Home
Mobile

ரூ.8000 மிச்சம்.. இதான் சான்ஸ்.. OnePlus மினி போன் மீது மெகா டிஸ்கவுண்ட்.. சுதந்திர தினம் சூப்பர்!

ஒன்பிளஸ் நிறுவனமானது 2025 ஆம் ஆண்டு இந்திய சுதந்திர தினத்தை (2025 Independence Day) கொண்டாடும் நோக்கத்தின் கீழ் அதன் ஒன்பிளஸ் இந்தியா வலைத்தளத்தில் பிரத்யேக இந்திபென்டென்ஸ் டே 2025 விற்பனையை (OnePlus Independence Day Sale 2025) அறிவித்து, அதன்கீழ் பல ஆபர்களை வழங்கி வருகிறது.

இந்த விற்பனையில், ஒன்பிளஸ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் மினி ஸ்மார்ட்போன் ஆக, அதாவது காம்பெக்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆக அறிமுகமான ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 13s) மாடல் மீது மெகா டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. அது என்ன டிஸ்கவுண்ட்? ஒன்பிளஸ் 13எஸ் மாடலின் ஆள் விலை என்ன? சுதந்திர தின ஆபர் விலை என்ன? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.

OnePlus மினி போன் மீது மெகா டிஸ்கவுண்ட்.. சுதந்திர தினம் சூப்பர்!

ஒன்பிளஸ் 13எஸ் மீதான மெகா டிஸ்கவுண்ட்: ஒன்பிளஸ் இந்தியா வலைத்தளத்தின்படி,ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போன் ஆனது அதன் அசல் எம்ஆர்பி விலையான ரூ.57,999 க்கு பதிலாக ரூ.54,999 க்கு பட்டியலிடப்பட்டு உள்ளது. கூடவே ரூ.5000 பேங்க் இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் கிடைக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு நீங்கள் ஐசிஐசிசி கிரெடிட் கார்டு நான் இஎம்ஐ (ICICI Credit Card Non EMI) அல்லது ஆர்பிஎல் கிரெடிட் கார்டு இஎம்ஐ (RBL Credit Card EMI) விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டியிருக்கும். இதன்கீழ் ரூ.5000 உடனடி தள்ளுபடியை பெற்று ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனை ரூ.49,999 க்கு வாங்க முடியும்.

இதோடு சேர்த்து, ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச டஃபல் பேக் மற்றும் ஹோல் பேட்டர்ன் கேஸ் (Duffel Bag and Hole-pattern Case) இலவசமாக கிடைக்கும் என்று ஒன்பிளஸ் இந்தியா வலைத்தளம் அறிவித்து உள்ளது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் ஒன்பிளஸ் இந்தியா வலைத்தளத்தை பார்வையிடவும்.

ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்:
- 6.32-இன்ச் 1.5கே எல்டிபிஓ ப்ரோஎக்ஸ்டிஆர் டிஸ்பிளே
- 1216 × 2640 பிக்சல்ஸ் ரெசல்யூஷன்
- 120 ஹெர்ட்ஸ் வரை ரெஃப்ரெஷ் ரேட்
- 1600 நிட்ஸ் வரை பீக் ப்ரைட்னஸ்
- 2,160 ஹெர்ட்ஸ் பிடபுள்யூஎம் டிம்மிங் ரேட்

- ஆக்வா டச் 2.0 தொழில்நுட்பம்
- ஈரமான அல்லது கையுறை அணிந்த கைகளால் ஸ்மார்ட்போனை இயக்க உதவும் க்ளோவ் மோட்
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான ஆக்சிஜன் ஓஎஸ் 15

- டூயல் ரியர் கேமரா செட்டப்
- எப் /1.8 அபெர்க்ஷர் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் ஆதரவுடன் 50-மெகாபிக்சல் சோனி எல்ஒய்டி-700 ப்ரைமரி சென்சார்
- எப்/2.0 அபெர்க்ஷர், 2எக்ஸ் ஆப்டிகல் ஜூம் மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் ஆதரவுடன் 50-மெகாபிக்சல் எஸ்5கேஜேஎன்5 டெலிஃபோட்டோ ஷூட்டர்

- 32 மெகாபிக்சல் செல்பீ சென்சார்
- 80W SuperVOOC சார்ஜிங் ஆதரவு உடன் 5850mAh பேட்டரி
- இன்-டிஸ்ப்ளே ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- கஸ்டமைஸ் செய்யக்கூடிய பிளஸ் கீ

அறியாதோர்களுக்கு பிளஸ் கீயை நீண்ட நேரம் அழுத்துவதன் மூலம் ரிங், வைப்ரேட் மற்றும் சைலண்ட் மோடுகளுக்கு இடையில் மாறலாம். கேமராவை திறப்பது, ஸ்க்ரீனில் உள்ள டெக்ஸ்ட்-ஐ மொழிபெயர்ப்பது அல்லது ஃப்ளாஷ்லைட்டை இயக்குவது போன்ற குவிக் அக்சஸ்-களுக்கும் இதை கஸ்டமைஸ் செய்யலாம். மேலும் ஏஐ பிளஸ்மைண்ட் ஸ்பேஸை ஸ்டார்ட் செய்ய முடியும். இந்த ஸ்மார்ட்போன் பிளாக் வெல்வெட், க்ரீன் சில்க் மற்றும் பிங்க் சாடின் 3 ஆகிய கலர்களில் வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
2025 Independence Day Sale Mega Discount on OnePlus Mini Smartphone OnePlus 13s
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X