வெளுத்து கட்டுது விற்பனை.. வெறும் ரூ.9999 போதும்.. SONY கேமரா.. 16GB ரேம்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
அமேசான் விற்பனையில் (Amazon Sale) நம்ப முடியாதபடி ரூ.2000 டிஸ்கவுண்ட் போக சோனி சென்சார் கேமரா, டைனாமிக் போர்ட் டிஸ்பிளே, 16 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்களை கொண்ட டெக்னோ பாப் 9 5ஜி (TECNO POP 9 5G) போன் ஆர்டருக்கு வந்துள்ளது.
ரியல்மி, ரெட்மி, ஐடெல் போன்ற நிறுவனங்களுக்கு நிகரான பக்கா பீச்சர்களுடன் பட்ஜெட் போன்களை களமிறக்கி வரும் டெக்னோ நிறுவனம், கேமரா மற்றும் பிரீமியம் டிசைன் பிரியர்களை தட்டித் தூக்கும்படி டெக்னோ பாப் 9 5ஜி போனை இந்திய மார்கெட்டுக்கு கொண்டுவந்தது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடலின் விலை ரூ.11,999ஆக இருக்கிறது.

டெக்னோ பாப் 9 5ஜி அமேசான் விற்பனை (TECNO POP 9 5G Amazon Sale): 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலுக்கு அமேசான் விற்பனையில் ரூ.2000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த டிஸ்கவுண்ட் பெற பெடரல் பேங்க் டெபிட் கார்டு பயன்படுத்த வேண்டும். அதேபோல பேங்க் ஆப் பரோடா கிரெடிட் கார்டுக்கு ரூ,1,750 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.
பெடரல் பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ,1,750 டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. மேலும், எச்எஸ்பிசி கிரெடிட் கார்டு மூலம் ஈஎம்ஐ ஆப்ஷனில் ஆர்டர் செய்தால் ரூ.2000 டிஸ்கவுண்ட் கிடைக்கும். ஆகவே, அதிகபட்ச டிஸ்கவுண்ட் போக வெறும் ரூ.9999 விலைக்கு இந்த டெக்னோ பாப் 9 5ஜி போனை இப்போது ஆர்டர் செய்து கொள்ளலாம்.
இந்த பட்ஜெட்டில் என்னென்ன பீச்சர்களை இந்த டெக்னோ போன் பேக் செய்துள்ளது? ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு ஹைய்ஓஎஸ் 14 (HiOS 14) கொண்டிருக்கிறது. ஆக்டா கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (Octa Core 6nm MediaTek Dimensity 6300) சிப்செட் மற்றும் பட்ஜெட் அவுட்புட் கொடுக்கும் ஆர்ம் மாலி கிராபிக்ஸ் வருகிறது.
இந்த டெக்னோ பாப் 9 5ஜி போனில் டைனாமிக் போர்ட் (Dynamic Port) பீச்சர் மற்றும் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொண்ட 6.6 இன்ச் (1612 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த பட்ஜெட் டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. சோனி ஐஎம்எக்ஸ்582 (Sony IMX582) சென்சாருடன் 48 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது.
ஏஐ செகண்டரி லென்ஸ் கொண்ட டூயல் ரியர் சிஸ்டம் (Dual Rear System) கிடைக்கிறது. இந்த பாப் 9 5ஜி போனில் 8 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. 8 ஜிபி ரேம் மட்டுமல்லாமல், 8 ஜிபிக்கான டைனாமிக் ரேம் (Dynamic RAM) மற்றும் 1 டிபி மெமரிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சிலாட் கிடைக்கிறது. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடலும் உள்ளது.
18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கும் 5000mAh பேட்டரி சிஸ்டம் இருக்கிறது. இந்த பேட்டரியுடன் 8 எம்எம் தடிமன் வருகிறது. அதேபோல 189 கிராம் எடை உள்ளது. IP54 டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant), சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளன.


Click it and Unblock the Notifications








