Home
Mobile

சீன போன்களை சிதற விடும் Samsung.. 2 பக்கமும் 50MP கேமரா.. வீகன் லெதர்.. 5000mAh பேட்டரி, 5G.. என்ன விலை?

மிட்-ரேன்ஜ் விலைப்பிரிவின் கீழ் கிடைக்கும்.. அதாவது ரூ.25,000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் வாங்க கிடைக்கும் சீன நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை எல்லாம் ஓரங்கட்டும் படியான டிசைன் மற்றும் அம்சங்களுடன் சாம்சங் (Samsung) நிறுவனம் ஒரு புதிய ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது.

அதென்ன மாடல்? அது சாம்சங் கேலக்ஸி எஃப்55 5ஜி (Samsung Galaxy F55 5G) ஸ்மார்ட்போன் ஆகும். தென் கொரிய பிராண்ட் ஆன சாம்சங், இந்த ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. கூடவே பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளத்தில் இந்த ஸ்மார்ட்போனிற்கான ஒரு பிரத்யேக மைக்ரோசைட்டும் (Microsite) லைவ் ஆகியுள்ளது.

சீன போன்களை சிதற விடும் Samsung Galaxy F55 5G.. என்ன விலை?

அதன் வழியாக சாம்சங் நிறுவனத்தின் இந்த புதிய எஃப்-சீரிஸ் ஸ்மார்ட்போனின் டிசைன் மற்றும் கலர் ஆப்ஷன்களை (Design and Colour Options) பற்றி அறிந்துகொள்ள முடிகிறது. சாம்சங் கேலக்ஸி எஃப்55 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது வீகன் லெதர் பினிஷ் (Vegan Leather Finish) உடன் குறைந்தது 2 கலர் ஆப்ஷன்களில் - அப்ரிகாட் க்ரஷ் (Apricot Crush) மற்றும் ரைஸன் பிளாக் (Raisin Black) என்கிற 2 கலர்களில் வெளியாகவும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

டிசைனை பொறுத்தவரை, சாம்சங் நிறுவனம் இதை "2024 ஆம் ஆண்டில் வெளியாகும் மெலிதான மற்றும் இலகுவான வீகன் லெதர் போன்" (Slimmest and lightest vegan leather phone of the year) என்று கூறுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. கேமராவின் ஒவ்வொரு லென்ஸும் வட்ட வடிவிலான வளையத்தில் வைக்கப்பட்டுள்ளன. கேமரா வளையங்களுக்கு அடுத்ததாக பிளாஷ் லைட் உள்ளது.

இது ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 சிப்செட் (Snapdragon 7 Gen 1 SoC) கொண்டு இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக இது சாம்சங் கேலக்ஸி சி55 (Samsung Galaxy C55) ஸ்மார்ட்போனின் ரீபிராண்டட் வெர்ஷன் (Rebranded Version) ஆகவும் இருக்கலாம். நினைவூட்டும் வண்ணம் சாம்சங் கேலக்ஸி சி55 ஸ்மார்ட்போன் ஆனது கடந்த ஏப்ரல் மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), 1080 x 2400 பிக்சல்ஸ் உடனான 6.7-இன்ச் புல் எச்டி பிளஸ் சூப்பர் அமோஎல்இடி பிளஸ் டிஸ்பிளேவை (Super AMOLED Plus display ) கொண்டுள்ளது. இது ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 சிப்செட் கொண்டு இயங்குகிறது. கேமராக்களை பொறுத்தவரை 50 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமராக்கள், 50 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளது.

கடைசியாக 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் (Wired Fast Charging) கொண்ட 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் ரீபிராண்டட் வெர்ஷன் ஆன கேலக்ஸி எப்55 ஆனது சரியாக எந்த தேதியில் இங்கே அறிமுகம் செய்யப்படும் என்கிற வெளியீட்டு தேதியை (Launch Date in India) சாம்சங் இன்னும் அறிவிக்கவில்லை. எப்படி பார்த்தாலும் இது மே மாத நடுப்பகுதிக்குள் அறிமுகம் செய்யப்பட்டுவிடும்.

என்ன விலைக்கு வரும்? நம்பகமான டிப்ஸ்டர் வழியாக கிடைத்த தகவலின்படி, சாம்சங் கேலக்ஸி எஃப்55 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.26,999 க்கும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ 29,999 க்கும், ஹை-எண்ட் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ. 32,999 க்கும் அறிமுகம் செய்யப்படலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
2024 Slimmest Lightest Vegan Leather Phone Samsung Galaxy F55 5G India Launch Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X