செப்.21 வரை.. கண்ண மூடிக்கிட்டு காத்திருக்கலாம்.. 200MP கேமரா, 120W சார்ஜிங், 5120mAh பேட்டரி.. என்ன மாடல்?
வருகிற செப்டம்பர் 21 ஆம் தேதியன்று அறிமுகம் செய்யப்படவுள்ள ஒரு புதிய ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பார்க்கும் போது.. ஆஹா.. பேசாம வெயிட் பண்ணி இந்த போனையே வாங்கிடலாம் போலயே!" என்கிற எண்ணம் உங்களுக்குள் எழுந்தால்.. அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை!
ஏனென்றால் குறிப்பிட்ட நாளில் அறிமுகம் செய்யப்படப்போவது ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் 5ஜி (Redmi Note 13 Pro Plus 5G) ஸ்மார்ட்போனாகும். பலருக்கும் தெரியும் 'நோட் சீரீஸ்' என்பது ரெட்மி நிறுவனத்தின் மிகவும் 'ஃபேமஸ்' ஆன.. மற்றும் 'பெஸ்ட் செல்லிங்' ஸ்மார்ட்போன் சீரீஸ் ஆகும்.

இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் செப்.21ல் ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் மட்டுமல்ல, நோட் 13 சீரிஸின் கீழ் ரெட்மி நோட் 13 5ஜி (Redmi Note 13 5G) மற்றும் ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி (Redmi Note 13 Pro 5G) என மொத்தம் 3 மாடல்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.
நினைவூட்டும் வண்ணம் ரெட்மி நோட் 12 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் கடந்த அக்டோபர் 2022 இல் அறிமுகமானது. அந்த சீரீஸின் 'அப்கிரேட்டட் வெர்ஷன்'களாக மூன்று ரெட்மி நோட் 13 சீரீஸ் மாடல்கள் செப்டம்பர் 21 ஆம் தேதி (இந்திய நேரப்படி) மாலை 7 மணிக்கு சீனாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
சீன அறிமுகத்தை தொடர்ந்து, இது இந்தியாவிலும் அறிமுகமாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஏனென்றால் ரெட்மி நோட் 12 சீரீஸ் (Redmi Note 12 Series) ஸ்மார்ட்போன்கள் ஆனது சீனாவை தொடர்ந்து இந்திய சந்தையிலும் அறிமுகமானது. ஆக ரெட்மி நோட் 13 சீரிஸின் 3 மாடல்களுமே இந்தியாவிற்கும் வரும் என்பது உறுதி!
ரெட்மி நோட் 13 சீரிஸ் என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? ரெட்மி பகிர்ந்துள்ள போஸ்டரில் ப்ரோ பிளஸ் (Pro Plus) மற்றும் ப்ரோ (Pro) மாடல்களை பார்க்க முடிகிறது. ப்ரோ பிளஸ் மாடலில் கர்வ்டு எட்ஜ் டிஸ்பிளே (Curved Edge Display) உள்ளது; அதேசமயம் ப்ரோ மாடலில் பிளாட் டிஸ்பிளே (Flat Display) உள்ளது.
மேலும் இரண்டு மாடல்களுமே இன்-ஸ்கிரீன் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனருடன் (In-screen Finger Print Scanner) ஒருங்கிணைக்கப்பட்ட அமோஎல்இடி (AMOLED) டிஸ்பிளேவை கொண்டிருப்பது போல் தெரிகிறது. பின்பக்கத்தை பொறுத்தவரை, ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் ஆனது லெதர் பேக் (Leather Back) மற்றும் ப்ரோட்டிங் கேமரா ரிங்களை (Protruding camera rings) கொண்டுள்ளது.
அதே சமயம் ரெட்மி நோட் 13 ப்ரோ மாடலானது கிளாஸ் பேக் (Glass Back) உடன், சற்றே உயர்த்தப்பட்ட கேமரா ஐலேண்ட்டை (Camera island) கொண்டுள்ளது. இரண்டு மாடல்களிலுமே 200 மெகாபிக்சல் மெயின் கேமரா (200MP Main Camera) இடம்பெறும். இருப்பினும் முக்கிய வேறுபாடாக ப்ரோ பிளஸ் மாடலில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷனுக்கான (Optical image stabilization) ஆதரவு இருக்கும் என்பது போல் தெரிகிறது.
ப்ராசஸரை பொறுத்தவரை, ப்ரோ பிளஸ் மாடலில் டைமன்சிட்டி 7200 அல்ட்ரா சிப்செட் (Dimensity 7200 Ultra chipset) பேக் செய்யப்படும் என்பது அதிகாரப்பூர்வமாகவே உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இது 120W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5120mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மறுகையில் உள்ள ரெட்மி நோட் 13 ப்ரோவில் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 சிப்செட் (Snapdragon 7 Gen 1 chipset) மற்றும் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடனான 5,000எம்ஏஎச் பேட்டரி இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ப்ரோ மற்றும் ப்ரோ பிளஸ் மாடல்களுடன் வெண்ணிலா வேரியண்ட் ஆன ரெட்மி நோட் 13 5ஜி ஸ்மார்ட்போனும் அறிமுகமாகும். இருப்பினும் இந்த மாடல் பற்றிய எந்த விவரங்களையும் ரெட்மி இன்னும் உறுதிப்படுத்தவில்லை.


Click it and Unblock the Notifications








