் வண்ணம் ஆப்பிள் ஐபோன் 16இ (Apple iPhone 16e) மாடல் கடந்த 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி வெளியிடப்பட்டது, ஆக இந்த 2026 ஆண்டும் "அதே நேரத்தில்" ஐபோன் 17இ மாடலும் அறிமுகம் செய்யப்படலாம் என்று வதந்திகள் தெரிவிக்கின்றன.

இதுவரை கிடைக்கப்பெற்ற அறிக்கைகளின்படி, ஐபோன் 17இ மாடலில் அதிக மாற்றங்கள் இருக்காது. பெரும்பாலும் இது ஐபோன் 16இமாடலில் உள்ளதை போலவே - அதே டிஸ்பிளே, அதே சிங்கிள் ரியர் கேமரா, ஆக்ஷன் பட்டன் மற்றும் யுஎஸ்பி-சி போர்ட் ஆகியவற்றை தக்க வைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக வெளியான சில லீக்ஸ் - ஐபோன் 17இ மாடலில் டைனமிக் ஐலேண்ட் (Dynamic Island) இடம்பெறும் என்று தெரிவித்தன. இருப்பினும், ஜப்பானிய வலைப்பதிவான மேக் ஒட்டகாராவின் சமீபத்திய அறிக்கை, ஒரு "நம்பகமான மூலத்தை" மேற்கோள் காட்டி, வரவிருக்கும் என்ட்ரி லெவல் ஐபோன் ஆனது ஐபோன் 16இ மாடலில் இருப்பதை போலவே நாட்ச் டிசைனை தான் கொண்டிருக்கும் என்று கூறுகிறது.
இருப்பினும் அதே அறிக்கை, ஐபோன் 17இ மாடலில் மூன்று முக்கிய அப்கிரேட் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்றும் கூறுகிறது. முதலாவதாக - ஐபோன் 17இ மாடலில் ஆப்பிளின் ஏ19 சிப் பேக் செய்யப்படலாம். இது ஐபோன் 16இ மாடலில் உள்ள ஏ18 சிப் உடன் ஒப்பிடும் போது நல்ல மேம்படுத்தல் ஆகும். இதன் விளைவாக ஐபோன் 17இ மடலில் இன்னும் மேம்பட்ட செயல்திறன் கிடைக்கும்.
இரண்டாவதாக ஐபோன் 17இ மாடல் புதிய சி1எக்ஸ் மோடமை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது ஆப்பிள் ஐபோன் 16இ மாடலில் காணப்படும் சி1 மோடத்தை விட இரண்டு மடங்கு வேகமானது என்று கூறப்படுகிறது. மூன்றாவதாக ஐபோன் 17இ மாடல்ல வைஃபை 7 மற்றும் ப்ளூடூத் 6-ஐ ஆதரிக்கும் என்1 சிப்பும் இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது.
கடந்து ஆண்டு அறிமுகமான ஐபோன் 16இ மாடலின் விலை மற்றும் முக்கிய அம்சங்கள்: ஐபோன் 16இ மாடலின் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.59,900 க்கு அறிமுகமானது. முக்கிய அம்சங்களை பொறுத்தவரை ஐபோன் 16இ ஆனது ஃபேஸ் ஐடி உடனான 6.1-இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது ஆப்பிளின் ஏ18 சிப் மூலம் இயக்கப்படுகிறது.
கேமராக்களை பொறுத்தவரை ஐபோன் 16இ ஆனது சிங்கிள் 48எம்பி ஃப்யூஷன் ரியர் கேமராவுடன் வருகிறது, இது விரிவான ஹை ரெசல்யூஷன் புகைப்படங்களைப் பிடிக்கும் திறன் கொண்டது. இதன் கேமரா செட்டப் ஆனது 2எக்ஸ் டெலிஃபோட்டோ ஜூம் விருப்பத்தை வழங்குகிறது. இயல்பாக ஐபோன் 16இ ஆனது 24எம்பி புகைப்படங்களை தான் எடுக்கும், ஆனால் அதிக தெளிவுத்திறன் கொண்ட காட்சிகளுக்கு 48எம்பி மோட்-க்கு மாறலாம்.
இதன் கேமரா செட்டப்பில் போர்ட்ரெய்ட் மோட், நைட் மோட் மற்றும் எச்டிஆர் ஆகிய அம்சங்கள் உள்ளன முன்பக்கத்தில் ஐபோன் 16இ மாடலில் ஆட்டோஃபோகஸுடன் 12எம்பி ட்ரூ டெப்த் கேமரா உள்ளது. வீடியோ ரெக்கார்டிங்கை பொறுத்தவரை, ஐபோன் 16இ மாடல் ஆனது 4கே ரெக்கார்டிங்கை வினாடிக்கு 60 பிரேம்கள் வரை ஆதரிக்கிறது.
இதிலுள்ள டால்பி விஷன் ஆனது மேம்பட்ட கலர்கள் மற்றும் காண்ட்ராஸ்ட் உடன் உயர்தர வீடியோவை ரெக்கார்ட் செய்யவும் அனுமதிக்கிறது. கடைசியாக ஐபோன் 16இ மாடல் ஆனது 26 மணிநேர வீடியோ பிளேபேக்கை வழங்கும் என்று ஆப்பிள் கூறுகிறது. இந்த மாடல் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது மற்றும் சேட்டிலைட் வழியாக மெசேஜ்கள் மற்றும் எமர்ஜென்சி எஸ்ஓஎஸ்-களை அனுப்ப உதவும் செயற்கைக்கோள் இணைப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








