Home
Mobile

Samsung-இன் இந்த பெஸ்ட் பட்ஜெட் போன்.. இனிமேல் ரூ.9,514 மட்டுமே!

ரூ.10,000 க்குள் "அன்றாட தேவைகளை" பூர்த்தி செய்யும் ஒரு நல்ல பட்ஜெட் ஸ்மார்ட்போனை தேடிக்கொண்டு இருக்கிறீர்கள் என்றால்.. சமீபத்தில் விலைக்குறைப்பை பெற்றுள்ள ஒரு சாம்சங் ஏ சீரிஸ் (Samsung A-Series) மாடலை உங்களுக்கு பரிந்துரைக்கிறோம்!

அதென்ன மாடல்? இந்த திடீர் விலைக்குறைப்பிற்கு பின்னால் உள்ள காரணம் என்ன? அதன் பழைய மற்றும் புதிய விலை விவரங்கள் என்ன? நம்பி வாங்கலாமா? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

விலைக்குறைப்பை பெற்றுள்ள Samsung Phone?

விலைக்குறைப்பை பெற்றுள்ள Samsung Phone?

அது Samsung Galaxy A03 மாடல் ஆகும். இது இந்த 2022 ஆம் ஆண்டில் வெளியான சாம்சங் நிறுவனத்தின் முதல் கேலக்ஸி ஏ-சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆகும்.

தற்போது சாம்சங் கேலக்ஸி ஏ03 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.985 என்கிற விலைக்குறைப்பை பெற்றுள்ளது. சுவாரசியமாக இந்த விலை வீழ்ச்சியானது கேலக்ஸி ஏ03 ஸ்மார்ட்போனின் இரண்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் மீதும் கிடைக்கிறது.

Samsung Galaxy A03 புதிய விலை VS பழைய விலை!

Samsung Galaxy A03 புதிய விலை VS பழைய விலை!

கடந்த பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட Samsung Galaxy A03 ஆனது 3ஜிபி + 32ஜிபி மற்றும் 4ஜிபி + 64ஜிபி என்கிற 2 ஸ்டோரேஜ் வேரியண்ட்களின் கீழ் முறையே ரூ.10,499 மற்றும் ரூ.11,999 க்கு அறிமுகமானது.

தற்போது ரூ.985 என்கிற விலைக்குறைப்புக்கு பிறகு, 3ஜிபி ரேம் ஆப்ஷன் ஆனது ரூ.9,514 க்கும், மறுகையில் உள்ள 4ஜிபி ரேம் ஆப்ஷன் ஆனது ரூ.11,014 க்கும் வாங்க கிடைக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் ப்ளூ, பிளாக் மற்றும் ரெட் என்கிற 3 கலர் ஆப்ஷன்களின் கீழ் விற்பனை செய்யப்படுகிறது.

ஏன் இந்த திடீர் விலைக்குறைப்பு?

ஏன் இந்த திடீர் விலைக்குறைப்பு?

ஏனெனில், சாம்சங் நிறுவனத்தின் லேட்டஸ்ட் பட்ஜெட் ஸ்மார்ட்போனாகவும் A03 மாடலின் அப்கிரேடட் வெர்ஷன் ஆன Samsung Galaxy A04 அறிமுகமாகி விட்டது.

50MP கேமரா மற்றும் 5,000mAh பேட்டரி போன்ற அம்சங்களை பேக் செய்யும் சாம்சங் கேலக்ஸி ஏ04 ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை (ஆனால் கண்டிப்பாக வரும்), இதற்கிடையில் தான் கேலக்ஸி 03 மீதான Price Cut அறிவிக்கப்பட்டுள்ளது.

Samsung Galaxy A04 விலை என்ன?

Samsung Galaxy A04 விலை என்ன?

ஐரோப்பிய சந்தைகளில் Samsung Galaxy A04 ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது, இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.13,410 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் பிளாக், ஒயிட், காப்பர் மற்றும் க்ரீன் என்கிற 4 கலர் ஆப்ஷன்களின் கீழ் வாங்க கிடைக்கும் என்று சாம்சங் உறுதிப்படுத்தியுள்ளது.

Samsung Galaxy A03 வாங்கலாமா? Galaxy A04-க்கு காத்திருக்கலாமா?

Samsung Galaxy A03 வாங்கலாமா? Galaxy A04-க்கு காத்திருக்கலாமா?

இந்த 2 ஸ்மார்ட்போன்களில் எது பெஸ்ட்? விலைக்குறைக்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி ஏ03 மாடலை வாங்கலாமா? அல்லது வரப்போகும் கேலக்ஸி ஏ04 மாடலுக்காக காத்திருக்கலாமா?

இரண்டில் எதை வாங்குவது என்பதை பற்றி ஒரு முடிவுக்கு வரும் முன்னர், இந்த 2 ஸ்மார்ட்போன்களின் முக்கிய அம்சங்களை பற்றி பார்த்து விடலாம்!

சாம்சங் Galaxy A03 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:

சாம்சங் Galaxy A03 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:

- 6.5 இன்ச் எல்சிடி டிஸ்பிளே
- ஆக்டா-கோர் Unisoc SC9863A ப்ராசஸர்
- எஸ்டி கார்டு வழியாக 1TB வரை ஸ்டோரேஜ் விரிவாக்கம்
- டூயல் சிம் ஆதரவு
- Android 11 ஓஎஸ் அடிப்படையிலான One UI
- 48MP + 2MP என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்
- 5MP செல்பீ
- டால்பி அட்மோஸ் ஆதரவு
- 5,000mAh பேட்டரி

சாம்சங் Galaxy A04 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:

சாம்சங் Galaxy A04 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:

- 6.5-இன்ச் எல்சிடி HD+ டிஸ்பிளே
- 50எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப்
- 5 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அடிப்படையிலான ஒன் யுஐ கோர் 4.1
- ஆக்டா-கோர் Exynos 850 ப்ராசஸர் (போல் தெரிகிறது)
- 5,000mAh பேட்டரி
- டூயல் சிம் ஆதரவு

எதை வாங்கலாம்?

எதை வாங்கலாம்?

உங்களுக்கே புரிந்து இருக்கும். நாம் மேற்கண்ட 2 ஸ்மார்ட்போன்களுக்கும் பெரிய அளவிலான வித்தியாசம் எதுவும் இல்லை; ஆண்ட்ராய்டு ஓஎஸ்-ஐ தவிர்த்து!

ஒருவேளை உங்களுக்கு லேட்டஸ்ட் ஓஎஸ் பற்றி கவலை இல்ல என்றால்.. மற்றும் ரூ.3500 க்கும் மேலான பணத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்று நினைத்தால் - A03 மாடலை வாங்குங்கள். இல்லை என்றால் A04 மாடலை - காத்திருந்து - வாங்குங்கள்!

Best Mobiles in India

English summary
2022 Budget Smartphone Samsung Galaxy A03 get Price Cut After Galaxy A04 Official Launch Which is Best
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X