Home
Mobile

200% வொர்த்தான Phone.. 200MP Periscope கேமரா, IP68 ரேட்டிங், 5400mAh பேட்டரி, 100W சார்ஜிங்.. என்ன மாடல்?

விவோ (Vivo) நிறுவனமானது ஒன்பிளஸின் லேட்டஸ்ட் மாடல்களை மட்டுமின்றி, ஆப்பிளின் ஐபோன்களுக்கே டஃப் கொடுக்கும் ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. எப்படி பார்த்தாலும் "வொர்த்" ஆன ஸ்மார்ட்போனாக இருக்கும் இந்த விவோ ஸ்மார்ட்போனின் மாடல் பெயர் என்ன? விலை என்ன? அம்சங்கள் என்ன? இதோ விவரங்கள்:

என்ன மாடல்? 200எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா, ஐபி68 டஸ்ட் மற்றும் வாட்டர் ப்ரூஃப் ரேட்டிங், 100W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் உட்பட பல முக்கிய அம்சங்களை பேக் செய்யும் என்று நாம் இங்கே கூறுவது விவோ எக்ஸ்100 ப்ரோ பிளஸ் (Vivo X100 Pro Plus) ஸ்மார்ட்போன் தான்!

200MP Periscope கேமராவுடன் வரும் புதிய Vivo போன்!

கேமரா செட்டப்பில் என்னென்ன சென்சார்கள் இடம்பெறும்? விவோ எக்ஸ்100 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 1/1.5-இன்ச் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸை (Persiscope Telephoto Lens) உள்ளடக்கிய 200எம்பி கேமராவை (200MP Camera) பேக் செய்யும் என்றும், இந்த லென்ஸ் 4.3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் (4.3x Optical Zoom) திறனை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது 10எக்ஸ் ஆப்டிகல் ஜூம் (10x Optical Zoom) கொண்ட 10எம்பி பெரிஸ்கோப் லென்ஸுக்கு சமமான இமேஜ் ரெசல்யூஷன்களை (Image Resolution) வழங்குகிறது. கூடுதலாக, விவோ எக்ஸ்100 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் கேமரா செட்டப் உடன் இணைந்து பயன்படுத்தப்படும் போது இது 200எக்ஸ் டிஜிட்டல் ஜூமிங்கை (200x Digital Zoom) வழங்கும் என்றும் ஊகிக்கப்படுகிறது.

200MP Periscope கேமராவுடன் வரும் புதிய Vivo போன்!

முன்னதாக விவோ எக்ஸ்100 ப்ரோ பிளஸ் மாடலில் 50எம்பி சோனி எல்ஒய்டி-900 மெயின் சென்சார் + சோனி ஐஎம்எக்ஸ்598 சென்சார் உடனான 50எம்பி அல்ட்ரா-வைட் கேமரா (Ultra-wide Camera) + சோனி ஐஎம்எக்ஸ்758 சென்சார் உடனான 50எம்பி போர்ட்ரெயிட் கேமரா (Protrait Camera) இடம்பெறும் என்று கூறப்பட்டது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

வேறு என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? விவோ எக்ஸ்100 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் குவால்காமின் (Qualcomm) லேட்டஸ்ட் ப்ராசஸர் ஆன ஸ்னாப்டிராகன் 8 ஜென் சிப்செட் (Snapdragon 8 Gen 3 SoC) மூலம் இயக்கப்படலாம். இது சக்திவாய்ந்த செயல்திறன் மற்றும் திறமையான மல்டிடாஸ்கிங்கை (Multitasking) வழங்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

200MP Periscope கேமராவுடன் வரும் புதிய Vivo போன்!

மேலும் இது 5,400mAh பேட்டரியை பேக் செய்யலாம். இது 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வரலாம். டிஸ்பிளேவை பொறுத்தவரை இதில் 6.78-இன்ச் சாம்சங் இ7 அமோஎல்இடி பேனலை கொண்டிருக்கலாம். இது 2கே ரெசல்யூஷன் மற்றும் மேம்பட்ட காட்சி அனுபவத்திற்காக 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உடன் வரலாம்.

சாஃப்ட்வேரை பொறுத்தவரை, விவோ எக்ஸ்100 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஒரிஜின்ஓஎஸ் 4-ஐ (OriginOS 4) கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக விவோ எக்ஸ்100 சீரஸ்ஸில் உள்ள மற்ற ஸ்மார்ட்போன்களை போலவே ப்ரோ பிளஸ் மாடலும் கூட தூசி மற்றும் ஸ்பிளாஷ் எதிர்ப்பிற்கான ஐபி68 ரேட்டிங்கை (IP68 Rating) பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எப்போது அறிமுகம்? என்ன விலை? ஏற்கனவே சீனாவில் அறிமுகமாகிவிட்ட விவோ எக்ஸ்100 (Vivo X100) மற்றும் விவோ எக்ஸ்100 ப்ரோ (Vivo X100 Pro) மாடல்கள் வருகிற ஜனவரி 4 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ளன. ஆகையால் விவோ எக்ஸ்100 ப்ரோ பிளஸ் மாடல் உடனடி வெளியீட்டை (Imminent Launch) காணாது.

இருப்பினும், இது 2024 ஆம் ஆண்டின் முதல் பதிக்குள் அறிமுகமாகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விவோ எக்ஸ்100 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் ரூ.77,990 முதல் ரூ.82,990 க்குள் எங்கவாது ஒரு புள்ளியாக இருக்கலாம். மேலதிக தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் அதை உடனுக்குடன் அப்டேட் செய்கிறோம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
200MP Periscope Camera in Vivo X100 Pro Plus Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X