Home
Mobile

நாங்க அவ்ளோ ஏமாந்தவங்களா? அவரசப்பட்டு iPhone SE 4-ஐ ஆர்டர் போட்றாதீங்க.. 5G ஆதரவில் கை வைத்த Apple நிறுவனம்!

டெக் ஆர்வலர்கள் மற்றும் ஆப்பிள் ரசிகர்கள் அனைவரும் பிப்ரவரி 19 நெருங்கி விட்ட குஷியில் உள்ளனர். இதற்கிடையில் அவர்கள் அனைவரையும் அப்செட் செய்யும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. நாளை, அதாவது பிப்.19 ஆம் தேதி நடக்கும் வெளியீட்டு நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் அதன் பட்ஜெட் விலை ஐபோன் ஆன ஐபோன் எஸ்இ 4 (iPhone SE 4) மாடலை றிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபோன் 15 சீரீஸ் (iPhone 15 Series) அல்லது ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ், ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro) மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max) ஆகிய பிளாக்ஷிப் (விலை உயர்ந்த) மாடல்களை வாங்கும் அளவிற்கு பட்ஜெட் இல்லாத வாடிக்கையாளர்கள் மலிவான விலையில் கிடைக்கும் ஆப்பிள் ஐபோன் எஸ்இ மாடல்களின் மீது ஆர்வம் காட்டுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை!

iPhone SE 4: 5G ஆதரவில் கை வைத்த Apple நிறுவனம்!

அப்படித்தான் ரூ.49,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் ஐபோன் எஸ்இ 4 மாடலுக்காக ஒரு பெரிய கூட்டமே காத்திருக்கிறது. அவர்கள் அனைவரையும் அப்செட் செய்யும் ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. டோங்கா (Donga) என்கிற தென் கொரிய வெளியீட்டின் ஒரு சமீபத்திய அறிக்கையின்படி, டிஎஸ்எம்சி (TSMC) ஆல் தயாரிக்கப்பட்ட ஆப்பிளின் முதல் தலைமுறை 5ஜி மோடமில், எம்எம்வேவ் 5ஜி தொழில்நுட்பத்திற்கான ஆதரவு இல்லை என்கிறது

இந்த மோடம் தான் ஐபோன் எஸ்இ 4 மாடலில் பயன்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த மோடமில் எம்எம்வேவ் 5ஜி தொழில்நுட்பத்திற்கான ஆதரவு (mmWave 5G Technology Support) இல்லாத பட்சத்தால், ஐபோன் எஸ்ஓ 4 மாடலின் நெட்வொர்க் திறன்கள் கட்டுப்படுத்தப்படலாம், குறிப்பாக எம்எம்வேவ் நெட்வொர்க்குகள் அதிகமாக உள்ள பகுதிகளில்!

அதாவது இன்னும் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் ஐபோன் எஸ்இ 4 மாடலில் 5ஜி ஆதரவு (5G Support) இருக்கும் ஆனால் அது ஐபோன் 16 சீரீஸில் உள்ளதை போல வேகமான 5ஜி ஸ்பீடை (5G Speed) வழங்காது; மாறாக சற்றே குறைவான 5ஜி ஸ்பீடை வழங்கும். நினைவூட்டும் வண்ணம் ஐபோன் 16 சீரீஸ் ஆனது குவால்காமின் ஸ்னாப்டிராகன் எக்ஸ்75 உடன் வருகின்றன. இதனுடன் ஒப்பிடும்போது ஆப்பிளின் மோடம் குறைவான கேரியர் ஒருங்கிணைப்பு அம்சங்களை வழங்குவதாக கூறப்படுகிறது.

இதன் விளைவாக, ஐபோன் எஸ்இ 4 மாடலானது அதன் பிளாக்ஷிப் "சகாக்களை" விட மெதுவான பதிவேற்றம் மற்றும் பதிவிறக்க வேகத்தை (Uploading and Downloading Speed) வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனமும் அதன் புதிய மோடம் தொழில்நுட்பத்திற்கான சோதனையை ஐபோன் எஸ்இ 4 மாடலில் செய்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஏனென்றால் இதுதான் ஆப்பிளின் மலிவான ஐபோன் சீரீஸ் ஆகும். இதில் சோதனைகளை செய்வதால் ஆப்பிளுக்கு பெரிய அளவிலான நஷ்டம் இருக்காது

ஆப்பிள் நிறுவனம் அதன் சொந்த 5ஜி மோடத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கையை பல ஆண்டுகளாக செய்து வருகிறது. ஆரம்பத்தில், இந்நிறுவனம் அதன் ஐபோன் 14 (iPhone 14) மற்றும் பின்னர் ஐபோன் 15 (iPhone 15) உடன் இந் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டது, ஆனால் இந்த மோடாமை உருவாக்குவதில் உள்ள தொழில்நுட்ப சவால்கள் அதன் வெளியீட்டை தாமதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இப்போது ஐபோன் எஸ்இ 4 மாடலில் அது சாத்தியமாக உள்ளது போல் தெரிகிறது. இதன் மூலம் வெளிப்புற சப்ளையர்களை சார்ந்திருப்பதை குறைப்பதற்கான முதல் படியை எடுக்க ஆப்பிள் தயாராக உள்ளது. மிங்-சி குவோ உள்ளிட்ட ஆய்வாளர்களின்படி கூற்றுப்படி, ஆப்பிள் நிறுவனம் அதன் மூன்றாம் தரப்பு மோடம்களை படிப்படியாக அகற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளது. ஐபோன் 17 ஏர் போன்ற எதிர்கால மாடல்களிலும் கூட ஆப்பிள் அதன் இன்டர்னல் தொழில்நுட்பத்தை தான் கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
2025 Feb 19 Launch iPhone SE 4 5G Speed Slower Than iPhone 16 Due to Apple Own 5G Modem
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X