Home
Mobile

ஆர்டருக்கு மேல ஆர்டர்.. பட்ஜெட்ல SONY கேமரா.. 3D டிஸ்பிளே.. 4600mAh பேட்டரி.. அல்ட்ரா ஸ்லிம்.. எந்த மாடல்?

ஒட்டுமொத்த 3D கர்வ்ட் டிஸ்பிளே பிரியர்களையும் தட்டித்தூக்கும் விதமாக பிளிப்கார்ட் (Flipkart) விற்பனையில் விவோ வி27 ப்ரோ (Vivo V27 Pro) போனுக்கு பட்டையை கிளப்பும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. சோனி கேமரா, அமோலெட் டிஸ்பிளே, 66W சார்ஜிங் போன்ற அம்சங்களில் பின்னியெடுக்கிறது.

விவோ வி27 ப்ரோ அம்சங்கள் (Vivo V27 Pro Specifications): இந்த ப்ரோ போனில் ஃபன்டச் ஓஎஸ் 13 (Funtouch OS 13) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8200 4என்எம் (Octa Core MediaTek Dimensity 8200 4nm) சிப்செட் வருகிறது. அதோடு மாலி ஜி610 எம்சி6 ஜிபியு (Mali-G610 MC6 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டிருக்கிறது.

பட்ஜெட்ல SONY கேமரா.. 3D டிஸ்பிளே.. அல்ட்ரா ஸ்லிம்.. எந்த மாடல்?

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) சப்போர்ட் வருகிறது. இந்த விவோ வி27 ப்ரோ போனில் மூன்று வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகியவை வருகின்றன.

மைக்ரோஎஸ்டி (microSD) சப்போர்ட் வரவில்லை. ஆகவே, டூயல் நனோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) மட்டுமே இடம் பெற்றுள்ளது. இந்த போனில் 3டி கர்வ்ட் டிஸ்பிளே (3D Curved Display) வருகிறது. இதுவொரு 120Hz 6.78 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டி (FHD) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவாகும்.

இந்த டிஸ்பிளேவில் எச்டிஆர்10 பிளஸ் (HDR10+) சப்போர்ட் வருகிறது. இந்த விவோவில் ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமராவானது, சோனி ஐஎம்எக்ஸ்66வி (Sony IMX766V) சென்சாருடன் கொடுக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்ல SONY கேமரா.. 3D டிஸ்பிளே.. அல்ட்ரா ஸ்லிம்.. எந்த மாடல்?

அதோடு 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. இந்த கேமராவில் நைட், போர்ட்ராய்டு, டூயல் வியூ, விலாக் மூவி, லைவ்-போட்டோ, பனோரமா, சூப்பர்-மேக்ரோ போன்ற மோட்கள் வருகின்றன. ஆரா (Aura) லைட் இடம் பெற்றுள்ளது. அதோடு வெட்டிங் ஸ்டைல் போர்ட்ராய்டு (Wedding Style Portrait) பீச்சர் வருகிறது.

அதேபோல 50 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இதுவொரு ஆட்டோபோகஸ் (Autofocus) கேமராவாகும். இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வருகிறது. ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன. டைப்-சி ஆடியோ (Type-C Audio) கொண்டிருக்கிறது.

இந்த விவோ வி27 ப்ரோ போனில் 66W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4600mAh பேட்டரி வருகிறது. அல்ட்ரா ஸ்லிம் டிசைனில் 7.4 மிமீ தடிமன் கொண்டிருக்கிறது. அதோடு 182 கிராம் எடை வருகிறது. மேஜிக் ப்ளூ (Magic Blue) மற்றும் நோபல் பிளாக் (Noble Black) ஆகிய 2 கலர்களின் விற்பனைக்கு கிடைக்கிறது.

பட்ஜெட்ல SONY கேமரா.. 3D டிஸ்பிளே.. அல்ட்ரா ஸ்லிம்.. எந்த மாடல்?

இந்த போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.39,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்பின் ரூ.36,299ஆக குறைந்து விற்பனையானது. இப்போது, இந்த விலையிலும் பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் மிரட்டலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. ரூ.1,815 உடனடி தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.

இந்த தள்ளுபடியானது, மேஜிக் ப்ளூ வேரியண்ட்டுக்கு வழங்கப்படுகிறது. இதற்கு ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு (Axis Bank Credit Card) பயன்படுத்தி ஆர்டர் செய்ய வேண்டும். இந்த தள்ளுபடி காரணமாக வெறும் ரூ.34,484 விலையில் இந்த விவோ வி27 ப்ரோ போனை வாங்கி கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
20 Percent Discount on Vivo V27 Pro With Sony Camera in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X