2026 வந்ததுமே 3 புதிய Nothing போன்கள்.. அதில் 2 Pro மாடல்கள்.. கலக்குறே கார்ல் பெய்!
கார்ல் பெய் (Carl Pei) தலைமையிலான நத்திங் (Nothing) நிறுவனம் மற்றும் நத்திங்கின் துணை பிராண்ட் ஆன சிஎம்எப் (CMF) நிறுவனம் ஆகிய இரண்டுமே 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் "பரபரப்பான" புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
எக்ஸ் (X) தளம் வழியாக பிரபல டிப்ஸ்டர் யோகேஷ் பிராரிடமிருந்து கிடைத்துள்ள சமீபத்திய தகவலின்படி நத்திங் நிறுவனம் ஆனது மூன்று புதிய நத்திங் மற்றும் சிஎம்எப் பிராண்டட் ஸ்மார்ட்போன்களில் பணியாற்றி வருகிறது. இந்த மூன்று மாடல்களுமே 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மூன்று ஸ்மார்ட்போன்களில், இரண்டு போன்கள் ஆனது ப்ரோ (Pro) என்ற பெயரை கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

எனவே ஒரு புதிய சிஎம்எப் போன் ப்ரோ மாடல், ஃபிளாக்ஷிப் நத்திங் போன் 3 ப்ரோ (Nothing Phone 3 Pro) அல்லது புதிய நத்திங் போன் 4ஏ ப்ரோ (Nothing Phone 4a Pro) ஆகிய ஸ்மார்ட்போன்களின் அறிமுகம் மிகவும் நெருக்காங்க உள்ளது என்கிற யூகங்கள் கிளம்பியுள்ளன.
நினைவூட்டும் வண்ணம் நத்திங் போன் 3ஏ சீரீஸ் கடந்த மார்ச் 2025 இல் அறிமுகமானது. எனவே நத்திங் போன் 4ஏ (Nothing Phone 4a) மற்றும் நத்திங் போன் 4ஏ ப்ரோ (Nothing Phone 4a Pro) ஆகியவைகள் வரவிருக்கும் 2 புதிய நத்திங் ஸ்மார்ட்போன்களாக இருக்கலாம்.
இந்த ஸ்மார்ட்போன்கள் ஸ்னாப்டிராகன் மற்றும் டைமன்சிட்டி சிப்செட்களின் கலவையை கொண்டிருக்கும் என்றும் மேற்குறிப்பிட்ட டிப்ஸ்டர் கூறி உள்ளார். ஆக நாம் பட்ஜெட் / மிட்ரேஞ்ச் அல்லது ஹை-எண்ட் டிவைஸ் ஆகிய இரண்டையும் எதிர்பார்க்கலாம். புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை தவிர, நத்திங் நிறுவனம் பல புதிய ஆக்சஸெரீஸ்களிலும் செயல்பட்டு வருவதாக பிரார் கூறுகிறார்.
நத்திங் போன் 4ஏ சீரிஸில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? முன்னதாக வெளியான ஒரு லீக் - நத்திங் போன் 4ஏ (Nothing Phone 4a) மற்றும் நத்திங் போன் 4ஏ ப்ரோ (Nothing Phone 4a Pro) ஆகிய 2 மாடல்களுமே ஸ்னாப்டிராகன் 7 சீரீஸ் சிப்செட்களால் இயக்கப்படலாம் என்கிறது
முன்னதாக டெவலப்பர் MlgmXyysd வழியாக டெலிகிராமில் வெளியிட்ட பதிவின்படி, நத்திங் போன் 4ஏ சீரீஸின் இரண்டு மாடல்களும் உருவாக்கத்தில் உள்ளன. ஸ்டாண்டர்ட் நத்திங் போன் 4ஏ மாடல் ஆனது ஸ்னாப்டிராகன் 7எஸ் சீரீஸ் சிப் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் ப்ரோ வேரியண்ட் வலுவான செயல்திறனுக்காக 7 சீரீஸ் சிப்செட் மூலம் இயக்கப்படலாம்.
இது துல்லியமாக மாறினால், நத்திங் போன் 3ஏ மற்றும் போன் 3ஏ ப்ரோ ஆகிய இரண்டும் ஒரே ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட்டை பேக் செய்வதால், தற்போதைய சீரீஸில் இருந்து ஒரு மாற்றத்தை குறிக்கும். சீரிஸில் உள்ள ஹைஎண்ட் வேரியண்ட் ஆன நத்திங் போன் 4ஏ ப்ரோ அதன் "முன்னோடியை" போலவே இசிம் ஆதரவை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் நத்திங் போன் 4ஏ சீரிஸில் உள்ள உள்ள இரண்டு மாடல்களுமே 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கூறிய ஆப்ஷனை கொண்ட நத்திங் போன் 4ஏ மாடலின் விலை $475 (தோராயமாக ரூ.43,000) ஆக இருக்கலாம். மறுகையில் உள்ள ப்ரோ மாடலின் விலை $540 (தோராயமாக ரூ.49,000) ஆக இருக்கலாம்.


Click it and Unblock the Notifications








