Home
Mobile

சோனமுத்தா.. மொத்த மார்க்கெட்டையும் முடிச்சு விட்டான்.. 7000mAh பேட்டரி உடன் புதிய Realme போன்!

விவோ (Vivo) மற்றும் ஹானர் (Honor) ஆகிய நிறுவனங்களுக்கு கடும் போட்டி அளிக்கும் வண்ணம் ரியல்மி (Realme) நிறுவனமும் 200 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவை (200 Megapixel Periscope Camera) உள்ளடக்கிய புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளதை உறுதிபடுத்தி உள்ளது.

அது ரியல்மி ஜிடி 8 ப்ரோ (Realme GT 8 Pro) ஸ்மார்ட்போன் ஆகும். அடுத்த மாதம் (நவம்பர் 2025) அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே மற்றும் கேமரா பற்றிய முக்கிய விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தப்பட்டு உள்ளது.

7000mAh பேட்டரி உடன் புதிய Realme போன்!

ரியல்மியின் கூற்றுப்படி ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 2கே ரெசல்யூஷன் கொண்ட பிளாட் டிஸ்பிளேவுடன் அறிமுகமாகும். இது முன்னதாக நமக்கு கிடைத்த லீக்ஸ் தகவல்களை உறுதிப்படுத்துகிறது. கேமராவை பொறுத்தவரை ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இடம்பெறும்; அதில் 200 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ சென்சார் இடம்பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

200 எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ சென்சார் உறுதி செய்யப்பட்டு இருப்பதன் மூலம், ரியல்மி நிறுவனம் சீனாவை தளமாக கொண்ட பிற நிறுவனங்கள் ஆன ஹானர் மற்றும் விவோ உடன் இணையும். இவைகள் 200 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ சென்சார்களை வரவிருக்கும் ஹானர் மேஜிக் 8 சீரிஸ் (Honor Magic 8 Series) மற்றும் விவோ எக்ஸ்300 சீரிஸ் (Vivo X300 Series) ஸ்மார்ட்போன்களில் பேக் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 7000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- 6.78 இன்ச் பிளாட் டிஸ்பிளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- 7000mAh பேட்டரி

முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி ஜிடி 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120 ஹெர்ட்ஸ் வரை ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு
- டால்பி விஷன் மற்றும் எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு
- 6.78 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோஎல்இடி டிஸ்பிளே

- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- 16ஜிபி வரை எல்பிடிடிஆர்5எக்ஸ் ரேம்
- 512ஜிபி வரையிலான யுஎப்எஸ் 4.0 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான ரியல்மி யுஐ 6.0 ஓஎஸ்

- 50 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்906 ப்ரைமரி சென்சார்
- 50 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்882 டெலிஃபோட்டோ ஷூட்டர்
- 8 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்355 அல்ட்ரா-வைட் கேமரா
- 16 மெகாபிக்சல் செல்பீ சென்சார்

- 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 5800எம்ஏஎச் பேட்டரி
- இன் டிஸ்பிளே அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக ஐபி69 ரேட்டிங்
- அளவீட்டில் 162.45 x 76.89 x 8.55 மிமீ
- எடையில் சுமார் 222 கிராம்

இந்தியாவில் அண்டர் வாட்டர் கேமரா மோட் (Under Water Camera Mode) உடன் அறிமுகம் செய்யப்பட்ட முதல் ஸ்மார்ட்போன் ஆன ரியல்மி ஜிடி 7 ப்ரோ ஸ்மார்ட்போன் தற்போது ரூ.17,000 வரையிலான டிஸ்கவுண்ட் விலையில் வாங்க கிடைக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இது அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் 2025 விற்பனையின் ஒரு பகுதியாக கிடைக்கும் ஆபர் ஆகும்.

Best Mobiles in India

English summary
200 Megapixel Periscope Camera 2K Display Confirmed in Realme GT 8 Pro
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X