Home
Mobile

இதுக்கு மேல குறைக்க முடியாது.. 108MP கேமரா.. 33W சார்ஜிங்.. ஆஃபரில் TECNO 5ஜி போன்.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் டெக்னோ ஸ்பார்க் 20 ப்ரோ 5ஜி (TECNO Spark 20 Pro 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. 108எம்பி கேமரா, 5000mAh பேட்டரி, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல சிற்பபான அம்சங்களுடன் இந்த புதிய போன் வெளிவந்துள்ளது. இப்போது டெக்னோ ஸ்பார்க் 20 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

தற்போது அமேசான் தளத்தில் டெக்னோ ஸ்பார்க் 20 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனக்கு 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.15,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்த இந்த போனை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.13999 விலையில் வாங்கிவிட முடியும்.

இதுக்கு மேல குறைக்க முடியாது.. 108MP கேமரா.. ஆஃபரில் TECNO  5ஜி போன்!

டெக்னோ ஸ்பார்க் 20 ப்ரோ 5ஜி அம்சங்கள் (TECNO Spark 20 Pro 5G Specifications): 6.78 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்டிபிஎஸ் (LTPS) டிஸ்பிளே உடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.குறிப்பாக இது பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே மாடலாகும். 120Hz ரெஃப்ரெஷ் ரேட், டைனாமிக் போர்ட் (Dynamic Port)பீச்சர் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.

108 எம்பி அல்ட்ரா சென்சிங் மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா + ஏஐ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் 3X லாஸ்லெஸ் ஜூமிங் (Lossless Zooming) மற்றும் 10X டிஜிட்டல் ஜூமிங் (Digital Zooming) போன்ற பல அம்சங்கள் இந்த கேமராவில் உள்ளன.

அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். ஆண்ட்ராய்டு 14 (Android 14 OS) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும்.

சக்திவாய்ந்த ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6080 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6080 6nm) சிப்செட் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். மேலும் மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.

8ஜிபி ரேம் மற்றும 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த டெக்னோ ஸ்பார்க் 20 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் 1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

இதுக்கு மேல குறைக்க முடியாது.. 108MP கேமரா.. ஆஃபரில் TECNO  5ஜி போன்!

டால்பி அட்மோஸ் சப்போர்ட் கொண்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இந்த போனில் உள்ளது. எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும். IP53 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொண்டுள்ளது இந்த போன். ஸ்டார்டெயில் பிளாக் (Startrail Black) மற்றும் குளோசி ஒயிட் (Glossy White)) ஆகிய நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

5000mAh பேட்டரி வசதியை கொண்டுள்ளது டெக்னோ ஸ்பார்க் 20 ப்ரோ 5ஜி. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. சில நிமிடங்களில் இந்த போனை சார்ஜ் செய்துவிட முடியும். குறிப்பான அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
20 Percent Discount on TECNO SPARK 20 PRO 5G With 108MP camera in Amazon Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X