உஷார்- 2000 "சியோமி" போலி பொருட்கள் பறிமுதல்: உண்மையை கண்டறிவது எப்படி?

|

சியோமி பொருள்களின் சிறப்பம்சங்களுக்கும், சலுகைகளுக்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. இதையடுத்து இந்தியாவின் எலக்ட்ரானிக் பொருள்களின் விற்பனை சந்தையில் சியோமிக்கு முக்கிய பங்கு உண்டு.

குறுகிய காலத்தில் மகத்தான வெற்றி

குறுகிய காலத்தில் மகத்தான வெற்றி

சியோமி ஒரு குறுகிய காலத்தில் மகத்தான வெற்றியை அடைய முடிந்தது. இன்று, பயனர்கள் அதிக செயல்திறன் கொண்ட, மலிவு சாதனங்களைப் பயன்படுத்த வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் சியோமி நிறுவனத்தின் ஒரு மகத்தான செயல் என்னவென்றால். சியோமி சீனா தயாரிப்பு நிறுவனம் ஆகும். சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் தரமற்றவை என்ற சொல்லை சியோமி அகற்றியது.

முதல் ஸ்மார்ட் போனில் சந்தையை பிடித்த சியோமி

முதல் ஸ்மார்ட் போனில் சந்தையை பிடித்த சியோமி

சியோமி நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன்கள் உலகளாவிய சந்தையில் கடும் போட்டியாக மாறியது. இந்த ஸ்மார்ட் போன் ஒரு இளம் நிறுவனத்தின் தனிச்சிறப்பாக மாறியது, ஆப்பிள் மற்றும் சாம்சங் போன்ற மாபெரும் நிறுவனங்களின் கவனங்களும் சியோமி நிறுவனத்தின் பக்கம் திரும்பியது.

அட ஜிமெயிலில் இப்படி ஒரு வசதி இருக்கா? இத்தனை நாட்கள் இது தெரியாம போச்சேஅட ஜிமெயிலில் இப்படி ஒரு வசதி இருக்கா? இத்தனை நாட்கள் இது தெரியாம போச்சே

சீன தயாரிப்பு என்ற வார்த்தை முறியடித்த சியோமி

சீன தயாரிப்பு என்ற வார்த்தை முறியடித்த சியோமி

சீன ஸ்மார்ட்போன் பிராண்ட் சியோமி நிறுவனம் மொபைல் போன்கள் மட்டுமின்றி மொபைல் பாகங்கள் மற்றும் கேஜெட்களையும் அறிமுகம் செய்தது. ஆனால் இதுபோன்ற பொருட்களை வாங்கும் போது மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளது.

2,000-க்கும் மேற்பட்ட போலி பறிமுதல்

2,000-க்கும் மேற்பட்ட போலி பறிமுதல்

நவம்பர் மாதம் சியோமி டெல்லி போலீசில் புகார் அளித்ததோடு, காஃபர் சந்தை பகுதியில் சோதனைகள் நடத்தப்பட்டன. நான்கு கடைகளில் 2,000 க்கும் மேற்பட்ட போலி சியோமி தயாரிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் உரிமையாளர்கள் பின்னர் கைது செய்யப்பட்டனர்.

சியோமி கேஜட்டுகள் வாங்க உள்ளீர்களா

சியோமி கேஜட்டுகள் வாங்க உள்ளீர்களா

பிராண்ட் மற்றும் கூட்டாளர் விற்பனை நிலையங்களின் அங்கீகரிக்கப்பட்ட கடைகளிலிருந்து அங்கீகரிக்கப்பட்ட தயாரிப்புகளை மட்டுமே வாங்க வேண்டும் என்று சியோமி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. சியோமி கேஜெட்களையும் வாங்க திட்டமிட்டுள்ளீர்கள் என்றால், நிறுவனத்தின் ஆலோசனையின் படி நீங்கள் சரிபார்க்க வேண்டிய விஷயங்களை பார்க்கலாம்.

பாதுகாப்பு குறியீட்டை சரிபார்க்கவும்

பாதுகாப்பு குறியீட்டை சரிபார்க்கவும்

மி பவர் வங்கிகள் போன்ற சில சியோமி தயாரிப்புகள் பாதுகாப்புக் குறியீடுகளைக் கொண்டுள்ளன, அவை தயாரிப்பின் நம்பகத்தன்மையை அடையாளம் காண mi.com இல் சரிபார்க்கலாம். பார் கோட் வகை குறியீடு ஸ்கேன் செய்து பார்க்கலாம். ஏனென்றால் முதலில் பவர்பேங்கில் தான் அதிக போலி தயாரிப்புகள் வருகிறது என சந்தைகள் தெரிவிக்கிறது.

பேக்கேஜிங் தரத்தை சரி பார்க்கவும்

பேக்கேஜிங் தரத்தை சரி பார்க்கவும்

பொருட்களின் அட்டைப்பெட்டியில் உள்ள பேக்கேஜிங் மற்றும் தரம் மிகவும் வேறுபட்டவையாக இருக்கும். போலி பொருட்களுக்கு பேக்கேஜிங் நுண்ணிப்பாக இருக்காது. சியோமி பொருட்களை வாங்கும்போது மி ஹோம் அல்லது மி ஸ்டோரில் மட்டுமே வாங்கலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

காற்றின் வேகத்தில் பயணிப்போமா?- அடுத்தக்கட்டத்திற்கு தயாராகும் இந்தியாகாற்றின் வேகத்தில் பயணிப்போமா?- அடுத்தக்கட்டத்திற்கு தயாராகும் இந்தியா

அசல் MI லோகோவை சரிபார்க்கவும்

அசல் MI லோகோவை சரிபார்க்கவும்

தயாரிப்பில் அசல் MI லோகோவை சரிபார்க்கவும், அது அங்கீகரிக்கப்பட்டதா என்பதை அறியுமாறு சியோமி வாங்குபவர்களுக்கு பரிந்துரைக்கிறது. அதேபோல் பேக்கேஜிங்கின் அசல் லோகோவை mi.com இல் காணலாம்.

Best Mobiles in India

English summary
2000 Xiaomi Fake products seized- how to find a original

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X