1 இல்ல 2 இல்ல.. லேட்டஸ்ட்-ஆ வந்த 6 OnePlus போன்கள் மீதும் ஆபர்.. பட்டைய கிளப்பும் Amazon Summer SALE!
2024 ஆம் ஆண்டிற்கான அமேசான் கிரேட் சம்மர் சேல் (Amazon Great Summer Sale 2024) ஆனது மே 2 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு தொடங்குகிறது. அமேசான் ப்ரைம் மெம்பர்களுக்கான அணுகல் மே 2 நள்ளிரவு முதலே திறக்கப்பட்டுவிட்டது.
ஒருவேளை இந்த விற்பனையில், உங்களுடை கவனம் முழுவதும் ஸ்மார்ட்போன்கள் மீது கிடைக்கும்.. குறிப்பாக ஒன்பிளஸ் போன்கள் மீது கிடைக்கும் சலுகைகள் மீது மட்டுமே இருந்தால்.. அமேசானின் இந்த கிரேட் சம்மர் விற்பனையானது முழுக்க முழுக்க உங்களுக்கானது தான். ஏனென்றால் லேட்டஸ்ட் ஆக அறிமுகமான 6 ஒன்பிளஸ் மாடல்கள் மீது தள்ளுபடி மற்றும் சலுகைகள் கிடைக்கிறது.

1. ஒன்பிளஸ் 12 (OnePlus 12): இந்த ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.64,999 க்கு பதிலாக ரூ.62,999 க்கு வாங்க கிடைக்கும். இந்த தள்ளுபடியை பெற தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை நீங்கள் பயன்படுத்த வேண்டி இருக்கும். இந்த மாடலுக்கான நோ-காஸ்ட் இஎம்ஐ விருப்பமானது ரூ.9,686 முதல் தொடங்குகிறது.
2. ஒன்பிளஸ் 12ஆர் (OnePlus 12R): இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.39,999 க்கு பதிலாக ரூ.37,999 க்கு வாங்க கிடைக்கும். இது தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி கிடைக்கும் ரூ.1500 தள்ளுபடியையும் சேர்த்த ஆஃபர் விலையாகும். இந்த மாடலுக்கான நோ-காஸ்ட் இஎம்ஐ விருப்பமானது ரூ.3,139 முதல் தொடங்குகிறது.

3. ஒன்பிளஸ் 11ஆர் (OnePlus 11R): இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.35,999 க்கு பதிலாக ரூ.29,999 க்கு வாங்க கிடைக்கும். இது தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி கிடைக்கும் ரூ.1500 தள்ளுபடியையும் சேர்த்த ஆஃபர் விலையாகும். இந்த மாடலுக்கான நோ-காஸ்ட் இஎம்ஐ விருப்பமானது ரூ.1,898 முதல் தொடங்குகிறது.
4. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 (OnePlus Nord CE 4): சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.24,999 க்கு பதிலாக ரூ.22,999 க்கு வாங்க கிடைக்கும். இது தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி கிடைக்கும் ரூ.1500 தள்ளுபடியையும் சேர்த்த ஆஃபர் விலையாகும். இந்த மாடலுக்கான நோ-காஸ்ட் இஎம்ஐ விருப்பமானது ரூ.1,395 முதல் தொடங்குகிறது.

5.ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 (OnePlus Nord CE 3): சமீபத்தில் ரூ.26,999 இல் இருந்து ரூ.22,999 ஆக விலைக்குறைப்பை பெற்ற இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கும். இது தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி கிடைக்கும் ரூ.2,250 தள்ளுபடியையும் சேர்த்த ஆஃபர் விலையாகும். இந்த மாடலுக்கான நோ-காஸ்ட் இஎம்ஐ விருப்பமானது ரூ.1,284 முதல் தொடங்குகிறது.
6. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் (OnePlus Nord CE 3 Lite): இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.17,999 க்கு பதிலாக ரூ.16,249 க்கு வாங்க கிடைக்கும். ஆரம்பத்தில் இதே ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.19,999 க்கு வாங்க கிடைத்தது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
வேறு என்னென்ன ஸ்மார்ட்போன்கள் மீது தள்ளுபடி கிடைக்கும்? ஆப்பிள் ஐபோன் 13 (Applei Phone 13) ஆனது ரூ.47,999க்கு கிடைக்கும். சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி (Samsung Galaxy M15 5G) ஆனது ரூ.5,000 தள்ளுபடிக்குப் பிறகு ரூ.10,999 க்கு வாங்க கிடைக்கும். சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி (Samsung Galaxy M14 5G) ஆனது ரூ.9,499 க்கு வாங்க கிடைக்கும்.
ஐக்யூ இஸட்6 லைட் (iQoo Z6 Lite) ஆனது ரூ.10,999 க்கு வாங்க கிடைக்கும். சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி (Samsung Galaxy M34 5G) ஆனது அனைத்து தள்ளுபடிகளையும் சேர்த்து ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கும். கடைசியாக நோக்கியா ஜி42 5ஜி (Nokia G42 5G) ஆனது ரூ.9,499 க்கு வாங்க கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








