Home
Mobile

ரூ.6000 நேரடி விலை குறைப்பு! பிச்சிக்கிட்டு பறக்கும் POCO போன் ஆர்டர்! 16GB ரேம், 108MP கேம், 5030mAh பேட்டரி!

7000mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரி உடன் போக்கோ (Poco) நிறுவனம் இந்தியாவில் அதன் லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆன போக்கோ எம்7 பிளஸ் 5ஜி (Poco M7 Plus 5G) மாடலை அறிமுகப்படுத்திய வேகத்தில், பழைய போக்கோ எம்6 பிளஸ் 5ஜி (Poco M6 Plus 5G) ஸ்மார்ட்போனின் விலை அடிமட்டத்திற்கு இறங்கியுள்ளது!

போக்கோ எம்6 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் அசல் விலை என்ன, இப்போது பிளிப்கார்ட் வழியாக கிடைக்கும் ஆபர் விலை என்ன? இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் அசல் எம்ஆர்பி விலை ரூ.15,999 ஆகும்.

ரூ.6000 நேரடி விலை குறைப்பு! பிச்சிக்கிட்டு பறக்கும் POCO போன் ஆர்டர்!

ஆனால் தற்போது பிளிப்கார்ட்டில் நடக்கும் சுதந்திர தின சிறப்பு விற்பனையின் (2025 Flipkart Independence Day Sale) ஒரு பகுதியாக ரூ.9,999 க்கு வாங்க கிடைக்கிறது. இது எந்த தள்ளுபடியும் இல்லாத, நேரடி விலை குறைப்பாகும். சுவாரசியமாக இந்த விலை குறைப்பு - போக்கோ எம்6 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் அனைத்து கலர் ஆப்ஷன்கள் மீதும் கிடைக்கிறது: கிராஃபைட் பிளாக், ஐஸ் சில்வர் மற்றும் மிஸ்டி லாவெண்டர்.

போக்கோ எம்6 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை போக்கோ எம்6 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன், 2,400 x 1,080 பிக்சல்ஸ் உடனான 6.79-இன்ச் புல் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

சிப்செட்டை பொறுத்தவரை இது ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 ஏஇ சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, இது 8ஜிபி வரை ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக விர்ச்சுவல் ரேம் அம்சம் வழியாக மேலும் 8 ஜிபி ரேம் என இந்த ஸ்மார்ட்போனின் மொத்த ரேம்-ஐ 16ஜிபி வரை அதிகரிக்கவும் முடியும்.

கேமராக்களை பொறுத்தவரை, போக்கோ எம்6 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது டூயல் ரியர் கேமரா யூனிட்டை கொண்டுள்ளது. அதில் 108-மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் (3எக்ஸ் இன்-சென்சார் ஜூம் ஆதரவு) மற்றும் 2-மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் உள்ளன. செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கு, முன்பக்கத்தில் 13 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை, போக்கோ எம்6 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 33W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,030mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை இது 5ஜி, 4ஜி LTE, டூயல்-பேண்ட் வைஃபை மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட்டை ஆதரிக்கிறது.

கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார் உடன் வருகிறது. மேலும் இது தூசி மற்றும் ஸ்பிளாஷ் எதிர்ப்பிற்கான ஐபி53 மதிப்பீட்டையும் கொண்டுள்ளது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் போக்கோ எம்6 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் மீது கிடைக்கும் இந்த விலை குறைப்பை பயன்படுத்தி கொள்ளவும்.

புதிய போக்கோ எம்7 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: இந்த ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.13,999 க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.14,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

இது வருகிற ஆகஸ்ட் 19 ஆம் தேதி முதல் மதியம் 12 மணிக்கு அக்வா ப்ளூ, கார்பன் பிளாக் மற்றும் குரோம் சில்வர் ஆகிய 3 கலர் ஆப்ஷன்களில் பிளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கும். அறிமுக சலுகைகளை பொறுத்தவரை HDFC, SBI அல்லது ICICI வங்கி அட்டைகளை பயன்படுத்தி வாங்கும் போது ரூ.1,000 உடனடி தள்ளுபடி அல்லது தகுதியான போன்களுக்கு கூடுதலாக ரூ.1,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
2025 Flipkart Independence Day Sale POCO M6 PLUS 5G gets Rs 6000 Price Cut
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X