ப்பா என்னா காம்பினேஷன்.. 200MP டெலி கேமரா, 7000mAh பேட்டரி, 120W சார்ஜிங்.. Realme புது போன்!
2025 இல் போதுமான அளவிலான பட்ஜெட் மற்றும் மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து விட்ட ரியல்மி நிறுவனமானது, ஒன்பிளஸ் மற்றும் ஐக்யூ ஆகிய நிறுவனங்களின் பிளாக்ஷிப் போன்களுக்கே "டஃப் கொடுக்கும்" ஒரு புதிய ஸ்மார்ட்போனை இம்மாதம் அறிமுகம் செய்ய உள்ளது
அது ரியல்மி ஜிடி 8 ப்ரோ (Realme GT 8 Pro) ஸ்மார்ட்போனாகும். இந்த ஸ்மார்ட்போன்களின் சில முக்கிய அம்சங்கள் (இன்டர்சேஞ்சபிள் ரியர் கேமரா யூனிட், ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட், 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 2கே 10-பிட் LTPO BOE பிளாட் OLED டிஸ்பிளே) ஏற்கனவே உறுதிசெய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையில் இந்த ஸ்மார்ட்போனின் ஓஎஸ் (ஆப்ரேட்டிங் சிஸ்டம்) மற்றும் டெலிபோட்டோ கேமரா குறித்த விவரங்களை ரியல்மி நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார். அதன்படி ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் 200 மெகாபிக்சல் 1/1.56-இன்ச் சாம்சங் எச்பி5 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ ஷூட்டர் பொருத்தப்பட்டிருக்கும் என்று ரியல்மி துணைத்தலைவர் சூ குய் சேஸ் (Xu Qi Chase) தெரிவித்துள்ளார்.
மீதமுள்ள கேமராக்களை பற்றி அவர் பேசவில்லை. ஆனாலும் ரியல்மி ஜிடி 8 ப்ரோவில் உள்ள டிரிபிள் ரியர் கேமரா செட்டப்பில் 50-மெகாபிக்சல் 1/1.4-இன்ச் சோனி LYT-808 ப்ரைமரி (ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன்) மற்றும் 50-மெகாபிக்சல் அல்ட்ராவைடு லென்ஸ் ஆகியவைகள் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதோடு ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது சிறந்த ஹாப்டிக்ஸ் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஸ்பீக்கர்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பாதுகாப்பிற்காக, இது இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார் உடன் வரலாம். தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி69 ரேட்டிங்கையும் கொண்டிருக்கலாம்.
கடைசியாக இந்த ஸ்மார்ட்போன் 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் பெரிய 7,000mAh பேட்டரியை கொண்டிருக்கலாம். முன்னரே குறிப்பிட்டப்படி இது ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்படும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதே சிப்செட் தான் ஒன்பிளஸ் 15 (OnePlus 15) மற்றும் ஐக்யூ 15 (iQOO 15) ஆகிய மாடல்களிலும் இடம்பெறவுள்ளது. இதன் விளைவாகவே ஒன்பிளஸ் 15 முன்கூட்டியே அறிமுகம் செய்யப்பட உள்ளது.
முன்னதாக ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ஆனது 2025 டிசம்பர் மாத வாக்கில் சீனாவிலும், 2026 ஜனவரி வாக்கில் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்போது - 2025 டிசம்பர் வாக்கில் இந்தியாவில் உள்ளவர்கள் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனை வாங்கி வைத்து இருப்பார்கள் என்கிற சூழ்நிலை உருவாகியுள்ளது. அதாவது இது நம்வம்பரிலேயே இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம்.
சமீபத்தில் டிப்ஸ்டர் பால்ட் பாண்டா (Tipster Bald Panda) வழியாக ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் பேட்டரி அளவு மற்றும் சார்ஜிங் ஸ்பீட் பற்றிய தகவல்கள் ஆன்லைனில் லீக் ஆகியிருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. அதன்படி ஒன்பிளஸ் 15 ஆனது மிகப்பெரிய 7300mAh பேட்டரியை கொண்டிருக்கும். இது ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களில் இதுவரை கண்டிராத மிகப்பெரிய பேட்டரி ஆகும்.
மேலும் இந்த பேட்டரி 120W வயர்டு பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடனும் வரும் என்றும் டிப்ஸ்டர் பால்ட் பாண்டா வெளிப்படுத்தியுள்ளார். டிஸ்பிளேவை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 6.78-இன்ச் டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இது ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் காணப்படும் 6.82-இன்ச் டிஸ்பிளேவை விட சற்று சிறியதாகும். விலையை பொறுத்தவரை ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.65,000 - ரூ.75,000 என்கிற விலை வரம்பில்அறிமுகம் செய்யப்படலாம்.


Click it and Unblock the Notifications








