Home
Mobile

2026 புது வருஷத்துக்கு புது 5ஜி போன்.. ரூ.7000, ரூ.8000 பட்ஜெட்ல கிடைக்கும் பெஸ்ட் 5ஜி போன்கள்.. 5 ஆப்ஷன்ஸ்!

5ஜி அறிமுகமாகி ஆண்டுகள் ஆகியும் கூட, இன்னமும் 4ஜி ஸ்மார்ட்போனை வைத்து காலம் தள்ளிக்கொண்டு இருக்கும் பட்ஜெட் வாசிகளே.. ஏற்கனவே இருக்கும் பழைய 5ஜி மொபைலை ஓரங்கட்டிவிட்டு 2026 புத்தாண்டில் லேட்டஸ்ட் ஆக ஒரு புதிய 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என்று திட்டமிடும் மக்களே.. 100% இந்த கட்டுரை உங்களுக்கானது தான்!

இன்னும் சில வாரங்களில் இனிதே முடிய உள்ள 2025 இல் - பல நிறுவனங்கள் தத்தம் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தன. அவைகளில் பல மாடல்கள் பட்ஜெட் விலை பிரிவின் கீழ் வெளியாகின. அவைகளில் சில மாடல்கள் மட்டுமே செம்ம ஹிட் அடித்தன; இப்போது வரையிலாக நல்ல விற்பனையை பதிவு செய்து வருகின்றன. அவைகளில் ரூ.10,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வாங்க கிடைக்கும் டாப் 5 மாடல்களின் பட்டியல் இதோ:

ரூ.7000, ரூ.8000 பட்ஜெட்ல கிடைக்கும் பெஸ்ட் 5ஜி போன்கள்.. 5 ஆப்ஷன்ஸ்!

5. இன்ஃபினிக்ஸ் ஹாட் 60ஐ 5ஜி (Infinix Hot 60i 5G): தற்போது பிளிப்கார்ட் வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 4ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.9,999 க்கு வாங்க கிடைக்கிறது. இது ஷேடோ ப்ளூ, மான்சூன் கிரீன், பிளம் ரெட் மற்றும் ஸ்லீக் பிளாக் ஆகிய 4 கலர்களில் வாங்க கிடைக்கிறது.

4. லாவா போல்ட் என்1 5ஜி (Lava Bold N1 5G): தற்போது அமேசான் இந்தியா வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.7,499 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஷாம்பெயின் கோல்ட் மற்றும் ராயல் ப்ளூ ஆகிய கலர் ஆப்ஷன்க்ளில் விற்பனை செய்யப்படுகிறது.

3. ரெட்மி ஏ4 5ஜி (Redmi A4 5G): தற்போது அமேசான் இந்தியா வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.7,699 க்கு வாங்க கிடைக்கிறது. இதுஸ்பார்க்கிள் பர்பிள் மற்றும் ஸ்டார்ரி பிளாக் ஆகிய 2 கலர்களில் விற்பனை செய்யப்படுகிறது.

2. போக்கோ எம்7 5ஜி (Poco M7 5G): தற்போது பிளிப்கார்ட் வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.8,999 க்கு வாங்க கிடைக்கிறது. இது மின்ட் க்ரீன், ஓஷன் ப்ளூ மற்றும் சாட்டின் பிளாக் ஆகிய கலர்களில் விற்கப்படுகிறது.

1. சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி (Samsung Galaxy M06 5G): தற்போது அமேசான் இந்தியா வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.8,499 க்கு வாங்க கிடைக்கிறது. இது பிளேஸிங் பிளாக் மற்றும் சேஜ் க்ரீன் ஆகிய 2 கலர்களில் வாங்க கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 4 மேஜர் ஆண்ட்ராய்டு அப்டேட்கள் கிடைக்கும்
- 4 வருட செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும்
- 6.7-இன்ச் எச்டி பிளஸ் (720 x 1600 பிக்சல்ஸ்) டிஸ்பிளே
- மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட்
- 6ஜிபி வரை ரேம்
- அதிகபட்சமாக 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
- 50எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா யூனிட்
- 8எம்பி செல்பீ கேமரா
- பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார்
- சாம்சங் நாக்ஸ் வால்ட் அம்சம் (Samsung Knox Vault)
- சாம்சங் குவிக் ஷேர் (Samsung Quick Share)
- 25W ஃபாஸ்ட் சார்ஜிங் உடனான 5000mAh பேட்டரி

More from GizBot

Best Mobiles in India

English summary
2026 New Year Planning to buy new 5G Phone Under Rs 10000 Check Out These 5 Best Smartphones
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X