Home
Mobile

போச்சு.. iPhoneகள் கதை முடிஞ்சு போச்சு! 200MP கேமரா, 100x ஜூம்.. Samsung-ன் புது போன்.. என்ன விலை? என்ன மாடல்?

ஆப்பிளின் லேட்டஸ்ட் மற்றும் பிரீமியம் மாடலான ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (iPhone 15 Pro Max) உட்பட ஒட்டுமொத்த ஐபோன்களிலும் உள்ள கேமராக்களை காலி செய்ய வேண்டும் என்று, சாம்சங் நிறுவனம் "தீர்க்கமான" முடிவொன்றை எடுத்து விட்டது போல் தெரிகிறது.

200எம்பி மெயின் கேமரா, 100எக்ஸ் ஜூமிங் திறன், பெரிஸ்கோப் லென்ஸ் என வியக்கத்தக்க சென்சார்கள் மற்றும் அம்சங்களுடன் "வேற லெவல்" கேமரா ஸ்மார்ட்போன் ஒன்றை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. அதென்ன மாடல்? அதன் விலை நிர்ணயம் என்ன? இதோ விவரங்கள்:

200MP கேமரா.. 100x ஜூம்.. Samsung-ன் புது போன்!

என்ன ஸ்மார்ட்போன்? நாம் இங்கே பேசுவது சாம்சங் கேலக்ஸி எஸ் 24 அல்ட்ரா (Samsung Galaxy S24 Ultra) ஸ்மார்ட்போனை பற்றித்தான். ஐபோன் 15 ப்ரோ மேக்ஸிற்கு சாம்சங்கின் பதிலடியாக அமையவுள்ள இந்த ஸ்மார்ட்போனின் பின்பக்கத்தில் என்னென்ன கேமராக்கள் இடம்பெறும் என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளன.

என்னென்ன கேமராக்கள்? கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, சாம்சங் கேலக்ஸி எஸ் 24 அல்ட்ராவில் குவாட் ரியர் கேமரா செட்டப் (Quad Rear Camera Setup) பேக் செய்யப்படும். அதில் 1/1.3″ சென்சார் அளவு (sensor size) மற்றும் 0.6μm பிக்சல் அளவு (pixel size) கொண்ட 200 மெகாபிக்சல் மெயின் கேமரா இடம்பெறும்.

இதனுடன் 1/2.55″ சென்சார் அளவு மற்றும் 1.4μm பிக்சல் அளவு கொண்ட IMX564 சென்சார் கொண்ட 12 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் கேமராவும் இருக்கும். கூடவே 1/3.52″ சென்சார் அளவு மற்றும் 1.12μm பிக்சல் அளவு கொண்ட மற்றும் IMX754+ சென்சார் கொண்ட 10 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமராவும் (3x ஆப்டிகல் ஜூம்) இடம்பெறும்.

கடைசியாக 1/2.25″ சென்சார் அளவு, 0.8μm பிக்சல் அளவு, GMU சென்சார் மற்றும் 5x ஆப்டிகல் ஜூம் கொண்ட 48 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ (Periscope Telephoto) கேமராவும் பேக் செய்யப்படும். 5x டெலிஃபோட்டோ கேமராவிற்கான அபெர்க்ஷர் தோராயமாக எஃப்/3.2 ஆக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருபக்கம் 5x ஆப்டிகல் ஜூம் இருக்கும்போதிலும் கூட, சாம்சங் கேலக்ஸி எஸ் 24 அல்ட்ராவானது வியக்கத்தக்க 100x ஜூமிங் திறனை(100x Zooming) வழங்கும் எதிர்பார்க்கப்படுகிறது. செல்பீ கேமராவை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ராவில் (Samsung Galaxy S23 Ultra) அறிமுகப்படுத்தப்பட்ட 12 மெகாபிக்சல் முன்பக்க கேமராவானது எஸ்24 அல்ட்ராவிலும் தக்கவைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன டிஸ்பிளே? சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ராவில் 1ஹெர்ட்ஸ் - 144ஹெர்ட்ஸ் டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட், 3200 x 1440 பிக்சல், 463ppi, M13 LTPO பேனல் உடனான 6.8-இன்ச் WQHD+ AMOLED டிஸ்பிளே இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓட்டுமொத்தமாக கேலக்ஸி எஸ்24 அல்ட்ராவானது மிகவும் மேம்படுத்தப்பட்ட நெக்ஸ்ட் ஜென் டிஸ்பிளேவை பேக் செய்யும் என்பது போல் தெரிகிறது.

எப்போது அறிமுகம்? கேலக்ஸி எஸ்24 அல்ட்ராவை உள்ளடக்கிய சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரிஸ் ஆனது 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நடக்கும் சாம்சங்கின் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இது 2024 பிப்ரவரியில் அறிமுகமாகலாம்.

என்ன விலை? சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ராவின் விலை நிர்ணயம் சரியாக எந்த புள்ளியில் அமையும் என்பதை இப்போதைக்கு எங்களால் உறுதியாக கூற முடியாது. இருப்பினும் இதன் விலை $ 1,199 மற்றும் $ 1,399 க்கு இடையில் எங்காவது தொடங்கும் என்று எதிர்பார்க்கலாம். அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி, இதன் விலை ரூ.1 லட்சம் முதல் ரூ. 1.16 லட்சம் வரை செல்லலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
200MP Quad Rear Camera Setup with 100x zoom Samsung Galaxy S24 Ultra New Leak
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X