Home
Mobile

சும்மா மிரட்டுதே! 200MP கேமரா, 120W சார்ஜிங், IP68 ரேட்டிங்! மிட்-ரேன்ஜ் விலையில் இப்படி ஒரு Redmi 5G Phone-ஆ!

200MP மெயின் கேமரா, 120W ஃபாஸ்ட் சார்ஜிங், IP68 ரேட்டிங் போன்ற முக்கிய அம்சங்களுடன் இந்திய மொபைல் மார்க்கெட்டை ஒரு ரெட்மி ஸ்மார்ட்போன் மிரளவிடப்போகிறது. ஏனென்றால் அதன் விலை நிர்ணயம் அப்படி! அதென்ன மாடல்? அது வேறு என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:

என்ன மாடல்? நாம் இங்கே பேசுவது ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் (Redmi Note 13 Pro Plus) ஸ்மார்ட்போனை பற்றித்தான். இது வருகிற 2024 ஜனவரி 4 ஆம் தேதியன்று (மற்ற ரெட்மி நோட் 13 சீரீஸ் ஸ்மார்ட்போன்களுடன் சேர்த்து) இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

மிட்-ரேன்ஜ் விலையில் இப்படி ஒரு Redmi 5G Phone-ஆ!

ரெட்மி நோட் 13 சீரீஸின் கீழ் என்னென்ன மாடல்கள் அறிமுகமாகும்? ஸ்டாண்டர்ட் வேரியண்ட் ஆன ரெட்மி நோட் 13 5ஜி, ப்ரோ வேரியண்ட் ஆன ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி மற்றும் ப்ரோ பிளஸ் வேரியண்ட் ஆன ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் 5ஜி என மொத்தம் மாடல்கள் அறிமுகமாகும்.

ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? பழைய நோட் சீரிஸ் மாடல்களுடன் ஒப்பிடும் போது, ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் மாடலானது முற்றிலும் வேறுபட்ட வடிவமைப்பை (Updated Design) பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பேக் பேனலில் லெதர் ஃபினிஷை (Leather Finish) காண முடிகிறது. இது நல்ல பிடிமானத்தை வழங்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

மிட்-ரேன்ஜ் விலையில் இப்படி ஒரு Redmi 5G Phone-ஆ!

மேலும் கேமரா மாட்யூல் (Camera Module) எதுவும் இல்லாமல் கேமரா சென்சார்கள் நேரடியாக பேக் பேனலில் இணைக்கப்பட்டுள்ளன. மிகவும் முக்கியமாக இந்த ஸ்மார்ட்போன் ஐபி68 வாட்டர் ரெசிஸ்டென்ட் மதிப்பீட்டிற்கான ஆதரவுடன் (IP68 Water Resistant Rating Support) வருகிறது. அதாவது இது அதிகபட்சமாக 1.5 மீட்டர் ஆழத்தில் 30 நிமிடங்கள் வரை தண்ணீரை தாக்குப்பிடிக்கும்!

ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 7200 அல்ட்ரா சிப்செட் (MediaTek Dimensity 7200 Ultra SoC) மூலம் இயக்கப்படுவதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இது 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) உடனான 6.67-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டிருக்கும்.

மிட்-ரேன்ஜ் விலையில் இப்படி ஒரு Redmi 5G Phone-ஆ!

கேமராக்களை பொறுத்தவரை ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் (Triple Rear Camera Setup) இடம்பெறும். அதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) உடனான 200 மெகாபிக்சல் சாம்சங் ஐசோசெல் எச்பி3 சென்சார் (Optical image stabilization) + 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் சென்சார் + 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் பேக் செய்யப்படும்.

ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா இடம்பெறும். கடைசியாக இது 120W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு (Fast Charging Support ) உடன் 5000mAh பேட்டரியை பேக் செய்யும். இதே வேகத்தை ஆதரிக்கும் சார்ஜரும் ரீடெயில் பாக்ஸில் (Retail Box) சேர்க்கப்படும்.

இந்தியாவில் ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் என்ன விலைக்கு அறிமுகமாகும்? சீன சந்தையில் இது, இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.22,800 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்ற விலையை இந்தியாவில் எதிர்பார்ப்பது தவறு; மாறாக இது ரூ.30,000 க்குள் அறிமுகமாகும் என்று எதிர்பார்ப்பது நல்லது.

ப்ரோ பிளஸ் வேரியண்ட் உடன் அறிமுகமாகும் ரெட்மி நோட் 13 5ஜி (Redmi Note 13 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.15,000 க்குள் என்கிற பட்ஜெட்டிலும், ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி (Redmi Note 13 Pro 5G) ஸ்மார்ட்போன் ஆனது தோராயமாக ரூ.18,000 க்குள் என்கிற பட்ஜெட்டிலும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
200MP Camera 120W Charging IP68 Rating Under Rs 30000 Redmi Note 13 Pro Plus India Launch Jan 4
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X