Just In
- 11 hrs ago
கேப் விடாமல் தூள் கிளப்பும் ரெட்மி: மொத்த பேரின் கவனத்தையும் ஈர்க்கும் டர்போ ஸ்மார்ட்போன்!
- 13 hrs ago
பட்ஜெட் விலையில் 5G போனை களமிறக்கும் Samsung: என்னென்ன அம்சங்கள்?
- 1 day ago
இந்திய அரசு போட்ட புது உத்தரவு.! செய்யவே மாட்டோம்னு சொன்ன Jio, Airtel, Vi.! என்னாச்சு தெரியுமா?
- 1 day ago
பெரிய மனுஷன்பா! Google-ல் குற்றம் கண்டுபிடித்த 2 இந்தியர்கள்.. ரூ.18 லட்சத்தை அள்ளிக்கொடுத்த சுந்தர் பிச்சை!
Don't Miss
- News
அரசியல்வாதி போல செயல்படக்கூடாது..ஆளுநரை நீக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு வழங்கனும்-திருச்சி சிவா
- Finance
கிரெடிட் கார்டு வாங்க நினைக்கிறீங்களா.. இந்த 5 கட்டணங்களை பற்றி தெரிஞ்சுக்கோங்க!
- Movies
பிக் பாஸ் சீசன் 6 கிராண்ட் பினாலே...அசீம் ஹாஷ்டேக் டிரெண்டிங்...பரபரப்பாகும் பிக் பாஸ் களம்!
- Sports
யார் சிறந்த பேட்ஸ்மேன்? சச்சினா? விராட் கோலியா? கபில்தேவ் சொன்ன பளிச் பதில்
- Lifestyle
கேரளா ஸ்பெஷல் இறால் ரோஸ்ட்
- Automobiles
மாருதி கார் மட்டும்தான் மைலேஜ் தருமா? களத்தில் இறங்கிய டாடா! கூடவே பாதுகாப்பாகவும் இருக்க போகுது!
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
2023 ஆரம்பமே அமோகமா இருக்கே! இந்தியாவில் அடுத்த 10 நாட்களில் 7 புதிய போன்கள் அறிமுகம்.. இதோ லிஸ்ட்!
2023 ஜனவரி 2 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 10 தேதிக்குள், இந்தியாவில் மொத்தம் 7 புதிய ஸ்மார்ட்போன்கள் (New Smartphones) அறிமுகம் செய்யப்பட உள்ளன. அந்த 7 ஸ்மார்ட்போன்களில் ஐந்து மாடல்கள் 5ஜி-க்கான ஆதரவுடன் வருகிறது என்பது கூடுதல் தகவல்!
அதென்ன ஸ்மார்ட்போன்கள்? அவைகளில் எதெல்லாம் 5ஜி போன்கள்? இந்த ஸ்மார்ட்போன்களின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? இதோ விவரங்கள்:

01 - 03. Redmi Note 12 5G Series:
இந்தியாவில் வருகிற ஜனவரி 5 ஆம் தேதியன்று, ரெட்மி நோட் 12 சீரீஸின் கீழ் மொத்தம் 3 ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாக உள்ளன.
அவைகள் ரெட்மி நோட் 12, ரெட்மி நோட் 12 ப்ரோ, ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் ஆகும் மற்றும் இந்த மூன்று ஸ்மார்ட்போன்களுமே 5ஜி-க்கான ஆதரவை வழங்கும்.
எனவே நீங்களொரு புதிய 5ஜி போனை வாங்க திட்டமிட்டு இருந்தால், உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்றபடி வெண்ணிலா மாடலையோ அல்லது ப்ரோ மாடலையோ அல்லது ப்ரோ பிளஸ் மாடலையோ வாங்கி கொள்ளலாம்.

இந்த 3 மாடல்களுக்கும் இடையே என்ன மாதிரியான வித்தியாசங்கள் இருக்கும்?
வித்தியாசங்களை பொறுத்தவரை, ரெட்மி நோட் 12 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் அனைத்துமே 6.67-இன்ச் அளவிலான பஞ்ச்-ஹோல் OLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது.
ரெட்மி நோட் 12 ஆனது 48MP மெயின் கேமரா + 2MP சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. இதில் 8எம்பி செல்பீ கேமரா உள்ளது. மறுகையில் உள்ள ரெட்மி நோட் 12 ப்ரோ மாடல்கள் ஆனது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பைக் கொண்டுள்ளன.
மேலும் ரெட்மி நோட் 12 ஆனது ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 சிப்செட்டை பேக் செய்கிறது; அதே சமயம் ப்ரோ மாடல்களில் டைமன்சிட்டி 1080 SoC உள்ளது.

04. IQOO 11 5G
ஐக்யூ 11 ஸ்மார்ட்போன் ஆனது வருகிற ஜனவரி 10 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ஐக்யூ 11 சீரீஸின் வெண்ணிலா மாடல் மட்டுமே குறிப்பிட்ட தேதியில் அறிமுகமாகும். அதாவது ஐஃயோ 11 5ஜி ஸ்மார்ட்போன் மட்டுமே ஜனவரி 10 அன்று அறிமுகமாகும். இதே சீரிஸின் கீழ் உள்ள ஐக்யூ 11 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது இன்னொரு தேதியில் அறிமுகமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்யூ 11 5ஜி போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 6.78-இன்ச் E6 AMOLED டிஸ்ப்ளே
- 144Hz ரெஃப்ரெஷ் ரேட்
- 2K ரெசல்யூஷன்
- HDR10+ சப்போர்ட்
- LPDDR5x ரேம்
- UFS 4.0 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 SoC ப்ராசஸர்
- 8ஜிபி வரை விர்ச்சுவல் ரேம்
- ட்ரிபிள் ரியர் கேமராசெட்டப்
- 120W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு
- 5000mAh பேட்டரி

05. POCO C50
போக்கோ சி50 ஸ்மார்ட்போன் ஆனது ஜனவரி 3 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போக்கோ சி50 ஆனது - முன்னதாக அறிமுகமான - போக்கோ சி31 ஸ்மார்ட்போனின் "மேம்படுத்தப்பட்ட" வாரிசாக இருக்கலாம். நினைவூட்டும் வண்ணம், போக்கோ சி31 ஆனது இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் ஆகும். போக்கோ சி31 மாடலின் ஆரம்ப விலை ரூ.7,499 ஆகும்.
ஆக போக்கோ சி50 ஸ்மார்ட்போனும் கூட ஒரு பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஆனால் இது நிச்சயம் ஒரு 5ஜி போனாக இருக்காது. ஒருவேளை நீங்கள் தொடர்ந்து 4ஜி சேவைகளை மட்டுமே பயன்படுத்த விரும்புகிறீர்கள் என்றால், போக்கோ சி50 மாடலை கவனத்தில் கொள்ளலாம்!

போக்கோ சி50 மாடலில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
போக்கோவின் இந்த பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் ஆனது 6,000 mAh பேட்டரி மற்றும் ஆக்டா-கோர் ப்ராசஸரை உள்ளடக்கியிருக்கலாம்.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே மற்றும் பிளாஸ்டிக் பாடி உடன் வரவும் வாய்ப்புள்ளது. மேலும் இதன் டிஸ்ப்ளே HD+ ரெசல்யூஷனை வழங்கலாம். இது வழக்கம் போல பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் வழியாக விற்பனை செய்யப்படும்!

06. Samsung Galaxy F04
இது 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் முதல் வாரத்திலேயே அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அம்சங்களை பொறுத்தவரை, சாம்சங் நிறுவனத்தின் கேலக்சி F04 ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் டிஸ்பிளே, டூயல் ரியர் கேமரா செட்டப், 8ஜிபி வரை கூடுதல் ரேம்-ஐ வழங்கும் ரேம் பிளஸ் (RAM Plus) போன்ற அம்சங்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, இந்தியாவில் இதன் விலை சுமார் ரூ.8,000-ஐ சுற்றி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

07. Tecno Phantom X2 5G
இந்த ஸ்மார்ட்போனின் ப்ரீ-புக்கிங் ஆனது ஜனவரி 2 ஆம் தேதி முதல், அமேசான் வழியாக நடக்கும். இதன் விற்பனை ஜனவரி 9 ஆம் தேதி முதல் தொடங்கும்.
அம்சங்களை பொறுத்தவரை, இது MediaTek Dimensity 9000 ப்ராசஸர், 5160mAh பேட்டரி, 45W பாஸ்ட் அடாப்டர் சர்ஜிங்கிற்கான ஆதரவு, ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அடிப்படையிலான HiOS 12.0 ஓஎஸ், 64MP RGBW மெயின் கேமரா + 13MP சென்சார் + 2MP சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.
இதன் விலை நிர்ணயம் ரூ.59,000-ஐ சுற்றி எங்காவது ஒரு புள்ளியில் அமரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது!
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470