Home
Mobile

நோக்கியா என்-9 vs சோனி எரிக்ஸன் எக்ஸ்பீரியா ப்ளே ஒப்பீடு

By Super
நோக்கியா என்-9 vs சோனி எரிக்ஸன் எக்ஸ்பீரியா ப்ளே ஒப்பீடு
மொபைல்போன் மார்க்கெட்டில் நோக்கியாவும், சோனி எரிக்ஸனும் முன்னணியில் இருப்பதற்கு, மொபைல்போன் தயாரிப்பில் அவர்களுக்கு இருக்கும் நிபுணத்துவம் மற்றும் அதைப்பற்றிய முழுமையான அறிவும், அனுபவமும் முக்கிய காரணங்கள்.

எல்ஜி,சாம்சங், என பல முன்னணி நிறுவனங்கள் மல்லுக்கட்டினாலும், மேற்கண்ட காரணங்கள் மார்க்கெட்டில் இரண்டு நிறுவனங்களின் மார்க்கெட்டையும் அசைக்க முடியவில்லை.

நோக்கியா, சோனி எரிக்ஸனின் ஸமார்ட்போன்களுக்கு சந்தையில் இருக்கும் வரவேற்பை பார்த்தாலே இதுபுரியும். எனவே,மக்களின் முதல் தேர்வாக இருக்கும் இரு நிறுவனங்களின் உயர்வகை ஸ்மார்ட்போன்கள் பற்றிய சிறப்பு பார்வை.

இன்று நாம் நோக்கியா என்-9 மற்றும் சோனி எரிக்ஸன் எக்ஸ்பீரியா ப்ளே போன்களின் சிற்பபம்சங்களை கொண்டு ஒப்பீடு செய்து பார்க்கலாம்.

இரண்டும் ஸ்லைடருடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. நோக்கியா என்-9 மீகோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. சோனி எரிக்ஸன் எக்ஸ்பீரியா ப்ளே ஆன்ட்ராய்டு ஜிஞ்சர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது.

இரண்டு போன்களும் அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களையும் கொண்டுள்ளன. மியூசிக், வீடியோ பி்ளேயர், எப்எம் ரேடியோ மற்றும் 3.5மிமீ விட்டம் கொண்ட யுனிவர்சல் ஆடியோ ஜாக் ஆகியவை பொதுவான அம்சங்கள்.

நோக்கியா என்-9 போன் 8 மெகாபிக்செல் கேமராவையும், எக்ஸ்பீரியா ப்ளே 5 மெகாபிக்செல் கேமராவையும் கொண்டிருக்கின்றன.வீடியோ காலிங் செய்வதற்கு வசதியாக இரண்டிலும் விஜிஏ முகப்பு கேமரா உள்ளது.

இணைப்பு வசதிகளை பொறுத்தவரையில் புளூடூத், வைஃபை, அதிவேக 3ஜி இன்டர்நெட் ஆகியவை பொதுவான அம்சங்கள். 21 எம்பிபிஎஸ் வேகத்தில் தகவல் பரிமாற்ற வசதியையும் கொடுக்கின்றன. இரண்டு போன்களிலும் அனைத்து அம்சங்களும் ஏறக்குறைய ஒரே மாதிரியான அம்சங்களே இருக்கின்றன.

விலையை வைத்து ஒப்பிட்டு பார்க்கும்போது சோனி எரிக்ஸன் எக்ஸ்பீரியா ப்ளே சிறந்ததாக இருக்கிறது. சோனி எரிக்ஸன் எக்ஸ்பீரியா ப்ளே ரூ.28,000 விலையிலும், நோக்கியா என்-9 ரூ.32,000 விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X