ரூ.3000 விலை குறைப்பு.. இந்த 3 Redmi 5ஜி போன்களில் 1-ஐ வாங்க இதுதான் சரியான நேரம்!
ஷாவ்மீ நிறுவனம் தனது ஹோலி விற்பனையின் (Xiaomi Holi Sale 2025) ஒரு பகுதியாக பல வகையான ரெட்மி ஸ்மார்ட்போன்கள் மீது தள்ளுபடியை அறிவித்துள்ளது. இதில் மிகவும் கவனிக்கத்தக்க வகையில் ரெட்மி நோட் 13 5ஜி சீரீஸின் கீழ் அறிமுகமான 3 மாடல்களுமே தற்போது ரூ.3000 வரையிலான தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கின்றன. ரெட்மி நோட் 14 5ஜி மீதும் கூட தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
ரெட்மி நோட் 13 சீரீஸ் மீதான தள்ளுபடி: ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.31,999-க்கு அறிமுகமானது. ஆனால் ஷாவ்மீ ஹோலி விற்பனையின் கீழ் ரூ.28,999-க்கு வாங்க கிடைக்கிறது. இதேபோல ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.25,999-க்கு பதிலாக ரூ.22,999-க்கு வாங்க கிடைக்கிறது. கடைசியாக ரெட்மி நோட் 13 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.17,999-க்கு பதிலாக ரூ.16,999-க்கு வாங்க கிடைக்கிறது.

ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இது டூயல் சிம் (நானோ) ஆதரவு, ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் ஸ்கின், கொரில்லா கிளாஸ் 3 உடனான 6.79-இன்ச் எப்எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 ஏஇ சிப்செட், 8ஜிபி வரையிலான ரேம் உடன் வருகிறது.
கேமராக்களை பொறுத்தவரை, இது சாம்சங் ஐசோசெல் எச்எம்6 சென்சார் மற்றும் எப்/1.75 அபெக்ஷர் உடன் கூடிய 108 மெகாபிக்சல் மெயின் கேமராவை கொண்டுள்ளது. இது 3x இன்-சென்சார் ஜூமிங்கை வழங்கும் என்று ரெட்மி நிறுவனம் கூறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமராவும் உள்ளது. முன்பக்கத்தில் 13 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.
கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை இது 5ஜி, 4ஜி, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ் மற்றும் 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக், யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது. பேட்டரியை பொறுத்தவரை இது 33W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட 5030mAh பேட்டரியை கொண்டுள்ளது. கடைசியாக இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனரையும் கொண்டுள்ளது.
ரெட்மி நோட் 14 5ஜி மீதான தள்ளுபடி: ரெட்மி நோட் 14 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.18,999-க்கு அறிமுகமானது. ஆனால் ஷாவ்மீ ஹோலி விற்பனையின் கீழ் இது ரூ.17,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதே போன்ற ஆபர் ரெட்மி நோட் 14 5ஜி ஸ்மார்ட்போனின் மற்ற ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் மீதும் கிடைக்கிறது.
ரெட்மி நோட் 14 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது டியுவி ரெயிண்லேண்ட் (TUv Rheinland) சான்றிதழ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உடனான 6.67-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமென்சிட்டி 7025 அல்ட்ரா சிப்செட் (MediaTek Dimensity 7025 Ultra) மூலம் இயக்கப்படுகிறது.
கேமராக்களை பொறுத்தவரை 50எம்பி ப்ரைமரி கேமரா + 2எம்பி இரண்டாம் நிலை லென்ஸ்-ஐ கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 16எம்பி செல்பீ கேமரா உள்ளது. கூடவே பிங்கர் பிரிண்ட் சென்சார், ஐபி64 ரேட்டிங் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ப்ரொடெக்ஷனையும் கொண்டுள்ளது. கடைசியாக இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5110mAh பேட்டரியை கொண்டுள்ளது.
ரெட்மி நோட் 14 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது கார்னிங் கொரில்லா விக்டஸ் 2, டியுவி ரெயிண்லேண்ட் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் ஓஎல்இடி கர்வ்டு டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமென்சிட்டி 70300 அல்ட்ரா சிப்செட் (Mediatek Dimensity 7300 Ultra) மூலம் இயக்கப்படுகிறது.
கேமராக்களை பொறுத்தவரை 50எம்பி ப்ரைமரி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைட் கேமரா + 8எம்பி மூன்றாம் நிலை லென்ஸ்-ஐ கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 20எம்பி செல்பீ கேமரா உள்ளது. வேகன் லெதர் பினிஷ் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போனில் ஐபி66, ஐபி67, ஐபி69 ரேட்டிங்களுக்கான ஆதரவும் உள்ளது. கடைசியாக இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5500mAh பேட்டரியை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








