Home
Mobile

வாய் பிளக்க வைக்கும் Vivo போன்.. 200MP Tele கேமரா, 1TB ஸ்டோரேஜ், 5500mAh பேட்டரி.. என்ன மாடல்? என்ன விலை?

பொதுவாகவே விவோவின் எக்ஸ் சீரீஸ் ஸ்மார்ட்போன்களில் உள்ள கேமரா செட்டப் ஆனது "சும்மா தரமாக" இருக்கும். இதற்கிடையில் ஒரு குறையும் கண்டுபிடிக்க முடியாத அளவிலான "பக்காவான" கேமரா அம்சங்களுடன் விவோ எக்ஸ்100 அல்ட்ரா (Vivo X100 Ultra) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இன்று (மே 14) அறிமுகமான விவோவின் புதிய எக்ஸ்100 சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆனது 1-இன்ச் மெயின் கேமரா (1-inch main camera) மற்றும் சிஇபிஏ 4.5 ஸ்டெபிலைசேஷன் (CIPA 4.5 stabilization) கொண்ட 200 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ சென்சாரை (200-megapixel telephoto sensor) உள்ளடக்கிய ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட்டை கொண்டுள்ளது.

200MP Tele கேமரா, 1TB ஸ்டோரேஜ் உடன் புதிய Vivo போன்!

இந்த 1/1.4-இன்ச் ஐசோசெல் எச்பி9 சென்சார் ஆனது சாம்சங்குடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது, இது 20எக்ஸ் வரையிலான ஜூமிங் திறனை வழங்கும். இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் சிப்செட் (Snapdragon 8 Gen 3 SoC) கொண்டு இயங்குகிறது மற்றும் 5500mAh பேட்டரியை பேக் செய்கிறது.

இப்படியான சில முக்கிய மேம்பாடுகளை தவிர்த்து புதிய விவோ எக்ஸ்100 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது முன்னதாக அறிமுகமான விவோ எக்ஸ்100 ப்ரோ (Vivo X100 Pro) மாடலுடன் பல ஹார்ட்வேர் அம்சங்களை பகிர்ந்து கொள்கிறது. அதென்ன அம்சங்கள்? விவோ எக்ஸ்100 அல்ட்ராவின் விலை நிர்ணயம் என்ன? இதோ விவரங்கள்:

என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? டூயல் சிம் (நானோ) ஆதரவுடன் வரும் விவோ எக்ஸ்100 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது 1440 x 3200 பிக்சல்ஸ், 120ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், மற்றும் 3,000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.78-இன்ச் 2கே இ7 எல்டிபிஓ அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

முன்னரே குறிப்பிட்டபடி, இது ஆக்டா-கோர் 4 என்எம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் சிப்செட் உடன் வருகிறது. இது 16GB வரையிலான LPDDR5X ரேம் மற்றும் 1டிபி வரையிலான UFS 4.0 இன்டர்னல் ஸ்டோரேஜை பேக் செய்கிறது. கேமராக்களை பொறுத்தவரை, இது ஸெய்ஸ் (Zeiss) பிராண்டட் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது.

அதில் 1-இன்ச் சைஸ் 50-மெகாபிக்சல் சோனி LYT-900 சென்சார் (CIPA 4.5 லெவல் கிம்பல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன்) + 50-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா (2-இன்ச் அளவு சென்சார் மற்றும் 14மிமீ போக்கால் லெங்த்) + 200-மெகாபிக்சல் APO சூப்பர் டெலிஃபோட்டோ கேமரா (ISOCELL HP9 சென்சார் 1/1.4-இன்ச் பிக்சல் சைஸ், எப்/2.67 அபெர்க்ஷர், 85மிமீ போக்கால் லெங்த் மற்றும் CIPA 4.5 இமேஜ் ஸ்டேபிலைசேஷன்) உள்ளன.

இந்த ஸ்மார்ட்போனில் ப்ளூபிரிண்ட் இமேஜிங் சிப் V3+ சிப்பும் உள்ளது, இது 4கே மூவி போர்ட்ரெய்ட் வீடியோக்களை படமாக்கும் திறனை வழங்கும். செல்பிக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கான தேவைகளை, விவோ எக்ஸ்100 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் உள்ள 50 மெகாபிக்சல் செல்பீ கேமரா பார்த்துக்கொள்ளும். டிஸ்பிளேவில் உள்ள ஹோல் பஞ்ச் கட்அவுட்டில் உட்பொதிக்கப்பட்டுள்ள இந்த செல்பீ கேமராவானது 1எக்ஸ் மற்றும் 2எக்ஸ் ஜூமிங்கை வழங்குகிறது.

கவனிக்கப்பட வேண்டிய மற்ற முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இது 5ஜி, வைஃபை 7, ப்ளூடூத் 5.4, 3டி அல்ட்ராசோனிக் இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் சென்சார், ஸ்டீரியோ டூயல் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது. சுவாரசியமாக இது ஐபி69 மற்றும் ஐபி68 தூசி மற்றும் நீர் எதிர்ப்பு சோதனைகள் இரண்டிலும் தேர்ச்சி பெற்றதாக கூறப்படுகிறது. கடைசியாக இது 5500mAh பேட்டரியை பேக் செய்கிறது.

என்ன விலை? சீனாவில் விவோ எக்ஸ்100 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.74,500 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்ததாக உள்ள 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் தோராயமாக ரூ.84,000 க்கும் மற்றும் ஹை-எண்ட் 16ஜிபி ரேம் + 1டிபி ஆப்ஷன் சுமார் ரூ.92,000 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளாட்டி

இந்த 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களுமே (சீன மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டால்) பாய் யுகுவாங், ஸ்பேஸ் கிரே மற்றும் டைட்டானியம் என்கிற 3 கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வரும். இந்த ஸ்மார்ட்போன் விவோ சீனா இணையதளத்தில் ப்ரீ- ஆர்டர் சியா கிடைக்கிறது மற்றும் மே 28 முதல் விற்பனைக்கு வரவுள்ளது. விவோ எக்ஸ்100 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் குறித்து எந்த தகவலும் இல்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
200MP Zeiss Tele Camera 1TB Storage 5500mAh battery Vivo X100 ultra Launched Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X