Home
Mobile

விஸ்வரூப விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 50MP கேமரா.. 44W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) 3டி கர்வ்ட் டிஸ்பிளே, 50 எம்பி மெயின் கேமரா, 44W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கொண்ட ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் கொடுக்கும் விவோ ஒய்300 பிளஸ் 5ஜி (Vivo Y300 Plus 5G) போன் பட்டையை கிளப்பும் டிஸ்கவுண்ட்டில் கிடைக்கிறது. இந்த விவோ ஒய்300 பிளஸ் 5ஜி மாடலுக்கு கிடைக்கும் டிஸ்கவுண்ட் மற்றும் பீச்சரகளின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

விவோ ஒய்300 பிளஸ் 5ஜி அம்சங்கள் (Vivo Y300 Plus 5G Specifications): இந்த விவோ போனானது பிரீமியம் டிசைனில் சில்க் பிளாக் (Silk Black) மற்றும் சில்க் கிரீன் (Silk Green) ஆகிய கலர்களில் கிடைக்கிறது. IP54 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்கிறது. ஃபன்டச் ஓஎஸ் 14 (Funtouch OS 14) பேஸ்டு ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கிடைக்கிறது.

விஸ்வரூப விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 50MP கேமரா.. 44W சார்ஜிங்!

இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப பட்டையை கிளப்பும் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 6என்எம் (Qualcomm Snapdragon 695 6nm) சிப்செட் வருகிறது. இந்த விவோ போனில் 8 ஜிபி ரேம் + 8 ஜிபி டைனாமிக் ரேம் கிடைக்கிறது. ஆகவே, 16 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலை கஸ்டமர்கள் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

இந்த விவோவில் 6.78 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே (3D Curved AMOLED Display) கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. ஆகவே, டிஸ்பிளேவில் பட்ஜெட்டுக்கு ஏற்ப பக்கா பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கலாம். 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா வருகிறது.

இந்த டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) ஆனது போர்ட்ராய்டு பீச்சர்களை கொடுக்கிறது. ஆகவே, நைட் மோட், போர்ட்ராய்டு மோட், டபுள் எக்ஸ்போசர் மற்றும் மைக்ரோ மூவி போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. இந்த விவோ ஒய்300 பிளஸ் 5ஜி போனானது 32 எம்பி செல்பீ ஷூட்டர் பேக் செய்துள்ளது. டூயல் வியூ வீடியோ சப்போர்ட் வருகிறது.

பேட்டரி சிஸ்டம் பக்காவாகவே இருக்கிறது. ஏனென்றால், 3டி கர்வ்ட் டிஸ்பிளே போன்களில் பேக்கப் கம்மியாகவே கிடைக்கும். ஆனால், இந்த விவோ போனில் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கிடைக்கிறது. டைப்-சி சார்ஜிங் போர்ட் கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு ஸ்மார்ட் சார்ஜிங் என்ஜின் 2.0 (Smart Charging Engine 2.0) கிடைக்கிறது.

இதன் மூலம் நைட் சார்ஜிங், ஹீட் கன்ட்ரோல் போன்றவற்றை செய்து கொள்ளலாம். இதுவொரு 5ஜி கனெக்டிவிட்டி மாடலாகும். ஆகவே, டூயல் 5ஜி சிம் சிலாட் கிடைக்கிறது. ஸ்மார்ட் பீச்சர்களாக வெட் டச் கன்ட்ரோல் (Wet Touch Control), ஸ்மால் விண்டோ (Small Window), ஏஓடி ஸ்டைல் (AOD Style) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன.

இந்த விவோ போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.23,999ஆக இருக்கிறது. இந்த விலையில் பிளிப்கார்ட் தளத்தில் ரூ.1000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த டிஸ்கவுண்ட் எச்டிஎப்சி மற்றும் ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டுகளுக்கு கிடைக்கிறது. ஆகவே, இந்த விவோ ஒய்300 பிளஸ் போனை ரூ.22,999 பட்ஜெட்டில் வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
20 Percent Discount on Vivo Y300 Plus 5G With 50MP Camera in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X