வெயிட்டிங்லயே வெறி ஏத்தும் ஒரு Smartphone என்றால்.. அது இந்த மாடல் தான்!

|

ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் "தாறுமாறாக" விற்பனையாகும் பட்சத்தில் அது பெஸ்ட் செல்லிங் ஸ்மார்ட்போன் பிராண்ட் (Best Selling Smartphone Brand) என்கிற அந்தஸ்தை எட்டும்!

அந்த அந்தஸ்தை எட்டிய பெரும்பாலான நிறுவனங்கள் - தத்தம் ரசிகர்களை - அடுத்த ஸ்மார்ட்போனிற்காக "வெயிட் செய்ய வைத்து வெறி ஏற்றுவதை" வழக்கமாக கொண்டுள்ளன!

வெயிட்டிங்லயே வெறி ஏத்தும் அடுத்த ஸ்மார்ட்போன்!

வெயிட்டிங்லயே வெறி ஏத்தும் அடுத்த ஸ்மார்ட்போன்!

இந்த 2022 ஆம் ஆண்டில் (இதுவரையிலாக) நல்ல விற்பனையை சந்தித்துள்ள ஒரு ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போனை பற்றித்தான் நாம் இங்கே விரிவாக பார்க்க உள்ளோம்!

அதென்ன பிராண்ட்? அதன் கீழ் அறிமுகமாகும் அடுத்த ஸ்மார்ட்போனின் மாடல் பெயர் என்ன? அது என்ன விலைக்கு அறிமுகமாகும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

ஒருவழியா வந்துடுச்சு! பட்ஜெட் விலையில் இப்படி ஒரு 43-இன்ச் 4K TV-க்கு பல பேர் வெயிட்டிங்!ஒருவழியா வந்துடுச்சு! பட்ஜெட் விலையில் இப்படி ஒரு 43-இன்ச் 4K TV-க்கு பல பேர் வெயிட்டிங்!

வேற யாரும் இல்ல.. நம்ம ஒன்பிளஸ் தான்!

வேற யாரும் இல்ல.. நம்ம ஒன்பிளஸ் தான்!

வெயிட்டிங்லயே வெறி ஏத்தும் அந்த ஸ்மார்ட்போன் - ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த பிளாக்ஷிப் மாடல் ஆன ஒன்பிளஸ் 11 5G ஆகும்.

இந்த ஸ்மார்ட்போனை அடுத்த ஆண்டு தொடக்கத்தில், அதாவது 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

வெறி ஏத்தும் அளவிற்கு இதில் அப்படி என்ன ஸ்பெஷல்?

வெறி ஏத்தும் அளவிற்கு இதில் அப்படி என்ன ஸ்பெஷல்?

டிப்ஸ்டர் Max Jambor வழியாக கிடைத்த தகவலின்படி, ஒன்பிளஸ் 11 ஆனது உண்மையில் ஒரு ப்ரோ மாடலாகும். ஆனால் அது ப்ரோ என்கிற பெயரின் கீழ் அறிமுகம் செய்யப்படலாம்; வெறுமனே ஒன்பிளஸ் 11 என்கிற பெயரில் அறிமுகம் செய்யப்படும்.

அதாவது இது நிறுவனத்தின் 2023 ஆம் ஆண்டிற்கான பிரீமியம் அம்சங்களை பேக் செய்யும் ஒரு மாடலாக இருக்கும் என்று அர்த்தம்; இதை விட வேறு என்ன ஸ்பெஷல் வேண்டும்!

இறங்கி அடிக்கும் சீன கம்பெனி.. வெறும் ரூ.6,999 க்கு இப்படி ஒரு Phone-ஆ!இறங்கி அடிக்கும் சீன கம்பெனி.. வெறும் ரூ.6,999 க்கு இப்படி ஒரு Phone-ஆ!

வெயிட்டு காட்டும் அம்சங்கள்!

வெயிட்டு காட்டும் அம்சங்கள்!

கிடைக்கப்பெற்ற லீக்ஸ் தகவலின்படி, ஒன்பிளஸ் 11 ஆனது 6.7 இன்ச் அளவிலான QHD+ AMOLED டிஸ்ப்ளேவை கொண்டிருக்கலாம். அதில் 16MP பஞ்ச்-ஹோல் கேமரா இடம்பெறலாம்.

இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் உடன் வரலாம் என்று எதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ் 11 ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் மூலம் இயக்கப்படலாம்.

அதே Hasselblad.. ஆனா வேற லெவல் கேமராக்கள்!

அதே Hasselblad.. ஆனா வேற லெவல் கேமராக்கள்!

ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் ஆனது - வழக்கம் போல - Hasselblad பிராண்டிங் கேமராக்களையே பேக் செய்யும் எதிர்பார்க்கப்படுகிறது.

சென்சார்களை பொறுத்தவரை, இது 50எம்பி மெயின் கேமரா + 48எம்பி அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் + 32எம்பி டெலிஃபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை வழங்கலாம்!

2023 வரை 5G போன் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை நிரூபிக்கும் 3 காரணங்கள்!2023 வரை 5G போன் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை நிரூபிக்கும் 3 காரணங்கள்!

பிச்சிக்கிட்டு பறக்கும் ஃபாஸ்ட் சார்ஜிங்!

பிச்சிக்கிட்டு பறக்கும் ஃபாஸ்ட் சார்ஜிங்!

ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த வரவிருக்கும் ஸ்மார்ட்போன் ஆனது 100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்-ஐ வழங்கும் என்றும் கூறப்படுகிறது. இது 5000mAh பேட்டரியை கொண்டிருக்கலாம்.

பெரும்பாலும் இது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ கொண்டே இயங்கும். ஸ்டோரேஜை பொறுத்தவரை, 16ஜிபி வரையிலான ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான இன்டெர்னல் ஸ்டோரேஜை வழங்கலாம் என்று கூறப்படுகிறது.

OnePlus 11 விலை நிர்ணயம் எப்படி இருக்கும்?

OnePlus 11 விலை நிர்ணயம் எப்படி இருக்கும்?

ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனின் அறிமுகமே இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பதால், அதன் எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயம் குறித்தும் எந்த தகவலும் இல்லை!

இருப்பினும், இதன் விலை ரூ.60,000 என்கிற பட்ஜெட்டை சுற்றியே இருக்கலாம்!

ரூ.30,000 பட்ஜெட்டில் புது iPhone.. அதுவும் 6.1-இன்ச் டிஸ்பிளேவுடன்!ரூ.30,000 பட்ஜெட்டில் புது iPhone.. அதுவும் 6.1-இன்ச் டிஸ்பிளேவுடன்!

இதெல்லாம் சரி.. OnePlus 11R எப்போது அறிமுகம் ஆகும்?

இதெல்லாம் சரி.. OnePlus 11R எப்போது அறிமுகம் ஆகும்?

ஒன்பிளஸ் 11 பற்றிய விவரங்களை அதே லீக்ஸ் வழியாக, ஒன்பிளஸ் 11டி மாடலை பற்றிய சில விவரங்களையும் அறிய முடிகிறது.

அதன்படி, ஒன்பிளஸ் 11டி மாடல் ஆனது 2023 ஆம் ஆண்டின் இறுதியில் தான் அறிமுகம் செய்யப்படும். அதற்கிடையில் OnePlus 11R அறிமுகம் செய்யப்படலாம்!

Photo Courtesy: Onleaks, Smartprix, OnePlus

Best Mobiles in India

English summary
2023 To Start With The Most Expected Flagship Smartphone Called OnePlus 11 5G

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X